Published:Updated:

தலையங்கம் - சில்லறை தந்திரங்கள்!

தலையங்கம் - சில்லறை தந்திரங்கள்!

தலையங்கம் - சில்லறை தந்திரங்கள்!

தலையங்கம் - சில்லறை தந்திரங்கள்!

Published:Updated:
தலையங்கம் - சில்லறை தந்திரங்கள்!

ள் மனதில் ஊறும் வக்கிரத் துணிச்சல் ஒன்று, வாய் தவறி வெளியே வந்துவிட்டது. 'போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலைப் பற்றி எதிர்க் கட்சிகள் எவ்வளவோ கூவின. ஆனால், மக்கள் அதை மறந்துவிடவில்லையா? அதுபோலவே, நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் கிளம்பும் கூச்சலையும் மறந்துவிடுவார்கள். சோப்பு போட்டுக் கழுவினால் கையைவிட்டுப் போகக்கூடியதுதான் இந்தக் கறை...' என்று கேலிச் சிரிப்பை வடியவிட்டபடி சொல்லியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே. அதே மேடையில் அமர்ந்திருந்த சக காங்கிரஸ் தலைகளும் கெக்கலி கொட்டிச் சிரித்திருக்கின்றன!

 'மிஸ்டர் க்ளீன்' என்ற பிம்பத்தோடு அரியணைக்கு வந்த ராஜீவ் காந்தி, போஃபர்ஸ் விவகாரத்தில் எந்த அளவுக்குத் தன் மீது சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டார் என்பது உலகப் பிரபலம். மக்கள் எதையுமே சுலபத்தில் மறக்க மாட்டார்கள் என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், தங்கள் தவறுகள் வெளிப்பட்டு தலை குனியும் நிலை வரும்போது எல்லாம், தூங்கிக்கொண்டு இருக்கும் பழைய பூதங்களில் எதையாவது ஒன்றைத் தட்டி எழுப்பி... ஒட்டுமொத்தக் கவனத்தையும் திசை திருப்பும் காரியத்தில் இறங்குவார்கள். அது காமன் வெல்த் போட்டி ஊழல் ஆகட்டும்... அலைக்கற்றை அநியாயம் ஆகட்டும்... மாவோயிஸ்ட் கிளர்ச்சி ஆகட்டும்... நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் தங்கள் கதை நாறும்போது எல்லாம்... அதை முதல் பக்கச் செய்தியில் இருந்து பின்னுக்குத் தள்ளுவதற்காக காங்கிரஸ் அரங்கேற்றும் தந்திரக் கூத்துகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற பூதம் இப்போது பாட்டிலைவிட்டு வெளியில் வந்திருப்பது இந்த நோக்கில்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபட்ட கட்சி என்ற சரித்திரப் பெருமைக்காகத்தான் காங்கிரஸுக்கு இன்னும்கூட வாக்களிக்கிறார்கள் மக்கள். ஆனால், நடப்பதை எல்லாம் பார்த்தால், அந்தப் பழைய நினைப்பையும் இவர்களே மக்கள் மனதில் இருந்து மறக்கடித்துவிடுவார்கள் போலிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism