Published:Updated:

கனிமொழி ஜாமீன் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு

புதுடெல்லி, ஜூன்10,2011

கனிமொழி ஜாமீன் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்தனர். ##~~##

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கனிமொழி, சரத்குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாக மூத்த வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம் தெரிவித்தார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 8-ம் தேதி இருவருக்கும் ஜாமீன் மறுத்தது.

இருவருக்கும் அரசியல் ரீதியாக வலுவான தொடர்புகள் உள்ளதால், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை தங்கள் வழிக்கு கொண்டு வந்துவிடுவதற்கான சாத்தியம் உண்டு என டெல்லி உயர் நீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்திருந்தது கவனத்துக்குரியது.