Published:Updated:

ஜனவரி 17: வங்காள காம்ரேட் ஜோதி பாசு நினைவு தினம் சிறப்பு பகிர்வு !

ஜனவரி 17: வங்காள காம்ரேட் ஜோதி பாசு நினைவு தினம் சிறப்பு பகிர்வு !
ஜனவரி 17: வங்காள காம்ரேட் ஜோதி பாசு நினைவு தினம் சிறப்பு பகிர்வு !

ஜோதி பாசு எனும் இணையற்ற தலைவர் மறைந்த தினமின்று . வளமிகுந்த குடும்பத்தில் பிறந்த இவர்.எல்லாரும் பெண்களாக இருந்த பள்ளியில் ஒரே ஆணாக தன் கல்வியை தொடங்கினார் . ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு லண்டனில் சட்டம் படிக்க போனார் ;அங்கே பல கம்யூனிஸ்ட் தோழர்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது;இந்தியா லீகில் இணைந்து செயலாற்றினார். அங்கே தலைசிறந்த சிந்தனையாளர் ரஜ்னி பாமிதத்தை சந்தித்தார். மார்க்சிய சிந்தனைகள் அவரை செதுக்கியது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் அக்கட்சியில் இணைந்தார் . பல முக்கியமான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்; கம்யூனிஸ்ட் கட்சி சீனப்போரின் பொழுது இரண்டாக உடைந்த பொழுது இவர் சி பி ஐ மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார் . பல காலம் பொலிட் பீரோவின் உறுப்பினராக இருந்தார் .1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்று பங்களா காங்கிரஸ் வென்ற பொழுது ஜோதி பாசு அவர்கள் துணை முதல்வர் ஆனார்.

ஜனவரி 17: வங்காள காம்ரேட் ஜோதி பாசு நினைவு தினம் சிறப்பு பகிர்வு !

1970 இல் இவரை பாட்னா ரயில்வே நிலையத்தில் கொல்ல முயற்சி நடந்தது. இவருக்கு பதிலாக வேறொரு தோழர் உயிர்த்தியாகம் செய்தார். அப்பொழுதும் தப்பித்து ஓடாமல் அந்த சுட்டவனை பிடியுங்கள் என அவனிருந்த திசையை காட்டினார் இவர். 1977 இல் எமெர்ஜென்சிக்கு பிறகு ஜோதி பாசு முதல்வர் ஆனார். 23 வருடங்கள் தொடர்ந்து முதல்வராக இருந்தது இன்னமும் சாதனை.அதிலும் பதினான்கு கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டே செயலாற்றினார். பல்வேறு நிலசீர்திருத்தங்களை கொண்டுவந்து ஏழை மக்களுக்கு நிலங்கள் கிடைக்க வழிவகை செய்தார். அவரின் சாதனை எத்தகையது என்பதை இந்த எண்ணிக்கை புரியவைக்கும்-நாட்டில் நடந்த மொத்த நிலச் சீர்திருத்தத்தில் 22% மேற்கு வங்கத்தில், அவரது ஆட்சியால் அமல்படுத்தப்பட்டது. நாட்டில் நிலச்சீர்திருத்தத்தால் பலனடைந்தவர்களில் 54.6% பேர் மேற்கு வங்க விவசாயிகள். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் வெகுகாலத்துக்கு முன்னமே தந்தார்.

ஜனவரி 17: வங்காள காம்ரேட் ஜோதி பாசு நினைவு தினம் சிறப்பு பகிர்வு !

பலமுறை மதக்கலவரங்களால் நொந்து போயிருந்த மேற்கு வங்காளம் இவரின் ஆட்சிக்காலத்தில் மிகவும் அமைதியாக இருந்தது . இந்திரா காந்தியின் மரணத்துக்கு பின்னர் சீக்கியர் படுகொலைகள் நாடு முழுக்க நடைபெற்ற பொழுது பல லட்சம் சீக்கியர்கள் வாழ்ந்து கொண்டிருந்த கொல்கத்தாவில் வன்முறையின் சாயல் சற்றும் தலைகாட்டாமல் இருக்க தொழிற்சங்கங்களை களத்தில் இறக்கி சாதித்தார் இவர். மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த அவர் ஒரே ஒரு மெய்க்காப்பாளர் மட்டுமே வைத்துக்கொண்டார். தனி மனித ஆராதனையை என்றைக்கும் ஏற்றுக்கொண்டது இல்லை. அதிகாரிகள் இடமாற்றம் முதலிய முடிவுகளில் எந்த அரசியல் தலையீட்டுக்கும் இடம் கொடுக்காமல் தலைமை செயலாளர் முடிவுக்கே விட்டுவிடுவார்.

ஜனவரி 17: வங்காள காம்ரேட் ஜோதி பாசு நினைவு தினம் சிறப்பு பகிர்வு !

ராஜீவ் காந்தி இறந்த பொழுது மிகுந்த வருத்ததோடு ,கோபத்தோடு "அவர் நிறைய தவறுகள் செய்தார் ;அதற்காக கொன்றிருக்க கூடாது .எல்லாரும் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் தானே இயங்குகிறோம் !"என கண்ணீர் வடித்தார். 1996 இல் பிரதமர் பதவி வந்த பொழுது கட்சியின் கட்டுப்பாடு காரணமாக அவர் அதை ஏற்கவில்லை ;பின் அதை வரலாற்றுப்பிழை என அவரே வர்ணித்தார், ஆனாலும்,போர்க்கொடி தூக்காமல் இருந்தார் -அது தான் அவர். அவர் ஆட்சிக்காலத்தில் மக்களின் உடல்நலம்,கல்வி கீழே போனது -ஆங்கிலத்தை கல்விக்கூடங்களை விட்டு துரத்தியது வேலை வாய்ப்பை குறைக்க செய்தது .2000 இல் உடல்நிலையை காரணம் காட்டி முதல்வர் பதவியை விட்டு இறங்கினார்.தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே இருந்தது; பெரிதாக வளர்ச்சி ஏற்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் உண்டு எளிமையான வாழ்க்கையே இறுதிவரை வாழ்ந்தார் -தனக்கென்று எந்த சொத்தும் சேர்த்துக்கொள்ளவில்லை அவர்; நாத்திகவாதியாக இருந்தாலும் அன்னை தெரசா தன்னை எப்பொழுதும் எந்த முன் அனுமதியுமின்றி சந்திக்கலாம் என்றவர் அவர்.மரணத்திற்கு பின்னும் தன் உடல் பயன்பட வேண்டும் என்று உடல்தானம் செய்த நிஜமான காம்ரேட் அவர். அவரின் சுயசரிதையில் ஒரு இடத்தில் கூட தன்னைப்பற்றி பெருமிதமாக ஒரு சொல் எழுதி நீங்கள் பார்க்க முடியாது. எப்படிப்பட்ட வாழ்க்கை தான் வாழ்ந்ததாக அவர் நினைக்கிறார் என்பதை அவரின் வரிகளிலேயே முடிப்பது சரியாக இருக்கும்:

"மனிதர்களுடனான உறவை விட பெரிய சொத்தில்லை. மரணத்தை கண்டு அஞ்சக்கூடாது. அது எப்பொழுது வந்தாலும் நான் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன். அதே சமயம்,வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே என்கிற ஏமாற்றம் சாகிற தருணத்தில் தோன்றக்கூடாது. என் வாழ்வின் இறுதி கணத்தில் என்னால் உறுதியாக சொல்ல முடியும் ,மனிதகுலத்தின் விடுதலைக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என்று !"

பூ.கொ.சரவணன்

அடுத்த கட்டுரைக்கு