Published:Updated:

கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு!

Vikatan Correspondent
கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு!
கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு!
கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு!

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிகளும் இன்னும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி அமைக்காத நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், கூட்டணிக்கு வருமாறு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துக்கு நேரிடையாக அழைப்பு விடுத்தார்.

##~~##
மேலும், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கும் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தி்ல் உள்ள இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இந்தியா- இலங்கை மீனவர்கள் இடையே மோதலை ஏற்படுத்த இருநாட்டு அரசுகளும் முயற்சி மேற்கொள்வதாக குற்றம்சாட்டினார்.
பிரச்னைகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க மீனவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை இந்தியா முன்மொழிய டெசோ வலியுறுத்த வேண்டும் என்றும் கூறினார்.