Published:Updated:

ஆளுநருடன் அதிருப்தி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பின்னி சந்திப்பு!

ஆளுநருடன் அதிருப்தி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பின்னி சந்திப்பு!
ஆளுநருடன் அதிருப்தி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பின்னி சந்திப்பு!
ஆளுநருடன் அதிருப்தி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பின்னி சந்திப்பு!

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ வினோத்குமார் பின்னி, டெல்லி ஆளுநரை சந்தித்து அமைச்சர் மீது புகார் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியமைத்தபோது அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று அதிருப்தி வெளிப்படுதியவர் வினோத் குமார் பின்னி. பின்னர் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரியதாகவும் அதற்கு கட்சி மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

பத்து நாட்களுக்கு முன்னர், டெல்லி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற தவறிவிட்டதாகவும், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி போல் நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த பின்னணியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக நேற்றிரவு அறிவித்தது.

##~~##
இந்நிலையில், டெல்லி மாநில ஆளுநரை, அதிருப்தி எம்எல்ஏ வினோத்குமார் பின்னி இன்று சந்தித்து பேசினார். அப்போது, சட்ட அமைச்சர் அமைச்சர் சோம்நாத் பார்தி விவகாரம் குறித்து புகார் கூறினார்.
சோம்நாத் பார்தி தலைமையில் நடந்த சோதனை பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக பின்னி தெரிவித்தார்.
டெல்லியில் இரவு நேர சோதனையில் உகாண்டா பெண்கள் தாக்கப்பட்டதாக அமைச்சர் சோம்நாத் பார்தி மீது புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.