Published:Updated:

மாநிலங்களவை: 2ஜி குறித்து விவாதிக்க மைத்ரேயன் நோட்டீஸ்!

விகடன் விமர்சனக்குழு
மாநிலங்களவை: 2ஜி குறித்து விவாதிக்க மைத்ரேயன் நோட்டீஸ்!
மாநிலங்களவை: 2ஜி குறித்து விவாதிக்க மைத்ரேயன் நோட்டீஸ்!
மாநிலங்களவை: 2ஜி குறித்து விவாதிக்க மைத்ரேயன் நோட்டீஸ்!

புதுடெல்லி: மாநிலங்களவையில் 2ஜி ஊழல் தொடர்பாக விவாதிக்க அனுமதி கோரி மைத்ரேயன் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

2ஜி ஊழல் குறித்து நடைபெற்ற உரையாடல் பதிவுகள் தொடர்பான ஆதாரங்களை, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரஷாந்த் பூஷண் டெல்லியில் நேற்று வெளியிட்டார். 2ஜி வழக்கில் இருந்து கனிமொழியை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அப்போது அவர் குற்றம்சாட்டினார்.

##~~##
இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக நடைபெற்ற உரையாடல் பதிவுகள் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதி கோரி அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு, இது குறித்து விவாதிக்கவும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்தும் விவாதிக்க வேண்டுமென்று அந்த நோட்டீஸில் மைத்ரேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.