Published:Updated:

தெலங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி: மன்மோகன்சிங்!

விகடன் விமர்சனக்குழு
தெலங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி: மன்மோகன்சிங்!
தெலங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி: மன்மோகன்சிங்!
தெலங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி: மன்மோகன்சிங்!

புதுடெல்லி: இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தெலங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில் இன்று தொடங்குகிறது. வருகின்ற 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 12 அமர்வுகள் நடக்கவுள்ளன. இதில், சர்ச்சைக்குரிய தெலங்கானா தனி மாநில மசோதா உட்பட 39 மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இடைக்கால ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டையும் தாக்கல் செய்து நிறைவேற்ற உள்ளது.

இந்த நிலையில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத், அனைத்து கட்சி தலைவர்களை கூட்டி நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் நேற்று அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் பிரதமர் மன்மோகன் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ''நிச்சயமாக முக்கியமான தெலங்கானா பிரச்னை இந்த கூட்டத் தொடரில் வரும். பல்லாண்டு காலமாக நடந்து வந்த நீண்ட விவாதத்துக்கு பிறகு, நாடாளுமன்றம் விவேகமாக செயலாற்றி, மசோதாவை நிறைவேற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஊழல் தடுப்பு மசோதாக்கள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மத வன்முறை தடுப்பு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. நாடாளுமன்றம் விவேகத்துடன் செயலாற்றி, அத்தியாவசியமான பணிகளை செய்து முடிக்கும் என மனமார நம்புகிறேன். இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரின் கவலையுமாக இருக்கும். இடைக்கால பட்ஜெட்டின்போதும் கூட, எதிர்க்கட்சிகள் புயலை கிளப்புகிற பிரச்சினைகளை எழுப்ப வாய்ப்பு உண்டு" என்று அவர் கூறினார்.

##~~##
இதனிடையே நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, ''தெலங்கானா விவகாரத்தில், பிரதமர் அனுப்பி வைத்த மசோதாவை அவர்களது முதல் அமைச்சரே நிராகரித்து இருக்கிறார். அந்த வகையில், தெலங்கானாவில் ஆதரவு, எதிர்ப்பு அரசியலை காங்கிரஸ் கையாண்டு வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிக்கு காங்கிரஸ் கட்சி போதனை செய்யக்கூடாது. மேலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.