ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்!

'ராணுவத்தை என்னிடம் ஒப்படைத்தால் ஒரே மாதத்தில் நாட்டை சீர்படுத்தி விடுவேன்’ என்று, பால்தாக்கரே கூறுகிறாரே?

அவரது குடும்பத்துக்குள் நடக்கும் சண்டையையே அவரால் சீர்படுத்த முடியவில்லை. இதில், நாட்டை எங்கே சீர்படுத்துவது..? மும்பையில் நடக்கும் வம்பை இந்தியா முழுக்கப் பரவவிட ஆசைப்படுகிறார் பால் தாக்கரே!

 என்.காளிதாஸ், சிதம்பரம்.

கழுகார் பதில்கள்!

பிரதமர் பதவிக்கு சுஷ்மா ஸ்வராஜ் பொருத்தமானவரா?

##~##

அத்வானியின் நம்பிக்கையைப் பெறுவதால் மட்டுமே சுஷ்மா, பிரதமர் ஆகிவிட முடியாது. டெல்லி மீடியாக்களில் கருத்துச் சொல்வதாலும் அந்தப் பதவியை அடைந்து விட முடியாது. அவரது நாடாளுமன்றச் செயல்பாடுகள் அத்தனை நம்பிக்கை தருவதாக இல்லை. பி.ஜே.பி. பிரமுகர்களில் ஒரு வராகச் சொல்லலாமே தவிர, பிரதமர் வேட்பாளர் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்!

 கே.கணேஷ், வேலூ-1.

கழுகார் பதில்கள்!

'மத்தியப் பிரதேசத்தில் புத்தர் கல்வி நிறுவன விழாவுக்கு ராஜபக்ஷேவை அழைத்ததில் தவறு இல்லை’ என்று, முன்னாள் மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி கூறியிருப்பது குறித்து..?

வடக்கில் வாழ்பவர்கள் காங்கிரஸில் இருந்தாலும் பாரதிய ஜனதாவில் இருந்தாலும் தமிழ்நாட்டு உணர்வுகளை உணராதவர்கள் என்பதற்கு இதுவே சான்று. ஐ.நா. அவையில் இலங்கைக்கு எதிரான தீர் மானம் வென்று இருக்கும் நிலையில், அந்த நாட்டின் அதிபரை அழைத்து விழாக்கள் நடத்துவது, மனித உரிமைச் செயல்பாட்டுகளுக்கு முரணானது அல் லவா? அதுவும் அகிம்சையைப் போதித்த புத்தரின் விழாவில்!

இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், பாரதிய ஜனதாவையும் தங்களது கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரகசியத் திட்டத்தால், இத்தகைய ஏற்பாடுகளை ராஜபக்ஷே முன்னெடுக்கிறார். அதற்கு, சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களும் பலி யாவது தமிழகத்தின் துரதிர்ஷ்டம்!

 என்.வி.சக்கரவர்த்தி, அத்தனூர்.

கழுகார் பதில்கள்!

மத்தியில் அங்கம் வகிக்கும் ஒரே காரணத்துக்காக நடக்கும் எல்லா ஊழலுக்கும் தி.மு.க-வுக்கும் பங்கு உண்டு என்று சொல்வது நியாயமா?

சேது சமுத்திரத் திட்டம் எங்களால் வந்தது, செம்மொழி என்ற அந்தஸ்தை வாங்கிக் கொடுத்த​வர்கள் நாங்கள்... என்று நல்லவை அனைத்துக்கும் சொந்தம் கொண்டாடுபவர்களுக்கு, தவறான விவகாரங்களில் மட்டும் பங்கு இருக்காதா? அமைச்சரவை என்பதே கூட்டுச் செயல்பாடு. ஆட்சியை ஆதரிப்பது என்பது அனைத்தையும் ஆதரிப்பதுதான். முறைகேடுகள் நடப்பது தெரிய வந்தால் மனச்சாட்சிப்படி, அதைக் கண்டித்து உடனே வெளியேற வேண்டும். அதைச் செய்யாமல் இருந்தால் பங்கு உண்டு என்றுதான் நினைக்க வேண்டி வரும்!

நிலக்கரி ஊழலைப் பற்றி கருணாநிதியிடம் நிருபர்கள் கருத்துக் கேட்டனர். 'அது சொத்துக் குவிப்பு வழக்கைவிடப் பெரிதா?’ என்று எதிர்க் கேள்வி கேட்டார். ஊழல் நடந்தது என்று சொல்ல வேண்டும், நடக்கவில்லை என்று நியாயப்படுத்த வேண்டும். மாறாக, இன்னொன்றைப் பற்றிப் பேசினால் என்ன அர்த்தம்? எனவே, காங்கிரஸின் அனைத்துக் கெட்ட பெயரிலும், தி.மு.க-வும் பங்கேற் கவே வேண்டும்!

 சங்கமித்ரா நாகராஜன், கோவை-6.

கழுகார் பதில்கள்!

ராஜபக்ஷேவை அதிகமாகப் புகழ ஆரம்பித்து விட்டாரே சோ?

அவர், அந்தக் காலத்தில் ஜெயவர்த்தனாவையே அதிகம் புகழ்ந்தவர். இது, அவருடைய ஜீவகாருண்யச் சிந்தனையைக் காட்டுகிறது!

 ராம், சேலையூர்.

கழுகார் பதில்கள்!

ஆகஸ்ட் 15 அல்லது அக்டோபர் 2 ஆகிய ஏதாவது ஒரு தேதியில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு ஜெயலலிதா யோசித்து வருகிறார் என்று கழுகார் கூறியிருந்தார். அது என்ன ஆச்சு?

முதலமைச்சரின் மனதில் மதுவிலக்கு குறித்த சிந்தனை ஓட ஆரம்பித்து இருக்கிறது என்பது உறுதி. அது, அமலாகும் காலம் எப்போது என்பதைப் பொறுத்​திருந்தே பார்க்க வேண்டும்!

 நென்மேலி.ஆர்.நந்தகுமார், திருவண்ணாமலை.

கழுகார் பதில்கள்!

'நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்’ என்று, அ.தி.மு.க-வினருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தாங்கள் நினைக்கிறீர்கள்?

பாரதிய ஜனதாவும், ம.தி.மு.க-வும்!

 இரா.கல்யாணசுந்தரம், அனுப்பானடி.

கழுகார் பதில்கள்!

நாடாளுமன்றத்தைப் பாராளுமன்றம் என்று குறிப்பிடுவது தவறு இல்லையா?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத் தில் பாராளுமன்றம் என்று அழைக்கப்பட்டது. அவர்கள் உலகத்தின் பல பகுதியை தங்களது ஆளுகையின் கீழ் வைத்திருந்தனர். பாரை ஆண்டவர்கள் என்பதால் பாராளுமன்றம் என்ற அடைமொழி பொருத்தமாக இருந்தது. இன்று, நாடாளு​மன்றம் என்பதே சரி!

 இரா.தோணி, தூத்துக்குடி.

கழுகார் பதில்கள்!

முன்னாள் எம்.எல்.ஏ. காதர் பாட்சா என்ற வெள்ளச்சாமியின் படுகொலை குறித்து...?

துரதிர்ஷ்டவசமான சம்பவம் அது. அந்தக் கொலை நிகழ்வின் தொடர்ச்சியாக தென்மாவட்டத்தில் எந்த வன்முறையும் இல்லாமல் இருந்ததுதான் ஆறுதல். தனிமனித வெறுப்பின் காரணமாக அந்தக் கொலை நடந்துள்ளது என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தனர் மக்கள். அதேபோன்று, மதுரையில் சில சமூக விரோதிகள் தங்களது சுய நலனுக்காக அம்பேத்கர், இமானுவல் சேகரன் சிலைகளை உடைத்தனர் என்ற உண்மையையும் உணர்ந்தே, மக்கள் அமைதியாக இருந்தனர்.

மலிவான சாதி உணர்ச்சியைத் தூண்டிவிடக்கூடிய உணர்ச்சிமயமான பிரச்னையில், இரண்டு சமூகத்​தவர்களும் யதார்த்தம் உணர்ந்து நடந்துகொண்டது தமிழ் சமூகத்தில் வரவேற்கத்தக்க வித்தியாசம்!

கழுகார் பதில்கள்!

எம்.சிவகுமார், வேதாரண்யம்.

கழுகார் பதில்கள்!

மாபெரும் ஊழல்களின் சைபர்களை மட்டுமே எண்ணிக்​கொண்டு இருக்கும் ஏழை இந்திய வாக்காளனின் எதிர்காலம் என்ன ஆகும்?

'இது பூஜ்யங்களின் ராஜ்யம்’ என்று எழுதினார் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். ஒரு சில தனிமனிதர்களுக்காக கோடிக்கணக்கான மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதை இன்னமும் நம் மக்கள் உணரவில்லை. 'கஞ்சி குடிப்பதற்கு இலார். அதன் காரணங்கள் எவை எனும் அறிவும் இலார்!’ என்று, 90 ஆண்டுகளுக்கு முன் பாரதி பாடியது இன்று நிதர்சனமான உண்மையாக இருக்கிறது!

 சிபி.கணேசன், பேராவூரணி.

கழுகார் பதில்கள்!

கிரானைட் ஊழலில் துரைதயாநிதி கைது செய்யப்பட்டால், கருணாநிதியின் நிலைப்பாடு என்ன?

கனிமொழி கைது செய்யப்பட்டபோது என்ன நிலைப்பாடு எடுத்து விட்டார் கருணாநிதி? சும்மாதானே இருந்தார். அதுமாதிரித்தான் இப்போதும்!

கழுகார் பதில்கள்!