Published:Updated:

`வரி மேலாண்மை முறையாக இல்லாததால் ரூ.236.63 கோடி வருவாய் இழப்பு!’ - சி.ஏ.ஜி அறிக்கை

சி.ஏ.ஜி

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் 2020, 2021-ம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

`வரி மேலாண்மை முறையாக இல்லாததால் ரூ.236.63 கோடி வருவாய் இழப்பு!’ - சி.ஏ.ஜி அறிக்கை

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் 2020, 2021-ம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Published:Updated:
சி.ஏ.ஜி

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் 2020, 2021-ம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநிலத்தின் வருவாய், செலவு, கடன், வரி ஏய்ப்பு உள்ளிட்டவை குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2019-20-ம் ஆண்டில் மாநில அரசு ஈட்டிய வருவாய் ரூ.1.2 லட்சம் கோடி. இது மொத்த வருவாயில் 69 சதவிகிதமாக இருந்தது. மீதமுள்ள 31 சதவிகிதம், அதாவது, ரூ.54,176 கோடி மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டது. அதன்படி மொத்த வருவாய் 1.74 லட்சம் கோடி ரூபாய்.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

வரி தொடர்பான தணிக்கை

2018-19 ஆண்டைவிட வட்டி வரவுகள், ஆதாயப் பங்குகள், ஆதாயங்கள் 35.32 சதவிகிதமும், பயிர் வளர்ப்பு 71.3 சதவிகிதமும், காடு வளர்ப்பு மற்றும் வனவிலங்குப் பிரிவில் 42.68 சதவிகிதமும் சரிந்திருக்கின்றன. மாநிலத்தின் வருவாய் முந்தைய ஆண்டு 14,200.02 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், 2019-20-ல் 12,887.84 கோடி ரூபாயாகக் (9.24 சதவிகிதம்) குறைந்திருக்கிறது.

மாநிலத்துக்குள் உள்ளபடியான நிலுவைத்தொகை 30,908.32 கோடி ரூபாய். அதில் 12,451.84 கோடி ரூபாய் ஐந்து வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருக்கிறது. இதில் விற்பனை, வர்த்தகம் மீதான வரிகளே அதிகமாக இருக்கின்றன.

2019-20-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி., வணிக வரி, முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம், நில வருவாய் சம்பந்தமான பதிவுருக்களை ஆய்வுசெய்ததில் ரூ.236.63 கோடிக்குக் குறைவான வரி மதிப்பீடுகள், குறைவாக வரி விதித்தல் என வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மின்னணு வழிப்பட்டியல் தயாரித்த பிறகு பதிவு ரத்துசெய்யப்பட்டவர்கள் ரூ.80.78 கோடி அளவுக்கு வரி செலுத்தவில்லை. மின்னணு வழிப் பட்டியல் தயாரித்தவர்கள் ஜி.எஸ்.டி ஆர்3பி படிவம் தாக்கல் செய்யாததுடன் ரூ.49.43 கோடி வரி செலுத்தவில்லை.

`வரி மேலாண்மை முறையாக இல்லாததால் ரூ.236.63 கோடி வருவாய் இழப்பு!’ - சி.ஏ.ஜி அறிக்கை

வரி இல்லை எனக் கணக்கு தாக்கல் செய்தவர்கள் மின்னணு வழிப்பட்டியல் தயாரித்த பிறகு ரூ.8.22 கோடி வரி செலுத்தவில்லை.

25 சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.1.2 கோடிக்கு மாறுதல் தீர்வை கூடுதல் வரி தவறாக, அதிகமாக ஒதுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பதிவு அதிகாரிகள் ஆவணங்களைத் தவறாக வகைப்படுத்தியதால் முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் ரூ.1.09 கோடியாக குறைவாக வசூலிக்கப்பட்டது. தமிழ்நாடு மதிப்புக் கூட்டுவரி சட்டத்தின்படி, 40 முகவர்கள் குறித்த மதிப்பீட்டு அலுவலர்களின் கவனக்குறைவால் ரூ.4.16 கோடி வரிக்கு ரூ.48.88 லட்சம் வட்டி வசூலிக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு தரவுகள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.