Published:Updated:

ஜனவரி 11: லால் பகதூர் சாஸ்திரி நினைவு தின சிறப்பு பகிர்வு

ஜனவரி 11: லால் பகதூர் சாஸ்திரி நினைவு தின சிறப்பு பகிர்வு

ஜனவரி 11: லால் பகதூர் சாஸ்திரி நினைவு தின சிறப்பு பகிர்வு

Published:Updated:

ஜனவரி 11: லால் பகதூர் சாஸ்திரி நினைவு தின சிறப்பு பகிர்வு

ஜனவரி 11: லால் பகதூர் சாஸ்திரி நினைவு தின சிறப்பு பகிர்வு

ஜனவரி 11: லால் பகதூர் சாஸ்திரி நினைவு தின சிறப்பு பகிர்வு

இந்தியாவை மிகக்குறுகிய காலம் ஆண்ட குறிப்பிடத்தகுந்த இந்திய பிரதம்ர்களுள் முக்கியமானவர் லால் பகதூர் சாஸ்திரி. இளம் வயதிலேயே தந்தையை இழந்த இவர் ஏழ்மை சூழவே படிப்பை மேற்கொண்டார். நதிக்கரையை கடந்து படிக்கப்போக பணமில்லாமல் நீந்திப்போய் படித்த அவருக்கு அங்கே மிஷ்ராஜி என்கிற அற்புதமான ஆசிரியர் கிடைத்தார்.

கல்லூரிப்படிப்பை முடிப்பதற்குள் ஒத்துழையாமை இயக்கம் வரவே காந்தியின் அழைப்பை ஏற்று விடுதலைப்போரில் பங்குகொண்டு சிறை சென்றார். மிஷ்ராஜியோ, அவரின் கல்விக்கு பெருந்துணையாக இருந்த மாமாவோ இதை ரசிக்கவில்லை. சாஸ்திரியின் அம்மாவின் ஆசீர்வாதம் மட்டும் அவருக்கு முழுமையாக இருந்தது. அதற்கு பிறகு அடிக்கடி போராட்டங்களில் பங்குகொண்டு சிறை சென்றார் அவர். காலையில் கல்லூரி மாலையில் காதி விற்பனை என்று செயல்பட்டுக்கொண்டே தத்துவத்தில் பட்டம் பெற்றார். அவரின் ஜாதிப்பெயரான ஸ்ரீவத்சவாவை துறந்து சாஸ்திரி என்கிற படித்த பட்டத்தை ஏற்றார் அவர்.

ஜனவரி 11: லால் பகதூர் சாஸ்திரி நினைவு தின சிறப்பு பகிர்வு

திருமணத்தின் பொழுது வரதட்சணையாக கதர் உடை, கைராட்டை ஆகியவற்றை மட்டுமே பெற்றுக்கொண்ட அவர் சிறை புகுந்து மனைவியை வருடக்கணக்கில் பார்க்காமல் இருந்த காலங்கள் உண்டு. சிறை புகுந்து பரோலில் உடல்நலம் சரியில்லாத மகளை பார்க்க சாஸ்திரி வந்தார். அவர் பரோல் காலம் முடிவதற்குள் விலை அதிகமான மருந்துகளை வாங்க காசில்லாமல் மகளை இழந்தார் சாஸ்திரி. மகள் இறந்த உடனே சிறை புகுந்தார் சாஸ்திரி.

ஜி.பி. பந்த் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக சாஸ்திரி இருந்த காலத்தில் தான் பெண் நடத்துனர்கள் பதவியில் அமர்த்தப்பட்டார்கள். ஊழல் தடுப்புக்கான சந்தானம் கமிட்டி இவர் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது தான் உருவாக்கப்பட்டது. அரியலூர் ரயில் விபத்துக்கு அமைச்சர் என்கிற முறையில் தார்மீக ரீதியாக பொறுப்பேற்று பதவி விலகுகிற உச்சபட்ச பொறுப்புணர்வு அவருக்கு இருந்தது.

காஷ்மீரில் சிக்கலான சூழல் நிலவிய பொழுது நேரு இவரை சிக்கலைத்தீர்க்க அனுப்பிவைத்தார். குளிரைத்தாங்கி கொள்ள ஸ்வெட்டர் இல்லாமல் இரவோடு இரவாக நேருவின் ஸ்வெட்டரை டைலர் இவரின் அளவுக்கு தைத்துக்கொடுத்தார். நண்பர் ஒருவர் ஐம்பது ரூபாய் கடன் கேட்க இவரில்லை என்று சொன்னார். மனைவியோ தன்னிடம் இருப்பதாக சொல்லி பணத்தை நீட்டினார். நண்பர் போன பின்னர் விசாரித்து பார்த்ததில் கட்சி கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்தது அது என்று புரிய கூடுதலாக கிடைத்த சம்பளத்தை குறைத்துக்கொண்டார் இவர். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் "இனிமேல் உணவில் பருப்பும், காய்கறிகளும் குறைத்துக்கொள்ள வேண்டும் !" என்று மனைவிக்கு உத்தரவு போட்டார். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் இரவில் இருட்டிலேயே இருக்க பழகிக்கொண்டவர் அவர் !

நேருவின் காலத்தில் ஒரே ஒரு முறை இந்திரா காந்தி கட்சி தலைவராக இருந்தபின்னர் பதவியை விட்டு விலகியிருந்தாலும் நேரு இந்திராவை தன்னுடைய வாரிசு என்று சொல்லாவிட்டாலும் சாஸ்திரிக்கு நேருவுக்கு பின் இந்திரா பிரதமர் ஆகி விடுவார் என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால், நேருவின் மறைவுக்கு பின்னர் இவரே காமராஜர் எடுத்த முன்னெடுப்புகளால் பிரதமர் ஆனார்.

பாகிஸ்தானுடன் அமைதியாக பேச்சுவார்த்தைகளை அவர் நடத்திக்கொண்டு இருந்ததை கண்டு பாகிஸ்தான் தவறாக எடைபோட்டு பாய்ந்தது. பாகிஸ்தான் காஷ்மீரில் முன்னேறிக்கொண்டு இருந்ததை பார்த்தார் சாஸ்திரி. இந்தியப்படைகளை மேற்கில் பாகிஸ்தானுக்குள் நுழையச்சொல்லி உத்தரவு போட்டார். லாகூர் வரை போய் இந்திய ராணுவம் சாதித்தது. பாகிஸ்தான் சரண்டர் ஆனது ! அமைதிக்கும்,அடித்து நொறுக்கவும் தனக்கு தெரியும் என்று அந்த உருவத்தால் சிறிய பெருமனிதர் நிரூபித்தார். அமைதிக்கான தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அவர் மர்மமான முறையில் இறந்து போனார்.

அவர் இறந்த பொழுது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஒரு கடைநிலை ஊழியர் இப்படி சொன்னார் ,"எங்களை மாதிரி ஏழை எளியவர்களின் குரலை காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருந்த கடைசித் தலைவரும் மறைந்து விட்டார் !" என்று . அவர் இறந்த பொழுது தவணையில் வாங்கியிருந்த பழைய கார் ஒன்றுக்கு கட்ட வேண்டிய பாக்கியிருந்தது ! சாஸ்திரியின் மறைவுக்கு பின்னர் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.

பூ.கொ.சரவணன்