Published:Updated:

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம்: டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு

Vikatan Correspondent
ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம்: டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு
ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம்: டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு
ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம்: டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு

சென்னை: ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட உள்ள உயர் சிறப்பு பல துறை மருத்துவமனைக்கு மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுக்காப்பை பெற்றுத் தந்தது இந்த அரசுதான். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் தற்போது ஆட்சியில் உள்ள அ.தி.மு.க அரசுதான். சமூக நீதியை நிலைநாட்டுவதில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதை அனைவரும் அறிவர்.

பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றுள்ள தமிழக அரசு, தற்பொழுது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் உரிய முறையில் செயல்பட்டு முடிவுகட்டவேண்டும். இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பின்படி உயர்சிறப்பு மருத்துவமனைகளின் பணிநியமனத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இயலாதெனின், இப்பொழுது தொடங்கப்பட உள்ள மருத்துவமனையின் பெயரில் உரிய மாற்றத்தை செய்யலாம்.

பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை என்ற பெயரில் உள்ள உயர் சிறப்பு என்ற பகுதியை நீக்கிவிட்டு, பலதுறை மருத்துவமனை என அறிவித்து திறக்கலாம். பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் உயர் சிறப்பு மருத்துவப் பிரிவுகள் தனித்துறையாக மட்டுமே செயல்படுகின்றன. எனவே, இந்த மருத்துவமனையையும் பல்வேறு துறைகள் உள்ள அரசு மருத்துவமனையாக செயல்பட வைப்பதின் மூலம் மருத்துவர்கள் பணி நியமனத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும்.

சென்னை அரசு தலைமை மருத்துவமனைக்கு ராஜிவ் காந்தியின் பெயரை சூட்டியுள்ளது போல் இந்த மருத்துவமனைக்கும் எம்.ஜி.ஆர் பெயரை சூட்டலாம். டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு பல துறை மருத்துவமனை என்று பெயரிட்டு திறக்கலாம். அனைத்து உயர் சிறப்பு சிகிச்சைகளையும் வழங்கலாம். சமூக நீதியையும் நிலை நாட்டலாம். பெயர் மாற்றத்தை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும், இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்த முறை பணிநியமனத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

##~~##
கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் கடைபிடித்த பணி நியமன நடைமுறைகளை தற்போதைய அரசு கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் கூடாது என்றோ, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றோ வலியுறுத்தும் தகுதியை தனது ஆட்சிக்கால செயல்பாட்டால்  பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் திறமை வாய்ந்த மருத்துவர்கள் பலர் அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரிபவர்களாகவே உள்ளனர். அரசு மருத்துமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எந்த வகையிலும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களைவிட திறமை குறைந்தவர்கள் அல்ல. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட பொழுது அவருக்கு உரிய சிகிச்சையளித்து காப்பாற்றியது அரசு மருத்துவமனை மருத்துவர்கள்தான் என்பதை அனைவரும் உரிய வாய்ப்பையும், மருத்துவ தொழில்நுட்ப வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் செய்து கொடுத்தால் நமது அரசு மருத்துவர்களும் மகத்தான சாதனைகளைப் படைப்பார்கள். அவசியத் தேவை ஏற்படின் தனியார் மருத்துவர்களையும் மருத்தவ ஆலோசகர்களாக அழைக்கலாம். அரசு மருத்துவர்களையும் உரிய பயிற்சி பெறுவதற்கு வேறு உயர் சிறப்பு மருத்துவ மனைகளுக்கு அனுப்பலாம்.
எனவே,இந்த அரசு மருத்துவமனைக்கும் நமது அரசு மருத்துவர்களில் திறமையானவர்களை பணிமூப்பு அடிப்படையில் தெரிவுசெய்து பணியமர்த்த தமிழக அரசு முன்வரவேண்டும். இதன் மூலம் மருத்துவர்களின் பணி நியமனத்தில் உள்ள சர்ச்சைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும். அதற்கேற்ப தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.