Published:Updated:

எல்விஸ் பிரெஸ்லி பிறந்த தினம் சிறப்பு பகிர்வு

எல்விஸ் பிரெஸ்லி பிறந்த தினம் சிறப்பு பகிர்வு
எல்விஸ் பிரெஸ்லி பிறந்த தினம் சிறப்பு பகிர்வு

எல்விஸ் பிரெஸ்லி பிறந்த தினம் சிறப்பு பகிர்வு

ஜனவரி 8: எல்விஸ் பிரெஸ்லிஎனும் மாயக்குரலோன் பிறந்த தினம் இன்று . ராக் அண்ட் ரோலின் ராஜா என கொண்டாடப்பட்ட இவரின் வாழ்க்கை கவித்துவமானது இல்லை . எளிய குடும்பத்தில் பிறந்த இவர் அப்பாவின் கடனால் வீடிழந்து உறவினர் தயவில் வளர்ந்தார் . முதல் முறை பாடப்போன பொழுது ஐந்தாவது இடம் பெற்றார் ; இசை வகுப்பில் உனக்கு பாடவே தெரியாது என ஆசிரியர் கிண்டலடித்தார் . எட்டாவது வகுப்பில் அவரின் இசைக்கு சி க்ரேட் போட்டு கவுரவம் செய்தார்கள்.

முறையான இசைபயிற்சி இல்லாமலேயே வளர்ந்தார் . தெருக்களில்இரவு கிளப்களில்,உணவகங்களில் பாடுகிறவர்களிடம் இருந்து தனக்கான இசையை பெற்றார் அவர். ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தினர் வசிக்கும் பகுதியில் வசித்ததால் அவர்களின் பாடல்களை இயல்பாக பாடினார் . சன் ரிக்கார்ட்ஸ் என்கிற நிறுவனம் அவரின் ஓரிரு பாடல்களை பதிவு செய்து கொண்டு போனது பெரிதாக எந்த அதிசயமும் நிகழவில்லை. ட்ரக் டிரைவராக வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருந்தார். நடுவில் ஒரு இசைக்குழு இவரின் பாடலை கேட்டு காதைப்பொத்தி கொண்டு ,"நீ ட்ரக் மட்டும் ஒட்டிக்கொண்டு இரு தம்பி !" என்றுவிட்டு நகர்ந்தார்கள்.

எல்விஸ் பிரெஸ்லி பிறந்த தினம் சிறப்பு பகிர்வு

ஒரு 'Blues' இசைத்தட்டுக் கம்பெனியின் ஒலிப்பதிவின் இடைவேளையில், அந்தக் கம்பெனியின் பிரபலமான "That's All Right' என்ற பாடலை எல்விஸ் பாடுவதை, இசைத்தட்டுக் கம்பெனியின் உரிமையாளர் கேட்டு வியந்தார் . அது கறுப்பின பாணியில் இருந்தாலும் அதன் வசீகரம் அவரை ஈர்த்தது .இசைத்தட்டு வெளிவந்த
பொழுது அமெரிக்காவே அள்ளி அணைத்துக்கொண்டது .பரபர ஆட்டம்,கிறங்கடிக்கும் குரல் எல்லாமும் அவரை இளைஞர்களின் இசைக்கடவுள் ஆக்கியது .

மூத்த ராக் பாடகரான பிராங்க் சி்நெட்ரா, அவரின் இசைத் தன்மை வருந்தத்தக்க துர்நாற்றமுள்ளது என்று விமர்சித்தார் . காலத்துக்கும் தான் குழந்தையாக பாவித்து அன்பு செய்த அம்மாவின் மரணம் அவரை உலுக்கிப்போட்டது. ஜெர்மனிக்கு ராணுவ சேவை செய்யப்போய் விட்டு இரண்டுவருடம் கழித்து திரும்பி வந்த பொழுது எல்விஸ் பிரிஸ்லியை வரவேற்க பெரிய கூட்டமே ரயில் நிலையத்தில் திரண்டிருந்தது . அவர் பாடவில்லை ; படங்களில் நடிக்க போய்விட்டார் .

பின்னர் பாடவந்து ஹிட்கள் தந்தார். தோய்வுகள் உண்டான பொழுதும் மீண்டு வந்து கலக்கினார். அவரே உருவாக்கிய ஹிப்பி கலாசாரம் அவருக்கு வேதனை தந்தது .தானே போதை பொருள் ஒழிப்பு மற்றும் ஹிப்பி நாகரீகத்தை ஒழித்துக்கட்ட முயல்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் .மூன்று கிராமி விருதுகள் ,36 வயதில் வாழ்நாள் சாதனையாளர் விருது என அவரை கொண்டாடியது அவர் தேசம் . மிக அதீதமான மாத்திரைகள் உட்கொண்டது அவர் உயிரை நாற்பத்தி இரண்டு வயதில் பறித்துக்கொண்டது . இந்த I Love You Because எனும் அவர்
பாடல் வரிகள் :

பண்புகளும் காலங்களும் பறந்தோடட்டும்

எனக்காக எப்பொழுதும் உன் பிரியங்கள் காத்திருக்கட்டும்

நூறாயிரம் காரணங்களுக்காக காதலிக்கிறேன் உன்னை

எனினும் உன்னை அதீதமாக காதலிக்கிறேன்

ஏன் எனக்கேட்டால் நீ என்பதால் தான் என்பேன் என்னவளே

- பூ.கொ.சரவணன்

அடுத்த கட்டுரைக்கு