Published:Updated:

ராகுல் முன் மோடியோ, கெஜ்ரிவாலோ ஒன்றுமே இல்லை: சொல்கிறார் லாலு

ராகுல் முன் மோடியோ, கெஜ்ரிவாலோ ஒன்றுமே இல்லை: சொல்கிறார் லாலு
ராகுல் முன் மோடியோ, கெஜ்ரிவாலோ ஒன்றுமே இல்லை: சொல்கிறார் லாலு
ராகுல் முன் மோடியோ, கெஜ்ரிவாலோ ஒன்றுமே இல்லை: சொல்கிறார் லாலு

புதுடெல்லி: ராகுல் காந்தி முன் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியோ, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலோ ஒன்றுமே இல்லை என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேச மாநிலம், முசாபர் நகர் சென்ற லாலு, நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

##~~##
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, மோடி மற்றும் கெஜ்ரிவாலை ஊடகங்கள் தான் மிகைப்படுத்துகின்றன. ராகுலுக்கு இணை ராகுல்தான்.
ஆம் ஆத்மி கட்சியை தேர்ந்தெடுத்தன் மூலம் பெரும் தவறு செய்து விட்டோம் என்பதை டெல்லி மக்கள் ஒரு மாதத்தில் உணர்வார்கள்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளுக்கு மக்கள் சரியான பதில அடி கொடுப்பர்கள்" என்றார்.