Published:Updated:

ஜனவரி 24: வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் - சிறப்பு பகிர்வு

ஜனவரி 24: வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் - சிறப்பு பகிர்வு

ஜனவரி 24: வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் - சிறப்பு பகிர்வு

ஜனவரி 24: வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் - சிறப்பு பகிர்வு

ஜனவரி 24: வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் - சிறப்பு பகிர்வு

Published:Updated:
ஜனவரி 24: வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் - சிறப்பு பகிர்வு

வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் இன்று . உலகப்போரின் மாபெரும் நாயகர்களில் ஒருவராக கொண்டாடப்படும் மனிதர் இவர் . இந்தியா உட்பட பல தேசங்களில் ஆங்கிலேய அரசின் சார்பாக வீரராக பணியாற்றிய இவர் அப்பாவின் பின்புலம் கைகொடுக்க அரசியலில் குதித்து 1900 இல் எம்பி ஆனார் . ஆனால்,ஒரு காலத்திற்கு பிறகு இவரின் அரசியல் செல்வாக்கு மங்கியது .

அப்பொழுது இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதை எதிர்த்தே அரசியலில் கவனம் பெற ஆரம்பித்தார் . கன்சர்வேடிவ் கட்சியின் பால்ட்வின் அமைச்சரவையில் கருவூலம் இவர் கட்டுப்பாட்டில் வந்தது . 1940 களின் ஆரம்ப கட்டத்தில் ஹிட்லரோடு ஜாலியாக பேசி சிக்கல்களை  தீர்த்துவிடலாம் என நம்பிக்கொண்டிருந்த சாம்பர்லைன் அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்தார் .

நாடு முழுக்க அவரின் வழ வழ, கொழ கொழ பாணி எதிர்ப்புக்கு உள்ளாக இவர் பிரதமர் ஆனார் . உலகப்போரில் பிரான்ஸ் வீழ்ந்து இருந்தது ;இங்கிலாந்தில் குண்டுகள் வீசப்பட்டன . இவரே பல சமயம் பயந்து கொண்டு வானொலி நிலையம் போன கூத்தெல்லாம் நடந்தது .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜனவரி 24: வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் -  சிறப்பு பகிர்வு

"நான் உங்களுக்கு எதையும் கொடுக்கப்போவதில்லை -உதிரம், வியர்வை, உழைப்பு, கண்ணீர்   ஆகியவற்றை தவிர" என சொல்லி மக்களை உசுப்பேற்றினார் . எங்கெங்கும் போராடுவோம் ;இறுதிவரை போராடுவோம் என எழுச்சி ஊட்டினார் .

வீரர்களின் கூடாரம் ஒன்றிற்கு போனார் -ஒரே நிமிடம் ,"நெவெர் நெவெர் அண்ட் நெவெர் கிவ் இன் !"என சொல்லிவிட்டு நடையை கட்டிவிட்டார் .ஒரு மாபெரும் வீரராக ஆங்கிலேயர் மத்தியில் கொண்டாடப்பட்டாலும் இவர் தன் நாடு அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் அடுத்த நிலையிலேயே இருப்பதை உணர்ந்தே இருந்தார். நம்பிக்கையோடு நாட்டை வழிநடத்தினாலும் உண்மையான போர் நிலவரங்களை அறிந்துகொள்ள தன்னை புகழ்கிற நபர்களை ஒதுக்கி வைத்துவிட்டு லண்டனுக்கு வெளியே தனி இலாகா ஒன்றை அமைத்து அதனிடமிருந்து நிதர்சனமான
தகவல்களை பெற்றார்.

பல களங்களில் அமெரிக்காவின் "lend-lease "உதவி இல்லாமல் போயிருந்தால் பிரிட்டன் திண்டாடி இருக்கும். காலனி நாடுகளின் வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் போயிருந்தால் இங்கிலாந்துக்கும் பிரான்சின் நிலை ஏற்பட்டிருக்கும் . அடிபட்டாலும் அடிபடாத மாதிரியே விக்டரிக்கான வி முத்திரையை காட்டினார் .

சர்ச்சிலுக்கு ஷாம்பெய்ன்'  இல்லாமல் பொழுது போகாது. கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். ஒருமுறை அமெரிக்கா போயிருந்த பொழுது அவரை கொலை செய்ய தீட்டப்பட்டிருந்த திட்டத்தை

ஜனவரி 24: வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்த தினம் -  சிறப்பு பகிர்வு

கண்டறிந்த மேனஜேர் அதை அமெரிக்க அதிகாரிகளிடம் சொல்லவேண்டும் என்ற பொழுது ,"முதலில் ஷாம்பெய்ன் பாட்டிலுக்கு ஆர்டர் சொல்லுங்கள். குடித்துவிட்டு போலீசிடம் சொல்லிக்கொள்ளலாம் !" என்றார் சர்ச்சில்

இந்தியாவுக்கு விடுதலை தருவதை வலிமையாக எதிர்த்தார் ; காந்தியை அரைநிர்வாண பக்கிரி என கொச்சையாக விமர்சனம் செய்தார் ; காந்தி உண்ணாநோன்பு இருந்த பொழுது "இன்னும் சாகவில்லையா இவர் ?" என வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார் .

அவரின் நையாண்டி வெகு பிரசித்தமானது. ஒரு பெண்மணி நாடாளுமன்றத்தில் ,"நீங்கள் என் கணவராக இருந்திருந்தால் விஷத்தை கொடுத்திருப்பேன் உங்களுக்கு !" என்று சொல்ல ,"நீ என் மனைவியாக இருந்தால் விஷத்தை குடித்து நிம்மதியாக கண்ணை மூடியிருப்பேன் !" என்றார் இவர்

பெர்னார்ட் ஷா இவரை தன் நாடகத்துக்கு இரண்டு நுழைவுச்சீட்டுகளை அனுப்பி அழைத்திருந்தார். கூடவே ஒரு சீட்டும் இணைத்திருந்தார். ,"உங்கள் நண்பருடன் வரவும் ! அப்படியொருவர் இருந்தால் !" இவர் டிக்கெட்டுகளை திருப்பி ஒரு துண்டுசீட்டை மட்டும் இணைத்து அனுப்பினார். "நாளை வரமுடியாது. அடுத்த வாரம் வரப்பார்க்கிறேன். அதுவரை நாடகம் இருந்தால் !"

இந்தியா மக்கள் பஞ்சத்தால் இறந்த பொழுது உணவுக்கப்பல் அனுப்பமாட்டேன் என சொல்லி பல லட்சம் மக்களை சாகவிட்டவர் இவர் . உலகப்போரில் இங்கிலாந்தை வெற்றியடைய செய்தாலும் இவரை விட்டு நாட்டை மறுநிர்மாணம் ய்ய அட்லியை மக்கள் பிரதமர் ஆக்கினார்கள் .

மீண்டும் பத்து  வருடம் கழித்து பிரதமர் ஆனார்  .இவரின் எழுத்து அசாத்தியமானது .உலகப்போர் பற்றிய இவரின் நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது . மூன்று தடவை மாரடைப்பு, எட்டு தடவை நிமோனியா
ஆகியவற்றில் இருந்து தப்பி சாதித்த சர்ச்சில் உடல் நிலை கெட்டு இதே நாளில் 90 வயதில் மரணமடைந்தார்

- பூ.கொ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism