Published:Updated:

ஊழல்பேர்வழி ஜெயந்தி நடராஜன்: மோடி சாடல்

Vikatan Correspondent
ஊழல்பேர்வழி ஜெயந்தி நடராஜன்: மோடி சாடல்
ஊழல்பேர்வழி ஜெயந்தி நடராஜன்: மோடி சாடல்
ஊழல்பேர்வழி ஜெயந்தி நடராஜன்: மோடி சாடல்

பனாஜி: "மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனை ஊழல்பேர்வழி" என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவா தலைநகர் பனாஜியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், பணம் கொடுத்தால் மட்டுமே எந்த ஒரு திட்டம் தொடர்பான கோப்பிலும் ஜெயந்தி நடராஜன் கையெழுத்திட்டு வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மோடியின் குற்றச்சாட்டை சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மறுத்துள்ளார்.

##~~##
மாநில அரசின் திட்டங்களால் குஜராத்தில் சுற்றுச்சூழல் மோசமாக சீர்கெட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ஜெயந்தி நடராஜன், அதனை தான் எதிர்த்ததன் காரணமாகவே குறிவைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.