Published:Updated:

தலையங்கம் - பிரதமரே... அதுதான் ஒரே வழி!

தலையங்கம் - பிரதமரே... அதுதான் ஒரே வழி!

தலையங்கம் - பிரதமரே... அதுதான் ஒரே வழி!

தலையங்கம் - பிரதமரே... அதுதான் ஒரே வழி!

Published:Updated:
தலையங்கம் - பிரதமரே... அதுதான் ஒரே வழி!

லைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு, காமன் வெல்த் ஊழல், ராணுவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் என்று ஒவ்வோர் ஊழல் வெளியானபோதும் அவற்றை எதிர்கொள்ள 'எல்லாம் தெரிந்த மன்மோகன் சிங்’ கையில் எடுத்த முதல் ஆயுதம் - 'எனக்கு எதுவும் தெரியாது.' ஒருகட்டத்தில் ஊழல் நடந்தது உண்மைதான் என்பது அம்பலமாக ஆரம்பித்தவுடன் தன்னுடைய அடுத்த ஆயுதத்தைக் கையில் எடுப்பார் - 'விசாரணைக்குத் தயார்’. கடைசியாக வேறு வழியே இல்லாத சூழலில், கடைசி ஆயுதத்தைக் கையில் எடுப்பார் - குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சகாவை ராஜிநாமா செய்யச் சொல்லிவிட்டு, சி.பி.ஐ-யின் புலனாய்வுக்கு உத்தரவிடுவார். மக்களும் அதோடு அந்த ஊழலை மறந்துபோவார்கள். தன்னுடைய முதுகில் பட்ட கறைகளை எல்லாம் இப்படியே சாதுர்யமாகத் துடைத்து, தப்பித்துக்கொண்ட பிரதமர், இப்போது அவர் முகத்தின் மீதே கரி பூசப்பட்ட நிலையிலும், அதே தந்திரத்தைக் கையாண்டு தப்பிக்கப் பார்ப்பது கேலிக்கூத்தானது.

நாடாளுமன்றத்தில் இந்த ஊழல்குறித்து விளக்கம் அளிக்கையில், நிலக்கரி ஊழல் முறைகேட்டை வெளிக்கொணர்ந்த ''தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை, அடிப்படை ஆதாரம் அற்றது; யூகங்களின் அடிப்படையிலானது'' என்று சொல்லி இருக்கிறார் சிங். ஒரு பிரதமரே நாட்டின் உச்சபட்ச தணிக்கை அமைப்பின் அறிக்கையை உண்மைக்கு அப்பாற்பட்டது என்று சொல்வது கேவலத்திலும் கேவலம். இனி, வழக்கம்போலத் தன்னுடைய கடைசி ஆயுதமான சி.பி.ஐ. விசாரணையை அவர் கையில் எடுக்கலாம். ஆனால், அந்த விசாரணையின் மீது எந்த நம்பகத்தன்மையும் இருக்கப்போவது இல்லை. அவர் பொறுப்பில் இருந்த ஒரு துறையில் நடந்த ஒரு முறைகேட்டை, அவர் பொறுப்பிலேயே இருக்கும் இன்னொரு துறை விசாரிப்பது எப்படி முறையாகும்?

பிரதமரே... உங்கள் சகாக்களுக்கு நீங்கள் காட்டிய வழி உங்களுக்கும் பொருந்தும். வேறு வழி இல்லை... முதலில் ராஜிநாமா செய்யுங்கள்; பிறகு விசாரணையை எதிர்கொள்ளுங்கள்!