Published:Updated:

மதுவை ஒழிப்போம் என பெண்களிடம் சத்தியம்: பா.ம.க.வினருக்கு ராமதாஸ் அட்வைஸ்!

Vikatan Correspondent
மதுவை ஒழிப்போம் என பெண்களிடம் சத்தியம்: பா.ம.க.வினருக்கு ராமதாஸ் அட்வைஸ்!
மதுவை ஒழிப்போம் என பெண்களிடம் சத்தியம்: பா.ம.க.வினருக்கு ராமதாஸ் அட்வைஸ்!
மதுவை ஒழிப்போம் என பெண்களிடம் சத்தியம்: பா.ம.க.வினருக்கு ராமதாஸ் அட்வைஸ்!

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் மதுவை ஒழிப்போம் என்று பெண்களிடம் சத்தியம் செய்து வாக்கு சேகரியுங்கள் என்று பா.ம.க.வினருக்கு ராமதாஸ் அட்வைஸ் செய்துள்ளார்.

சமூக ஜனநாயகக் கூட்டணியின் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. எதிரொலி மணியனும், ஆரணி தொகுதி வேட்பாளராக மூர்த்தியும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. தேர்தல் பணிக்குழு சார்பில், வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, பா.ம.க. மாநிலதுணைத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் எதிரொலி மணியன், ஆரணி தொகுதி வேட்பாளர் மூர்த்தி, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் காளிதாஸ், பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் பாண்டுரங்கன் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், இரண்டு தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, ''திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் பா.ம.க. தொண்டர்கள் குறிப்பாக பெண்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். பா.ம.க. வெற்றி பெற்றால் மதுவை முற்றிலுமாக ஒழிப்போம் என்று. பெண்களுக்கு சத்தியம் செய்து வாக்கு சேகரியுங்கள்.

திருவண்ணாமலையை அடுத்துள்ள மேல்செங்கம் மத்திய விவசாயப் பண்ணையில் தரமான விதைகளை உற்பத்தி செய்யும் வகையில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும். பா.ம.க. வெற்றி பெற்றால் கல்வி, மருத்துவம், விவசாயத்துக்குத் தேவையான தரமான விதைகள் இலவசமாகவே வழங்கப்படும்.

##~~##
ஊழல் செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு வந்து, ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் மற்ற கட்சியினர் தருவார்கள். இதை நாம் தடுக்க வேண்டும். எல்லா ஊழல்களுக்கும் தாய் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதுதான். ஓட்டு விற்பனை என்பது தமிழ் நாட்டு அரசியலைப்பிடித்து புற்றுநோயாகவே மாறிவிட்டது. இதை ஒழித்தே ஆக வேண்டும். பனம் கொடுத்து ஓட்டு வாங்குவது கொடூரமான குற்றம், அப்பட்டமான மனித உரிமை மீறல்" என்று பேசினார்.