Published:Updated:

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியது அ.தி.மு.க!

விகடன் விமர்சனக்குழு
தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியது அ.தி.மு.க!
தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியது அ.தி.மு.க!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து அ.தி.மு.க குழு, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்  இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
 

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியது அ.தி.மு.க!

கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கொண்ட குழு இன்று மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியது அ.தி.மு.க!

முதலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா.பாண்டியன், சி.மகேந்திரன், பழனிசாமியுடன் இந்தக் குழு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

##~~##
இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி.ராமகிருஷ்ணன், சவுந்திரராஜன், பாலகிருஷ்ணனுடன் அ.தி.மு.க தொகுதி பங்கீட்டுக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனிடையே, பேச்சுவார்த்தை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், இந்தியாவுக்கு தமிழகம் தலைமை ஏற்க வேண்டும் என்றார்.
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்