Published:Updated:

`3 ஆண்டுகளில் 230 அரசியல் படுகொலைகள்' - ஜார்க்கண்ட்டில் 49, மே.வங்கத்தில் 27... தமிழகத்தில்?

அரசியல் படுகொலைகள்
அரசியல் படுகொலைகள்

இந்தியாவில், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் 230 `அரசியல்' படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்டவை எத்தனை?!

இந்தியாவில், 2017 முதல் 2019 வரை அரசியல் காரணங்களுக்காக 230 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில், எழுத்து வடிவில் `அரசியல் படுகொலைகள்' பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சர் நித்யானந்த் ராய், ``மத்திய குற்ற ஆவண அறிக்கையின்படி, 2017-2019 காலகட்டத்தில், இந்தியாவில் 230 அரசியல் படுகொலைகள் நடந்திருக்கின்றன. 2017-ல் 72 பேரும், 2018-ல் 59 பேரும், 2019-ல் 99 பேரும் அரசியல் பிரச்னைகளுக்காகக் கொல்லப்பட்டிருக்கின்றனர்'' என்றார்.

 நித்யானந்த் ராய்
நித்யானந்த் ராய்
twitter
முதியவர்களுக்கு கொரோனா மட்டும் ஆபத்தல்ல... NCRB டேட்டா சொல்வது என்ன?

மத்திய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் ஆண்டுதோறும் மாநிலம்வாரியாக, அரசியல் காரணங்களுக்காக எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது கொடுக்கப்படும். ஆனால், அரசுத் தரப்பிலிருந்து, அமைச்சர் ஒருவர் அரசியல் படுகொலைகள் பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிடுவது இதுவே முதன்முறை எனச் சொல்லப்படுகிறது.

2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளில், அதிகபட்சமாக ஜார்க்கண்டில் 49 பேர் அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் 27 பேரும், பீகாரில் 26 பேரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

2017-2019 காலகட்டத்தில் கர்நாடகாவில் 19 கொலைகளும், கேரளாவில் 13 கொலைகளும் அரசியல் காரணங்களுக்காக நடந்திருக்கின்றன. அதே காலகட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆறு அரசியல் படுகொலைகள் மட்டுமே நடந்திருப்பதாகச் சொல்கிறது மத்திய குற்ற ஆவண அறிக்கை.

கொலை
கொலை
Representational image
22 முறை கேப் ஓட்டுநரை அறைந்த பெண்... இரண்டு நாள்களாக டிரெண்டாகும் #ArrestLucknowGirl - என்ன பிரச்னை?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் தலா மூன்று பேர் அரசியல் காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும், 2018-ம் ஆண்டு ஒருவர்கூட கொல்லப்படவில்லை என்றும் மத்திய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை சொல்கிறது!
அடுத்த கட்டுரைக்கு