Published:Updated:

வேண்டியவர்களுக்கு அரசுப் பதவி: புதுச்சேரி ஆளுநர் மீது ரங்கசாமி குற்றச்சாட்டு!

புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்குத் தெரியாமல், துணை நிலை ஆளுநர் தனக்கு வேண்டியவர்களுக்கு அரசுப் பதவிகளை வழங்குவதாக முதலமைச்சர் ரங்கசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

காரைக்காலில் நடைபெற்ற, 'புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநிலத் தகுதி' எனும் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ''அரசு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த முடியாதபடி, துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா செயல்படுகிறார்.

##~~##
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால், அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய நிலை உள்ளது. மத்திய அரசோ, எல்லாவற்றிற்கும் தடை போடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. புதுச்சேரி, மாநில அந்தஸ்து பெற்றால் தான் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும்" என்று குற்றஞ்சாட்டி பேசினார்.
அடுத்த கட்டுரைக்கு