Published:Updated:

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசு விருது: அ.தி.மு.க.வில் ஐக்கியமாக அச்சாரமா?

Vikatan Correspondent
பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசு விருது: அ.தி.மு.க.வில் ஐக்கியமாக அச்சாரமா?
பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசு விருது: அ.தி.மு.க.வில் ஐக்கியமாக அச்சாரமா?
பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசு விருது: அ.தி.மு.க.வில் ஐக்கியமாக அச்சாரமா?

சென்னை: தே.மு.தி.க.வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவர் அ.தி.மு.க.வில் ஐக்கியமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தே.மு.தி.க. அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சித் தொடங்கியது முதல் இவரது ஆலோசனைபடிதான் விஜயகாந்த் செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால், விஜயகாந்த் செயல்பாடு பிடிக்காத காரணத்தால் தே.மு.தி.க.வை சேர்ந்த நடிகர் அருண்பாண்டியன், மாஃபா பாண்டியராஜன், சாந்தி, மைக்கேல் ராயப்பன் உள்பட 7 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, அக்கட்சிக்கு ஆதரவாக சட்டசபையில் செயல்பட்டு வந்தனர்.

இவர்களின் இந்த முடிவுக்கு விஜயகாந்த்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கும் எம்.எல்.ஏ சந்திரகுமார் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகியான இளங்கோவன் ஆகியோரும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

##~~##
இந்நிலையில், தனது எம்.எல்.ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் பண்ருட்டி ராமச்சந்திரன். மேலும், கட்சியின் அவைத் தலைவர் பதவியில் இருந்தும் விலகினார். பண்ருட்டியாரின் இந்த முடிவால் தே.மு.தி.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடல் நலத்தை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பண்ருட்டி அறிவித்தாலும், அ.தி.மு.க.வில் சேரப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் பண்டிருட்டி ராமச்சந்திரனுக்கு, பேரறிஞர் அண்ணா விருதை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதனால், கூடிய விரைவில் பண்ருட்டியார், அ.தி.மு.க.வில் ஐக்கியமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.