Published:Updated:

தெலங்கானா: மன்மோகன் சிங், சோனியாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

விகடன் விமர்சனக்குழு

அனந்தபூர்: ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்டுள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட ஆறு மத்திய அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரா மாநிலத்தை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் இரண்டு பேர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அதில், ஆந்திராவை பிரிப்பது தொடர்பாக அனைத்து பிரச்னைகளுக்கும்  பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் சுஷில் குமார் ஷிண்டே, வீரப்ப மொய்லி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், ஜெயபால் ரெட்டி மற்றும் சாம்ப சிவராவ் ஆகியோரே காரணம் என கூறப்பட்டுள்ளது.

##~~##
இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்க பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 6 மத்திய அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
அவர்கள் நேரில் ஆஜராகியோ அல்லது அவர்களது பிரநிதிகள் வழியாகவோ ஏப்ரல் 11ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.