Published:Updated:

நேரடி மக்கள் குறைகேட்பு கூட்டம் இனி இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

Vikatan Correspondent

புதுடெல்லி: கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்படுவதால், ஜனதா தர்பார் எனப்படும் நேரடி மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி இனி நடத்தப்படாது என்றும், அதற்குப்பதிலாக மக்கள் தங்கள் குறைகளை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அதே சமயம் வாரம் ஒருமுறை மக்களை நேரில் சந்திப்பது மட்டும் தொடரும், ஆனால் குறைகேட்பு நிகழ்ச்சி கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

##~~##
நவீன தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம். இனி ஜனதா தர்பார் நடத்தப்படாது. அதற்குப்பதிலாக கால் சென்டர்கள் அமைக்கப்படும். மக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ தெரிவிக்கலாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.