Published:Updated:

தங்கசாலை மேம்பாலத்தை திறக்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

விகடன் விமர்சனக்குழு
தங்கசாலை மேம்பாலத்தை திறக்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
தங்கசாலை மேம்பாலத்தை திறக்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
தங்கசாலை மேம்பாலத்தை திறக்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

சென்னை: தங்கசாலை மேம்பாலம், சுரங்கப்பாதையை திறக்க கோரி வருகின்ற 7 ஆம் தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தி.மு.க ஆட்சி காலத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், 2009 ஆம் ஆண்டு 23 கோடி ரூபாய் செலவில் தங்கசாலை மணிகூண்டு அருகில் ஒரு மேம்பாலமும், 2008 ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவமனை–மணியக் காரச் சத்திர தெருவில் 15.76 கோடி ரூபாய் செலவில் ஒரு சுரங்கப்பாதையும் கட்டும் பணியினை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்பணிகள் முடிவுற்று ஏறத்தாழ ஏழெட்டு மாதக் காலமாகியும் இன்னமும் திறக்கப்படாமல், சென்னை மாநகராட்சி காலம் கடத்திக் கொண்டிருக்கிறது. இதனால், வடசென்னை மக்கள் மிகப் பெரிய போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, இந்த இருபாலங்களையும் உடனடியாக திறந்து, வடசென்னை வாழ் பொது மக்களின் பயன்பாட்டிற்குவிட வலியுறுத்தி வருகின்ற 7 ஆம் தேதி காலை 9.00 மணியளவில், தங்கசாலை மணிகூண்டு மேம்பாலம் அருகில், சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையிலும், எனது முன்னிலையிலும் வட சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

##~~##
இதற்காக, 3-2-2014 அன்று சென்னை மாநகர காவல்துறையிடம் அனுமதி முறைப்படி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தாலும் அல்லது மறுக்கப்பட்டாலும் திட்டமிட்டப்படி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தே தீரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், வடசென்னை மாவட்டத்தை சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் கழகத் தோழர்கள் அனைவரும் கட்சி கொடியுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கண்டன குரலை எழுப்பிட வேண்டுமென கேட்டுகொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.