Published:Updated:

பா.ஜ.க துணைத் தலைவர் ஹெச்.ராஜா மீது டி.ஜி.பி.யிடம் புகார்!

பா.ஜ.க துணைத் தலைவர்  ஹெச்.ராஜா மீது டி.ஜி.பி.யிடம் புகார்!
பா.ஜ.க துணைத் தலைவர் ஹெச்.ராஜா மீது டி.ஜி.பி.யிடம் புகார்!
பா.ஜ.க துணைத் தலைவர்  ஹெச்.ராஜா மீது டி.ஜி.பி.யிடம் புகார்!

சென்னை: மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் திராவிடர் கழகம், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் அளித்த புகார் மனுவில், கடந்த மாதம் 5ஆம் தேதி, இந்து தர்ம பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் மற்றும் பெரியாரை அவதூறாகப் பேசியுள்ளதாகவும், அதன் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

##~~##
இதனால், சட்டம்-ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதாகவும், மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் பேசிய அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.