Published:Updated:

காங்கிரசுடன் கூட்டணி வைப்பவர்கள் அழிந்து போவார்கள்: பொன் ராதாகிருஷ்ணன்

திருவட்டாறு: "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பவர்கள் அழிந்து போவார்கள்" என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் காட்டமாக கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் ம.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க சேர வாய்ப்புள்ளதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

##~~##
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது என்று அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.
மேலும், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழினத்துக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.