மறுபடியும் சோக பூமி ஆகி இருக்கிறது சிவகாசி. வழக்கம்போலவே நீதி விசாரணை உள்ளிட்ட இன்னபிற கண்துடைப்பு நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

அரசின் கணக்குப்படியே பார்த்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 84 வெடி விபத்துகள் இங்கே நடந்திருக்கின்றன; 185 பேர் பலியாகியிருக்கிறார்கள்; 215 பேர் காயப்பட்டுத் துடித்திருக்கிறார்கள். ஆனால், வெறும் 14 வழக்குகளில் மட்டுமே 'குற்றவாளிகள்' அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அரசு இயந்திரத்துக்கு மனித உயிர்கள் எவ்வளவு துச்சம் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே.

சிவகாசி விபத்துகளின் ஆரம்பப் பொறி தீ அல்ல; ஊழல்தான். 35 கட்டடங்களுக்கு அனுமதி வாங்கப்பட்ட அந்தத் தொழிற்சாலைக்கு 45 கட்டடங்கள் இருந்தன; 120 பேர் வேலை பார்ப்பதாகக் கணக்குக் காட்டப்பட்ட இடத்தில் 320 பேர் வரை வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்; பாதிப் பேருக்குக் காப்பீடு இல்லை என்றெல்லாம் வரும் தகவல்கள் சொல்லும் சேதி என்ன?

விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், பெரும் தவறுகள் நேர்கின்றபோது அவற்றை மூடி மறைப்பதற்கு விலைபோகவும் அதிகாரிகள் தயாராக இருப்பதால்தானே, சோகம் மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது? வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையில் மட்டும் கோடிக்கணக்கில் லஞ்சப் பணம் புரள்கிறது என்பது அரசுக்குத் தெரியாத விஷயமா என்ன? இத்தனை உயிர்களைப் பறிகொடுத்த பிறகுதான் தீக்காயங்களுக்கான உயர் சிகிச்சை தரும் மருத்துவமனையை சிவகாசியில் அமைப்பதுபற்றி 'சிந்திக்கிறது' நம் அரசாங்கம்.

ஊழல் மலிந்த தேசத்தில், உயிர்களையுமா இத்தனை மலிவாக்குவது!