ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கு.ஆனந்தன், நன்னாட்டாம்பாளையம்.

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்ட விழாவில், ரஜினியின் பேச்சு சரிதானா? அந்த இடத்தில் அப்படித்தான் பேச வேண்டுமா?

ரஜினி பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இறப்புக்குப் பிறகும் புகழ் தொடர வேண்டும் என்று சொல்வது தத்துவார்த்தப் பேச்சே தவிர, தற்குறிப்பேச்சு அல்ல!

 ரேவதிப்ரியன், ஈரோடு-1.

கழுகார் பதில்கள்!

பிடிக்காத தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்துவது, அவர்களது உருவப் பொம்மைகளை எரிப்பதுபோன்ற நிகழ்வுகள் எந்தக் காலத்தில் ஆரம்பித்தது?

சிலைகள் வைக்கப்பட்ட காலத்திலேயே, அவற்றை சேதப்படுத்துவதும் தொடங்கி விட்டது. எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான ஓர் அடையாளமாக இருந்தது... இப்போது அற்ப சந்தோஷமாகவும், வன்மம், வக்கிரத்தின் உச்சமாகவும் மாறிவிட்டது!

 சம்பத் குமார், பொன்மலை.

கழுகார் பதில்கள்!

ஊழல் வழக்கில் மாட்டுபவர்கள் எல்லாம், 'நான் அந்த நிறுவனத்தில் இருந்து முன்பே விலகிவிட்டேன்’ என்று ஒரே மாதிரி அறிக்கை தருகிறார்களே?

##~##

விலகிவிட்டதால், முன்பு செய்த தவறுகள் மறைந்து விடாது. புத்திசாலித்தனமாய் பேசு கிறோம் என்று நினைத்துச் சொல்லும் அபத்தமான பதில்கள் இவை. கிரானைட் விவகாரத்தில் ஒலிம்பஸ் என்ற நிறுவனத்தை துரைதயாநிதியும் நாகராஜ் என்பவரும் சேர்ந்து தொடங்கி இருக்கிறார்கள். இரண்டு பேருமே இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகி விட்டனர். அப்படியானால், அந்த நிறுவனம் யாருடையது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

நிலக்கரி விவகாரத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து ஜெகத்ரட்சகன் விலகிவிட்டார். ஆனால், அவர் மகன்தான் கவனித்துக்கொள்கிறார். அந்த நிறுவனங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லும் அப்பா, மகனை மாட்டி விடுகிறாரா?

 வி.பரமசிவம், சென்னை-25.

கழுகார் பதில்கள்!

சென்னைக் கல்லூரிகள், ரவுடிகளின் கூடாரமாக மாறிவருவது பற்றி?

விடுதலையை வேண்டி நின்ற போராட்டத்திலும், இந்தியை எதிர்த்து நின்ற போராட்டத்திலும் முன்னணியில் அணி வகுத்தவர்கள் சென்னைக் கல்லூரி மாணவர்கள். ஆனால் இன்றைக்குக் கத்திக் குத்துகள், அரிவாள் ஆயுதங்களின் வெளிப்பாடுகள். ஒரு கல்லூரி மாணவர்களுக்கும், இன்னொரு கல்லூரி மாணவர்களுக்கும் பிடிக்கவில்லை. ஒரு கல்லூரிக்கு உள்ளேயும் சிக்கல்கள். இவை எதுவும் கொள்கை மோதல்கள் இல்லை, கோஷ்டி மோதல்கள். மாணவர் பேரவைத் தேர்தல்கள் சாதி எண்ணெய் ஊற்றப்பட்டு பற்றி எரிகின்றன. இதில் பச்சையான சுயநலம் தவிர வேறு நோக்கம் இல்லை. வேறு எந்தத் தகுதியும் இல்லாததால் கத்தி மூலமாக பலரும் தலைவராக முயற்சிக்கிறார்கள். இதன் காரணமாக கல்லூரிப் பருவம் முடிந்ததும் இவர்கள் அடையப்போவது அவமானமும் விரக்தியும் மட்டுமே. மிகப்பெரிய புரட்சி நடந்த காலகட்டத்தில்கூட மாணவர்கள் மூன்று விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார் லெனின். அந்த மூன்று, 'படிப்பு... படிப்பு... படிப்பு!’. இது எல்லாக் கல்லூரிக ளுக்கும் பொருந்தும்.

 கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

கழுகார் பதில்கள்!

'இந்தியா வந்த இலங்கை ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்புவது சரி. ஆனால், விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்புவது சரியல்ல’ என்கிறார்களே?

  நீக்ரோ மக்களை நிற வெறியோடு தென் ஆப்பிரிக்கா நடத்துகிறது என்பதற்காக, பல்வேறு போட் டிகளில் அந்த நாடு கலந்து கொள்வதற்குத் தடை இருந்தது வரலாறு. அங்கே நிறவெறி... இலங்கையில் இனவெறி!

 வீ.இராஜு,பெரியகுளம்.

கழுகார் பதில்கள்!

சினிமாவால், கவிஞர்களால் மக்களுக்கு என்ன நன்மை? மக்களால்தானே அவர்கள் பலன் அடைகிறார்கள். அவர்களுக்கு ஏன் பரிசுகளும் பாராட்டுகளும்?

தாகூரால் இந்தியாவுக்கும், பாரதியால் தமிழகத்துக்கும் அழிக்க முடியாத பெருமை தானே கிடைத்தது. சத்யஜித் ரேயும் மிருணாள் சென்னும் இந்திய சினிமாவை, உலக சினிமாக் களின் வரிசையில் நிறுத்தியவர்கள். வறண்ட மனித மனங்களில் கலைத் தாகம் திரண்டது பல திரைப் படங்களால், சில கவிஞர்களால் என்பதை மறுக்கவே முடியாது. காலப்போக்கில் இதில் களைகள் அதிகம் வளர்ந்ததை வேண்டுமானால் விமர்சனம் செய்யலாம்!

 ஏ.கே.கலீல் ரஹ்மான், ஆழ்வார்திருநகரி.

கழுகார் பதில்கள்!

காவிரி ஆணையம் கூடுவதால் தமிழகத்துக்கு கைமேல் பலன் கிடைக்குமா?

ஆணையம் கூடுவதால் மட்டுமே அது கிடைக்காது. கர்நாடகம் பெரியமனது வைத்து, தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே தமிழகத்துக்குப் பயன்!

 ஆர்.அஜிதா, கம்பம்.

கழுகார் பதில்கள்!

'அண்ணா வளைவை அகற்றாமல் மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்கிறாரே முதல்வர்?

முதல்வரின் இந்த முடிவு தவறானது. வளைவை அகற்றாமல் அந்த இடத்தில் மேம்பாலம் கட்டுவது சிரமம் என்பதே உண்மை. ஓரமாய், அமைதியாய் இருந்த அண்ணா நூலகத்தையே மருத்துவமனையாக மாற்ற நினைத்தவர், இந்த வளைவை அகற்ற ஏன் யோசிக்க வேண்டும்?

தமிழகத்தைப் பல வழிகளில் நிமிரவைத்த அண்ணா, இந்த வளைவுகளை எடுப்பதால் குறைந்து விட மாட்டார்.

 காந்திலெனின், திருச்சி.

கழுகார் பதில்கள்!

கிரானைட் விவகாரம் பற்றி கருணாநிதி ஏன் வாய் திறக்கவில்லை?

தொண்டைக்குள் மாட்டிக்கொண்டது 'கல்’. பிறகு எப்படிப் பேச முடியும்?

 வி.பரமசிவம், சென்னை-25.

கழுகார் பதில்கள்!

'வேலை செய்யாவிட்டால் சம்பளம் இல்லை என்ற வரைமுறைக்குள் எம்.பி-க்களையும் கொண்டு வர வேண்டும்’ என்கிறாரே சீதாராம் யெச்சூரி?

இதைத் தொழிற்சாலைகளுக்கும் விரிவுபடுத்த விரும்புவாரா யெச்சூரி?

கழுகார் பதில்கள்!