Published:Updated:

தூத்துக்குடியில் இளங்கோவன் ஆதரவாளர்கள்-போலீசார் மோதல்!

Vikatan Correspondent
தூத்துக்குடியில் இளங்கோவன் ஆதரவாளர்கள்-போலீசார் மோதல்!
தூத்துக்குடியில் இளங்கோவன் ஆதரவாளர்கள்-போலீசார் மோதல்!

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் இளங்கோவன் ஆதரவாளர்கள்-போலீசார் மோதல்!

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் எஸ்.கே.டி.ராஜசேகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வந்தார். அவரை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் தூத்துக்குடி விமான நிலையத்தில் கூடி இருந்தனர்.

காங்கிரஸ் கொடியை பிடித்து கொண்டு நின்றிருந்த இளங்கோவன் ஆதரவாளர்களிடம், ''இங்கெல்லாம் கொடி பிடித்து கொண்டு நிற்கக் கூடாது. பேண்ட் வாத்தியம் வாசிக்க கூடாது" என போலீசார் கூறினர். மேலும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் இளங்கோவன் ஆதரவாளர்கள்-போலீசார் மோதல்!

இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள், ''சாதித் தலைவர்களை வரவேற்க வருபவர்களும், அ.தி.மு.க. பிரமுகர்களை வரவேற்க வருபவர்களும் இங்கே கொடி பிடித்துதான் வருகிறார்கள். அவங்களை எல்லாம் தடுக்க தைரியமில்லாமால் எங்களை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள். நாங்கள் இங்கே கொடியுடன்தான் நிற்போம்" என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக சிறிது நேரம் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

இந்த தகவல் இளங்கோவனிடன் தெரிவிக்கப்பட அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சென்றுவிட்டார். அதன்பின், கூட்டாம்புளி என்ற கிராமத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசும்போது, ''இந்த நாடு சாதி, மதம், இன வேற்றுமையில்லாத ஜனநாயக நாடு. சட்ட திட்டங்களை காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் எப்போதும் பின்பற்றுவோம். சட்ட திட்டங்களை மீறி செயல்படும் மற்ற கட்சியினரை கட்டுப்படுத்த முடியாத அதிகாரிகள், எங்களை மட்டுமே கட்டுப்படுத்தி திருப்தி அடைந்துகொள்கிறார்கள்.

##~~##
இதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. அதே நேரத்தில், மற்றவங்களையும் 'இதுதான் சட்டம்' என்று அதிகாரிகள் புரிய வைக்க வேண்டும். எந்தவித வேற்றுமையும் இல்லாத கட்சி காங்கிரஸ் கட்சி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் ஒரே தாய் நாடு என்கிற பாசத்தோடு தேசிய ஒருமைப்பாட்டை பாதுக்காக்கிற சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் இருக்கிறது. பி.ஜே.பி மத அடிப்படை கொண்ட கட்சி. விலையேற்றத்தை எழுதும் பத்திரிக்கைகள், விலை குறையும்போது எழுதுவது இல்லை" என்று பேசினார்.

எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்:
ஏ.சிதம்பரம்