Published:Updated:

தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைத்தார் ஜெயலலிதா!

தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைத்தார் ஜெயலலிதா!
தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைத்தார் ஜெயலலிதா!

சென்னை: கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க.வில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைத்தார் ஜெயலலிதா!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் சில கட்சிகளும் சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.

##~~##
அக்குழுவில், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதனை ஜெயலலிதாவிடம் தெரிவிக்கும். அதன் பிறகு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஜெயலலிதா அறிவிப்பார்.