ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

காவல் துறை... பா.ம.க-வின் ஏவல் துறை!

வெளுத்துக்கட்டும் வேல்முருகன்

##~##

பா.ம.க-வில் எப்போது விரிசல் விழுந் ததோ, அப்போது முதல் வடதமிழகம் கொந்தளிப்பு அடங்காமல் இருக்கிறது. 

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன் போகும் இடம் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்னை, அடிதடி, ரகளையை பா.ம.க. தூண்டி விடுவதாகக் குற்றச்சாட்டு கிளம்புகிறது. வேல்முருகன் ஆட்களும் பதில் கொம்பு சுற்றி வருகிறார்கள். இந்த நிலையில், வேல்முருகன் மீதே கொலைமுயற்சி வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது.

பொதுக்கூட்டம் ஒன்றுக்கு புறப்பட்டுக்கொண்டு இருந்த வேல்முருகனை வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தோம்.

''உங்களுக்கும் பா.ம.க-வுக்கும் நடக்கும் பங்காளிச் சண்டை முடிவுக்கே வராதோ?''

''பா.ம.க-வில் இருந்து ராமதாஸால், அவருடைய கும்பலால் வெளியேற்றப்படும் யாரும் வெளியில் வந்து தனியாகக் கட்சித் தொடங்கி மக்களைச் சந் திக்க, எந்தக் காலத்திலும் அவர்கள் அனுமதித்ததே இல்லை. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால், நான் சொல்வது உண்மை என்பது உங்களுக்குப் புரியும். பேராசிரியர் தீரன் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினார்கள். ஏ.கே.நடராஜன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலால், அவர் இன்றுவரை கோமாவில் இருக்கிறார். வன்னியர் சங்கத்தை வாழப்பாடி ராமமூர்த்தி உருவாக்கியபோதும், தாக்குதலுக்கு உள்ளானார். வீர வன்னியர் பேரவையை ஆரம் பித்த ஜெகத்ரட்சகன் பல மாவட் டங்களில் தாக்கப்பட்டார். கட்சியைக் கலைத்துவிட்டு அவர் தி.மு.க-வில் சேரும் அளவுக்குத் தொல்லை கொடுத்தனர்.

காவல் துறை... பா.ம.க-வின் ஏவல் துறை!

அதே நிலைமைதான் எனக்கும். ஆனால், ராமதாஸின் உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுகிற ஆள் நான் கிடையாது. எங்கள் கட்சியில் சேர்ந்துகொண்டிருக்கும் லட்சக்கணக்கான உறுப்பினர்களைப் பார்த்து ராமதாஸுக்குப் பயம் வந்துவிட்டது. நாங்கள் வளர்ந்து வருவதைத் தாங்கிக்கொள்ள முடியாத ராமதாஸ் கும்பல், நான் கூட்டம் போடும் இடங்களில் எல்லாம் குண் டர்களையும் அடியாட்களையும் வைத்துத் தாக்குதல் நடத்துகிறார்கள். காடுவெட்டி கிராமத்துக்கு நான் கொடிஏற்றச் சென்றபோது குருவின் ஆட்கள் என் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், நாங்கள் அவர்களை எதிர்த்து எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.''

''போலீஸில் புகார் செய்ய வேண்டியதுதானே?''

''போலீஸாரிடம் புகார் கொடுத்தால், பா.ம.க- காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. பா.ம.க-காரர்கள் மீதுதான் தவறு என்று தெரிந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். காவல்துறையில் இருக்கும் சில உயர் அதிகாரிகள் பா.ம.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள்.

முதல்வரை, பா.ம.க. மோசமாக விமர்சனம் செய்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் அந்தக் கறுப்பு ஆடுகளை முதல்வர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், காவல் துறை ராமதாஸின் ஏவல்துறையாக மாறிவிடும்!''

''நீங்கள், மற்ற கட்சிகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு அ.தி.மு.க-வை விமர்சனம் செய்வது இல்லையே... அப்படி என்ன அ.தி.மு.க. மீது பாசம்?''

''யார் மீதும் எங்களுக்குத் தனிப்பட்ட கோபமோ, பாசமோ கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் எவ் வளவோ நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதை எல்லாம் நிச்சயம் பாராட்டித்தானே ஆக வேண்டும்? கண்ணை மூடிக்கொண்டு யாரையும் எதிர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது? முல்லை பெரியாறு விஷயத்தில் கேரளத் தைக் கண்டித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியது... மாநில அரசின் உரிமைகளுக்காக மத்திய அரசிடம் வாதாடியது... தமிழர் சார்ந்த உரிமைகளுக்குக் குரல் கொடுப்பது என்று நல்லது செய்யும் முதல்வரை பாராட்டுவதில் என்ன தப்பு? அதேநேரத்தில், 'விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நட வடிக்கை எடுங்கள்’ என்று, முதல்வருக்கு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, விஜயகாந்த்தோ யாரும் எங்களுக்கு எதிரி கிடையாது. தனிப்பட்ட நபர்களைப்பற்றி நான் எங்கேயும் விமர்சனம் செய்வதும் இல்லை. அவர்களுடைய கட்சி கொள்கைகளைப் பற்றி மட்டும்தான் பேசுகிறேன்.''

''நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி விட்டீர்களா..?''

''எங்கள் கட்சி ஆறுமாதக் குழந்தை. வெளி உலகத்தைத் தெரிந்துகொள்ள எங்களுக்கு இன்னும் அவகாசம் தேவைப்படுகிறது. எடுத் தோம் கவிழ்த்தோம் என்று ஓட்டு அரசியலில் இறங்கி விட முடியாது. அதனால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்று நாங்கள் இன்னும் முடிவு செய்யவே இல்லை. அது, எங்கள் கட்சியின் பொதுக்குழு... செயற்குழு எல்லாவற்றையும் கூட்டி முடிவு செய்ய வேண்டிய விஷயம்!''

- கே.ராஜாதிருவேங்கடம்

படம்: ஜெ.வேங்கடராஜ்