Published:Updated:

தேவை உள்ளவர்களுக்கு நம் உதவி போய் சேர வேண்டும்: படிக்கட்டுகள் ஒருங்கிணைப்பாளர்!

Vikatan Correspondent
தேவை உள்ளவர்களுக்கு நம் உதவி போய் சேர வேண்டும்: படிக்கட்டுகள் ஒருங்கிணைப்பாளர்!
தேவை உள்ளவர்களுக்கு நம் உதவி போய் சேர வேண்டும்: படிக்கட்டுகள் ஒருங்கிணைப்பாளர்!

மதுரை: தேவை உள்ளவர்களுக்கு நம் உதவி போய் சேர வேண்டும் என்று படிக்கட்டுகளின் ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தெரிவித்துள்ளார்.

தேவை உள்ளவர்களுக்கு நம் உதவி போய் சேர வேண்டும்: படிக்கட்டுகள் ஒருங்கிணைப்பாளர்!

தொண்டு செய்கிறேன் என்கிற பெயரில், ஆதரவற்றோரை காட்டி தன் பாக்கெட்டை நிரப்பும் மோசடிப்பேர்வழிகளைப் பற்றிய செய்திதான் அதிகம் வருகின்றன. இந்த சூழலில், தங்கள் கை காசைப் போட்டு, யாருக்கு உதவி செய்தால் அது பயனுள்ளதாக இருக்குமென்று கூடிப்பேசி செயல்படுத்தி வரும் இளைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கல்லூரி மாணவர்கள், வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள் சேர்ந்து கடந்த வருடம் ஆரம்பித்த அமைப்புதான் ‘படிக்கட்டுகள்’. எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து இன்று தமிழகத்தில் பல நகரங்களில் விழுது பரப்பி 350 பேர்களுடன் எண்ணற்ற சேவைகளை செய்து வருகிறார்கள் அந்த அமைப்பினர்.

தேவை உள்ளவர்களுக்கு நம் உதவி போய் சேர வேண்டும்: படிக்கட்டுகள் ஒருங்கிணைப்பாளர்!

படிக்கட்டுகளின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா மதுரை அவனியாபுரத்திலுள்ள ஒரு மஹாலில் நேற்று நடந்தது. இதில் பேசிய படிக்கட்டுகளின் ஒருங்கிணைப்பாளரான மலைச்சாமி, ‘‘கல்லூரி மாணவர்களும், வேலை பார்க்கும் இளைஞர்களும் தங்கள் பணத்தை தேவையில்லாதவகைகளுக்கு ஏராளமாக செலவு செய்கிறார்கள். அதனால், தேவையற்ற பிரச்னைகள்தான் வருகிறது.

அதே பணம், எந்த வருமானமுமில்லாத, ஆதரவில்லாத மக்களுக்கு போய் சேர்ந்தால் அவர்களின் வாழ்க்கையை மாற்றி வைத்த பலன் நமக்கு கிடைக்கும். அதை பார்த்து, இந்த சமூகத்தில் நாம் வாழ்ந்ததற்கு ஏதோ செய்துவிட்டோம் என்ற மனநிறைவு ஏற்ப்படும்.

இந்த பொறி எங்கள் மனதில் விழுந்ததின் விளைவுதான், இன்று எங்கள் படிக்கட்டுகள் பல நற்காரியங்களை செய்து வருகிறது. இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே, என்பது தான் எங்கள் அமைப்பின் தீமே’’ என்றார்.

விழாவில், கல்லூரி மாணவி ஒருவரின் கல்லூரி கட்டணச் செலவு, தீர்க்க முடியாத நோய் தொற்றுள்ள ஒரு குழந்தையின் மருத்துவச் செலவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஒரு குழந்தையை தத்தெடுத்து அதற்குண்டான அனைத்து செலவுகளையும் இந்த அமைப்பினர் எற்றுக் கொண்டார்கள்.

##~~##
படிக்கட்டுகளின் செயல்பாட்டை பார்த்து, அமைச்சர் செல்லூர்ராஜுவின் மனைவியும் இதுபோன்ற உதவிகளை வழங்குவதாக தெரிவித்தார். அவரது மகன் கடந்த வருடம் சென்னையில் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்ததால் அவர் பேரில் இனி உதவி வழங்கப் போவதாகவும் தெரிவித்தார்.

செ.சல்மான்

படங்கள்:
பா.காளிமுத்து