ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்!

'நிலா மனிதன்’ நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பற்றி...?

##~##

இந்த நூற்றாண்டின் இணையில்லா மனிதர் ஆர்ம்ஸ்ட்ராங். உயிர் வாழ்வதற்கு அவசியமான எதுவும் இல்லாத ஓர் இடத்தில் காலடி வைத்துத் திரும்பிய முதல்மனிதர் அவர்!

அவர் மறைந்த இந்த நேரத்தில் நினைக்கத்தக்க இன்னும் இரண்டு பேர் இருக்கின்றனர். அவர்கள், ஆர்ம்ஸ்ட்ராங் உடன் சென்ற ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகியோர். மூவரும்தான் நிலவுக்குச் சென்றவர்கள். முதலில் கால் வைத்தவர் ஆர்ம்ஸ்ட்ராங். இரண்டாவது காலடி வைத்தவர் ஆல்ட்ரின். இவர்களோடு வந்து ராக்கெட்டில் இருந்தவர் காலின்ஸ். மூவருக்குமே சரி மரியாதையை நம்மனதில் இருத்துவதுதான் முறையானதாக இருக்கும்!

 கலைஞர்ப்ரியா, வேலூர்(நாமக்கல்).

கழுகார் பதில்கள்!

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்துக்கு சசிகலா போகவில்லையே?

ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் கூப்பிடவில்​லையே!

 அர்ஜுனன்.ஜி., திருப்பூர்.

கழுகார் பதில்கள்!

6.72 லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனரே?

கேள்வித்தாள் மிகமிகக் கடினம் என்பது பெரும்பாலானவர்களின் பொதுவான கருத்து. ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் தரமும் இதில் இருந்து தெரிகிறது. பணம் காய்க்கும் மரங்களில் ஒன்றான இந்த பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்று வரக்கூடியவர்கள் எத்தகைய தகுதி உடையவர்கள் என்பது இந்தத் தேர்வு முடிவின் மூலமாகத் தெரிந்து விட்டது. இனிமேலாவது, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப் பதில் தொடங்கி, எண்ணிக்கையை அதிகப்படுத்துவது வரை அரசு கறாராக இருந்தால் மட்டுமே இந்த 'புத்திசாலி’ வாத் தியார்களிடம் இருந்து  பிள்ளைகள் தப்ப முடியும்!

ஆசிரியர் தேர்வில் தகுதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்!

 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேலான 129 அதிகாரிகளுக்கு எதிராக, 97-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளை கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி சொல்லி இருக்கிறாரே?

பதிவுதானே செய்திருக்கிறார்கள். பயமில்லை! சி.பி.ஐ. இதற்கான தண்டனையை வாங்கித் தருவதற்குள் அவர்கள் எல்லாம் ஓய்வு பெற்று நிம்மதியாகப் போய்விடுவார்கள்!

 எஸ்.ஸ்ரீதர், கொடுங்கையூர்.

கழுகார் பதில்கள்!

ஒன்றுமே புரியவில்லை... இத்தனை காலமும் பதுக்கி, மறைத்து, அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் ஏமாற்றிச் செய்யக்கூடிய காரியமா இந்தக் கிரானைட் முறைகேடு...?

பதுக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. பட்டப்பகலில் அதி​காரிகள் துணையோடு அமைச்சர்​களின் ஆசீர்வாதத்​தோடுதான் இந்தக் கொடுமை கடந்த 15 ஆண்டுகளாக நடந்துள்ளது. இதை ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டேதான் இருந்தன. ஜூ.வி-யைப் பொறுத்தவரை இந்த ஆட்சி மறுபடி பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 12 முறைக்கு மேல் எழுதி இருக்கிறோம். எல்லாமே கைமீறிப் போன பிறகுதான் நடவடிக்கை வருகிறது. சரி... இப்போதாவது உஷாரானார்களே என்று சந்தோஷப்படுவோம். கடைசி வரை, கறாராக இருக்கிறார்களா என்பதையும் கண்காணிப்போம்.

 எஸ்.ஜெயகாந்தன், புன்செய்புளியம்பட்டி.

கழுகார் பதில்கள்!

தி.மு.க-வில் 'சகோதர யுத்தம்’ தணிந்துள்ளதா?

ஆம்! தணிந்துள்ளது. ஆனால், தந்தை - மகன் யுத்தம்’ சூடுபிடித்து விட்டது. எந்த இடத்தை நோக்கி ஸ்டாலினை வளர்த்து விட்டாரோ... அந்த இடத்தை தரத் தயங்குகிறார் கருணாநிதி. இது, வெளியே தெரியவேண்டாம் என்பதற்காகவே 'சகோதர யுத்தம்’ திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்றுகூட சந்தேகமாக இருக்கிறது!

 சோ.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்!

எத்தகைய கருத்தை மக்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் போதிக்கிறார்கள்?

'எங்களில் யாரும் யோக்கியமில்லை’ என்பதைத்தான்!

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

கழுகார் பதில்கள்!

தீண்டாமையை ஒழிப்பதில் சிறப்பாகச் செயல்படும் கிராமங்களுக்குத் தலா 10  லட்சம் தரப்போவதாக முதல்வர் சொல்லி இருப்பது நடைமுறைக்கு ஏற்ற நல்ல முடிவுதானே..?

நிச்சயமாக! ஆனால், தீண்டாமை ஒழிப்பின் உண்மையான அர்த்தம் என்ன என்பதைப் புரிந்து இந்தப் பரிசுகள் தரப்பட வேண்டும். கோயில்களில் சமபந்தி போஜனமோ, நடுவில் போலீஸ்காரரை நிறுத்திக் கொண்டு இரண்டு பக்கமும் வெவ்வெறு சாதிக்காரர்களை நிற்க வைத்து டீ குடிப்பதோ மட்டுமே தீண்டாமையை ஒழித்து விடாது.

ஊர்க் கிணற்றை பொதுவாக்குவது, எந்தத் தெருவிலும் யாரும் நடக்கும் உரிமையைக் கொடுப்பது, கோயில் களுக்குள் தயக்கம் இல்லாமல் அனைவரும் சென்று வணங்குவது, ஊர் விழாக்களில் சமமாகப்  பங்கேற்பது, பள்ளிக்கூடங்களில் பாகுபாடு இன்மை, கலப்புத் திருமணங்கள்... ஆகிய செயல்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கும் கிராமங்களுக்கு ஓராண்டு கவனித்துப் பார்த்த பிறகு விருதும் நிதியும் தரப்பட வேண்டும்.

இப்படிப் பரிசு வாங்கிய கிராமத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களின் நேரடி அல்லது மறைமுக

கழுகார் பதில்கள்!

ஆதரவோடு மறுபடியும் தீண்டா மைச் செயல்பாடு எப்போது நடந்தாலும்... அளித்த நிதியைவிட இரண்டு மடங்கு பணத்தை அரசாங்கத்துக்கு அபராதமாகச் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிப்பது அதைவிட முக்கியம். கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக விருது வாங்கியவர்கள், பிறந்த குழந்தையின் சான்றிதழில் எந்தச் சாதியைப் போடுவது என்று சண்டை போடுவது எந்த அளவுக்கு அபத்தமோ... அதுபோன்ற விளைவுகள் இதிலும் வராமல் பார்த்துக்​கொள்ள வேண்டும்.

 செ.அ.ஷாதிலி, கோனுழாம்பள்ளம்.

கழுகார் பதில்கள்!

இப்போதைய மாநில அரசின் நிர்வாகம் பற்றி...?

நிர்வாகத்தில் தேக்கம் இருப்பது உண்மை. எல்லா விஷயங்களையும் முதல்வரே செய்ய முடியாது. முதல்வர் இடத்தில் இருந்து யோசித்துச் செயல்படும் அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் ஒரு சிலராவது வேண்​டும். ஆனால், பலரும் முதல்வர் 'கேட்டால் மட்டும்’ செயல்படு​கிறார்கள். தானே படிக்கும் குழந்தைக்கும், 'அம்மா’ பார்க்கும்போது பயபக்தி​யாகப் படிக்கும் குழந்தைக்கும் உள்ள வித் தியாசம்​தான் இது!

 அ.குணசேகரன், புவனகிரி.

கழுகார் பதில்கள்!

ஆ.ராசா, இன்று பிரதமரைச் சந்தித்தால் என்ன கேட்பார்?

'மாட்டிக்கினீயா!’

கழுகார் பதில்கள்!