Published:Updated:

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கு முற்றுப்புள்ளி: சொல்கிறார் காங்கிரஸ் தலைவர்

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கு முற்றுப்புள்ளி: சொல்கிறார் காங்கிரஸ் தலைவர்
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கு முற்றுப்புள்ளி: சொல்கிறார் காங்கிரஸ் தலைவர்
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கு முற்றுப்புள்ளி: சொல்கிறார் காங்கிரஸ் தலைவர்

புதுடெல்லி: "சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவிவேதி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போதைய இடஒதுக்கீடு முறையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். சுயநலவாதிகளால்தான் இது இதுவரை நடக்காமல் போய்விட்டது. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய இனங்களில் உண்மையிலேயே தேவைப்படுகிறவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறதா? இந்த வகுப்புகளில் மேல்தட்டில் இருக்கிறவர்கள்தான் இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகின்றனர்.

சமூக நீதிக்கும், சாதிய முறைக்கும் வித்தியாசம் உண்டு. சமூக நீதி என்ற கருப்பொருள்தான் இப்போது சாதிய முறையாக மாறிவிட்டது. இந்த முறையை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்களின் கருத்துக்களை ராகுல் காந்தி நேரிடையாக கேட்டுள்ளார். நான் இப்போது அவரை வலியுறுத்துகிறேன். இதுதொடர்பாக அவர் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும். எல்லா வகுப்பினரையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வந்து பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

##~~##
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு பற்றி பேசப்பட வேண்டும். அப்போதுதான் சமத்துவ அடிப்படையிலான ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நான் கூறுவதற்கு காரணம் உண்டு. காலங்கள் மாறி இருக்கின்றன. தற்போது சாதிய முறைக்கு வெளிப்படையாக வக்கலாத்து வாங்குகிற தார்மீக துணிச்சல் யாருக்கும் கிடையாது. 1960 களில் சாதியத் தடைகளை தகர்த்து எறிய உருவான இளைஞர் இயக்கத்தின் மூலம்தான் நான் அரசியலுக்கு வந்தேன்" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரே இப்படி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.