Published:Updated:

மிஸ்டர் கழுகு: கிரானைட் குவாரிகள் உருளும் மந்திரிகள்!

மிஸ்டர் கழுகு: கிரானைட் குவாரிகள் உருளும் மந்திரிகள்!

மிஸ்டர் கழுகு: கிரானைட் குவாரிகள் உருளும் மந்திரிகள்!

மிஸ்டர் கழுகு: கிரானைட் குவாரிகள் உருளும் மந்திரிகள்!

Published:Updated:
##~##

ழுகார் உள்ளே நுழையும்போதே, வாசலில் சாக்லேட். சுதந்திர தின ஸ்பெஷல் சுவையுடன்  வந்தார்! 

''சுதந்திர தினத்தன்று கோட்டையில் காலை 8 மணிக்கு கொடியேற்றுவதுதான் வழக்கம். இந்த வழக்கம், இந்தச் சுதந்திர தினத்தில் மாறிப்போனது. 7.30 முதல் 9 மணி வரை எமகண்டம் என்பதால் 9 மணிக்கு மேல்தான் நிகழ்ச்சியே நடந்தது. காவல் துறையினரின் அணிவகுப்பைப் பார்வையிடுவதற்காக திறந்த ஜீப்பில் ஜெயலலிதா போனபோது ஜீப்புக்கு முன்பு, பெரிய கண்ணாடியை ஏனோ பொருத்தி இருந்தார்கள். புரோட்டோகால் படி கவர்னருக்கு அடுத்த இடத்தில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிதான் இருப்பாராம். ஆனால், ஜெயலலிதா தனது உரையில் சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுக்கு அடுத்தபடியாகத்தான் தலைமை நீதிபதியின் பெயரை உச்சரித்தார்'' என்று கழுகாரின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் கழுகு: கிரானைட் குவாரிகள் உருளும் மந்திரிகள்!

''சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் கவர்னர் அளிக்கும் தேனீர் விருந்தும் மாலையில் நடப்பதுதான் நடைமுறை. இதை திடீரென்று காலையிலேயே மாற்றிவிட்டதும் பலருக்கும் ஆச்சர்யம். இதற்கும் நல்ல நேரம்தான் காரணம் என்கிறார்கள். காலையில் தேனீர் விருந்து நிகழ்ச்சி மாற்றப்பட்ட செய்தியைக் கேட்டு அமைச்சர்கள் பலருக்கும் பி.பி. எகிறியது. கவர்னர் மாளி கைக்குப் போகும்போது கல்தா பட்டியலையும் கொடுத்துவிடப் போகிறார் என்று பயந்தார்கள் பலர். அதனால்தானோ என்னவோ நிறைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் ஆஜர் ஆகி இருந்தார்கள். பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல்வரைப் பார்த்து முகத்தைக் காட்ட வந்தார்களா எனத் தெரியவில்லை.''

''அமைச்சரவை மாற்றத்துக்கான பட்டியல் தயாராகி விட்டதா?''

''முழுமையான மாற்றங்களைவிட கிரானைட் அதிர்ச்சிகள் பலரது பதவி யைப் பறிக்கலாம் என்று சொல்லப் படுகிறது. ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரை கிரானைட் அதிபர்கள் தயக்கம் இல்லாமல் பயன்படுத்தி வந்ததை நான் உமக்குச் சொன்னேன். அதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்ட புகைப்படம், கோட்டை முதல் ஆண்டிபட்டி வரை அதிகமாகவே எதிரொலித்தது!''

மிஸ்டர் கழுகு: கிரானைட் குவாரிகள் உருளும் மந்திரிகள்!

''சிலர் தேனி வட்டாரத்தில் கடைகடையாகப் புகுந்து ஜூ.வி-யை மொத்தமாக வாங்கிச் சென்றார்களாம்!''

''பெட்டிக்கடைகளில் பறிக்கலாம். ஆனால், பெரிய இடத்துக்குச் செல்லும் பிரதிகளைத் தடுக்க முடியுமா என்ன? அது இருக்கட்டும்!

இதற்கு முன் எப்படி இருந்தது என்பதைவிட கடந்த ஓர் ஆண்டில் என்ன நடந்தது என்பதைத்தான் உன்னிப்பாகக் கவனிக்கப்போகிறாராம் முதல் வர். அவரது பெயரையே சிலர் தவறாகப் பயன் படுத்தி ஆதாயம் அடைந்திருப்பதாகத் தகவல். 'சகாயம், மதுரை கலெக்டராக இருந்து மாறுவதற்கு முன்னதாகத்தான் இந்த விஷயங்களை வெளிச் சத்துக்குக் கொண்டுவந்தார் என்பதே பொய். இந்த ஆட்சி வந்ததுமே கிரானைட் அதிபர்கள் தங்களது செல்வாக்கை அதிகப்படுத்திவிட்ட தகவல் மேலிடத்துக்கு வந்துவிட்டது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்த வேலுமணி, இந்த முறைகேடு சம்பந்தமாக மெதுவாக மூக்கை நுழைத்து உண்மைகளைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தார். உமக்கு ஞாபகம் இருக்கிறதா... மு.க.அழகிரியும் அமைச்சர் வேலுமணியும் எதிர் எதிர் சவால்களை விட்டுக்கொண்டார்களே?''

''ஆமாம்... ஆமாம்!''

''வேலுமணி அப்போது மேலூர் பகுதிக்குச் சென்று, குவாரிகளைப் பார்வையிட்டதாகப் புகைப்படங்களும் வெளிவந்தன. 'இந்தப் பகுதியில் எடுக்கப்படும் கிரானைட் கல்லில் 10 சதவிகிதத்தை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, பாக்கி 90 சதவிகிதத்தை மறைத்துள்ளனர். இது அதிகாரப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அதிகாரிகளும் கண்களை மூடிக்கொண்டு இருந்தி ருக்கிறார்கள்’ என்று பகிரங்கமாகப் பேட்டி கொடுத்த வேலுமணி, துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் குறித்து அதிகமாய்க் குற்றம் சாட்டினார். 'எனக்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதை அம்மாவிடம் சமர்ப்பிப்போம்’ என்று மதுரையில் இருந்து திரும்பினார். ஆனால், சென்னைக்கு வந்த வேலுமணிக்கு இங்கே இருந்த உயர் அதிகாரிகளே ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அதனால் அவரால்

மிஸ்டர் கழுகு: கிரானைட் குவாரிகள் உருளும் மந்திரிகள்!

செயல்பட முடியவில்லை என்றும் சொல்லப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களில் வேலுமணி பதவியும் பறிபோனது. 'இந்த விவ காரத்தில் இருந்து முதல்வர் விசாரணையைத் தொடங்கினால், முழுஉண்மையை அடையலாம்’ என்கிறார்கள் கோட்டையில்!''

''ம்!''

''சகாயம் மதுரை கலெக்டராக இருந்தபோது கிரானைட் அதிபர் ஒருவர் அவரைச் சந்திக்க வந்தார். பேசிவிட்டு வெளியே வந்தவர், அங்கே இருந்த ஊழியர் ஒருவரிடம், 'சகாயம், இன்னும் சில நாட்கள்தான் இங்கே இருப் பார். இந்த இடத்துக்கு அன்சுல் மிஸ்ரா வரப்போகிறார்’ என்று சொல்லி இருக்கிறார். 'இந்தச் சம்பவம் நடந்தது ஏப்ரல் 19-ம் தேதி’ என்கிறார்கள். சகாயம், மதுரையில் இருந்து மாற்றப்பட்டு அன்சுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டது மே 23-ம் தேதி. 'சகாயத்தை மாற்றுவேன் என்று ஒருவர் சொல்லலாம். ஆனால், அன்சுல் மிஸ்ராதான் வரப் போகிறார் என்று சொல்லும் அளவுக்கு அந்த கிரானைட் அதிபருக்குச் செல்வாக்கு இருந்தது என்றால், கோளாறு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை முதல்வர் உன் னிப்பாகக் கவனிக்க வேண் டும்’ என்கிறார்கள்.''

''ஜாக்கிரதையாக விசா ரணை நடத்த வேண்டியது முதல்வர்தான்!''

''நடவடிக்கை எடுப்போம் என்று பேட்டி கொடுத்த அமைச்சர் வேலுமணி, பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த விஷயமே அமுக்கப்பட்டது. அடுத்து இந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டியவருக்கும் கிரானைட் அதிபருக்கும் நெருக்கம் ஏற்படுத்துவது மாதிரியான காரியங்களை தென்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்  செய்துள்ளார். மேலூர் வட்டாரத்தில் தொடர்ந்து பொறுப்பில் இருக்கும் ஒரு அ.தி.மு.க. பிரமுகரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார். இந்த லிங்க் அனைத்தையும் கண்டுபிடித்து கட் செய்வதற்குள் முதல்வரே கிறுகிறுத்து விடுவார். மேலும், கிரானைட் முறைகேடுகளைத் தடுப்பது சம்பந்தமான முதல்வர் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது பற்றி கடந்த முறை சொன்னேன். அதில் இருந்த அதிகாரியைப் பற்றி, 'அவரை வைத்துக்கொண்டா கிரானைட் பற்றிப் பேசுவது?’ என்று கோட்டையில் சலித்துக்கொள்கிறார்கள்!''

''ஏனாம்?''

''அந்த லிங்க்குகளின் முக்கியமான இழைகளில் அவரும் ஒருவராம். 'கடந்த தி.மு.க. ஆட்சியில் கிரானைட் பிசினஸ் எப்படிச் சிக்கல் இல்லாமல் நடந்ததோ, அதேமாதிரித்தான் இந்த முறையும் நடக்கிறது. கிரானைட் அதிபர்களில் ஒருவர் முந்தைய ஆட்சியின் முதல்வருக்கு அருகில் இருந்த அதிகாரிக்கு சம்பந்தி. ஆட்சிகள் மாறினாலும் அதிகாரிகளது லிங்க் கெட்டியானது அல்லவா? அதை உடைப்பதும் சிரமம் அல்லவா? எனவேதான் இந்த ஆட்சியிலும் அது தொடர்ந்துள்ளது. கலெக்டர்கள், வி.ஏ.ஓ-க்கள், லோக்கல் ரெவின்யூ அதிகாரிகளைவிட கோட்டையில் உள்ள கிரானைட் சுரங்கத்தை உடைத்தால்தான், முதல்வர் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்பது பொது வானவர்கள் கருத்து!'' என்ற கழுகார், அடுத்துச் சொன்னதும் கோட்டை மேட்டர்தான்!

''சுதந்திர தினத்தன்று ஆறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதில், உயர் கல்வித் துறைக்கு சிறப்புச் செயலாளர் என்ற பதவியில் நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவராக இருந்த பி.டபுள்யு.சி.டேவிதார் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்தத் துறையில் ஏற்கெனவே செயலாளராக ஸ்ரீதர் இருந்துவரும் நிலையில் சிறப்புச் செயலாளரை நியமிக்கக் காரணம் என்ன என்று பட்டிமன்றமே நடந்துவருகிறது. ஸ்ரீதர் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்து வருகிறார். தலைமைச் செயலாளராக இருக்கும் சாரங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறப்போகிறார். அந்த இடத்திற்கு ஸ்ரீதர் பெயர் அடிபடுகிறது. அந்த அளவுக்கு அந்தஸ்து உள்ள ஸ்ரீதரை மட்டம் தட்டுவதுமாதிரி இந்த நியமனம் நடந்துள்ளது என்கிறார்கள்.''

''தலைமைச் செயலாளர் சாரங்கிக்கு நீட்டிப்பு கிடைக்குமா?''

''முதல்வரின் நம்பிக்கையைப் பெற்றவர் என்பதால் இப்படிக் கேட்கிறீர்! நீட்டிப்பு கிடைப்பது சந்தேகம்தான் என்கிறார்கள். ஆனால், சாரங்கியின் நோக்கம், மின்சார ஒழுங்குமுறை ஆணையகத் தலைவர் பதவியாம்.

அது கிடைத்தால், ஐந்து ஆண்டுகள் அவருக்கு நிம்மதி. இதை அவரே முதல்வரிடம் கேட்டதாகவும், அவர் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால்தான் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி நெடுநாளாகக் காலியாகவே வைத்துள்ளாராம்.''

''ஓஹோ!''

''ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவருக்கு இப்போதைய அதிகாரிகள் கொடுத்த குடைச்சலைச் சொல்கிறேன். பூரண திறமைகள்கொண்ட நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர் அவர். ஓய்வு பெற்ற பிறகு தனியார் நிறுவனம் ஒன்றின் ஆலோசகராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். அவருக்கும் இன்று ஆதிக்கம் செலுத்தும் அதிகாரிகளுக்கும் பிடிக்காது. அதனால், 'அவரை எதற்கு இயக்குனராக வைத்துள்ளீர்கள்?’ என்று கேட்டு, அதிகாரத்தால் நெருக்கடி கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்களாம். 'அரசின் பங்குகள் உங்கள் நிறு வனத்தில் உள்ளது. எங்கள் பேச்சை ஒழுங்காகக் கேளுங்கள்’ என்பது வரை மிரட்டல் போனதாம். 'இந்த ரெண்டு பேரும் ஒழுங்காக தங்களது வேலைகளைப் பார்த்திருந்தாலே, மதுரையில் இவ்வளவு பெரிய மேட்டர் நடந்திருக்காது. தேவை இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தி சொந்தத் துறையில் கோட்டைவிட்டு இருக்கிறார்கள்’ என்று உண்மையான அதிகாரிகள் பொருமுகிறார்கள்'' என்று சொல்லிப் பறந்தார் கழுகார்!

மிஸ்டர் கழுகு: கிரானைட் குவாரிகள் உருளும் மந்திரிகள்!

படங்கள்: சு.குமரேசன், வீ.நாகமணி

 தி.மு.க-வுக்கு உடன்பாடு இல்லையா?

ஈரோடு மாவட்டச் செயலாளர் என்.கே.கே.பி.ராஜாவும், தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் வி.பி.ராஜனும் ஈரோட்டில் நடைபெற்ற  கூட்டத்தில், 'பிரபாகரன்... கொலைகாரன்’ என்று பேசியதைக் கட்டுரையாக்கி இருந்தோம். ராஜாவின் பேச்சை கருணாநிதி ஆதரிக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பி இருந்தோம். இதை அடுத்து, 'ஜூனியர் விகடனில் வெளியான கருத்துகளுடன் தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு உடன்பாடு இல்லை’ என்று தி.மு.க. அறிவித்து உள்ளது. சர்ச்சைக்கு உரிய பேச்சு குறித்து  விளக்கம் கேட்டு இருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கிறதாம்.

மிஸ்டர் கழுகு: கிரானைட் குவாரிகள் உருளும் மந்திரிகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism