Published:Updated:

பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க இணையும்: பொன் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

விகடன் விமர்சனக்குழு

சென்னை: பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க இணையும் என்ற நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியின் மாநிலத்  தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ம.க.வுடன் ஓரிரு நாட்களில் தேர்தல் கூட்டணி உறுதியாகிவிடும் என்றார்.

மீனவர்கள் பிரச்னையில், இலங்கை அரசுக்கு இந்தியா துணை போவதாக குற்றம்சாட்டிய பொன் ராதாகிருஷ்ணன், பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

##~~##
மேலும், பொற்கோயில் தாக்குதலின்போது காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க தவறியதாக அவர் புகார் தெரிவித்தார்.