Published:Updated:

சுசில்குமார் ஷிண்டே பேச்சுக்கு மோடி கண்டனம்!

Vikatan Correspondent
சுசில்குமார் ஷிண்டே பேச்சுக்கு மோடி கண்டனம்!
சுசில்குமார் ஷிண்டே பேச்சுக்கு மோடி கண்டனம்!
சுசில்குமார் ஷிண்டே பேச்சுக்கு மோடி கண்டனம்!

பனாஜி: மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் பேச்சுக்கு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலம் பனாஜியில் நடந்த பா. ஜனதா கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ''மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

அதில், சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யும்போது முஸ்லிம்களை கைது செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எழுதுகிறார். ஏன் அப்படி செய்ய வேண்டும்? சட்டத்தை மீறுபவர்களுக்கு என்று ஏதாவது மதம் இருக்கிறதா?

சட்டத்தை மீறும் ஒருவர் கைது செய்யப்பட வேண்டுமா? அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமா? என்ற விதியை மதம் தான் முடிவு செய்கிறதா? மத அடிப்படையில் அதில் எந்த பகுத்தறிவும் இல்லை.

##~~##
ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் தண்டிக்கப்படக்கூடாது என்றால், அது எல்லா மக்களுக்கும் இருக்க வேண்டும். இதில் வாக்கு வங்கி அரசியல் நடத்தக்கூடாது.
பிரதமர் எப்போது இதுபோன்ற கடிதத்தை பற்றி கேட்கப்போகிறார்? இதுபற்றி ஆச்சரியம் அளிப்பதாக கூறிய அவர், தான் இதுபற்றி கவனிப்பதாக கூறியிருக்கிறார். இது தான் அவரது பொறுப்பும், பதிலும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.