Published:Updated:

கெஜ்ரிவால் ஆட்சிக்கு ஆதரவு வாபஸ்: வினோத்குமார் பின்னி அறிவிப்பு!

கெஜ்ரிவால் ஆட்சிக்கு ஆதரவு வாபஸ்: வினோத்குமார் பின்னி அறிவிப்பு!
கெஜ்ரிவால் ஆட்சிக்கு ஆதரவு வாபஸ்: வினோத்குமார் பின்னி அறிவிப்பு!
கெஜ்ரிவால் ஆட்சிக்கு ஆதரவு வாபஸ்: வினோத்குமார் பின்னி அறிவிப்பு!

புதுடெல்லி: கெஜ்ரிவால் அரசுக்கு அளித்த ஆதரவை  வாபஸ் பெறுவதாக வினோத்குமார் பின்னி அறிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து அவரது கட்சியை சேர்ந்த வினோத் குமார் பின்னி எம்.எல்.ஏ. போர்க் கொடி தூக்கினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டதாகவும், கெஜ்ரிவால் தவறான வழியில் செல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

##~~##
இந்நிலையில்,  ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வினோத்குமார் பின்னி, அர்விந்த் கெஜ்ரிவால் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ''வாபஸ் பெற்றுக் கொள்ளும் கடிதத்தை டெல்லி கவர்னர் நஜீப் ஜங்கிற்கு அனுப்பி இருக்கிறேன். ஆனாலும், டெல்லி சட்டப் பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவளிப்பேன்.

ஊழல் அரசியல்வாதிகளைக் காட்டிலும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆபத்தானவர். பொய்களைக் கூறி நாட்டு மக்களை அவர் ஏமாற்றுகிறார்" என்று வினோத்குமார் பின்னி கூறினார்.