Published:Updated:

மம்தா பானர்ஜிக்கு ஓட்டளிப்பது பயனில்லாதது: மோடி

மம்தா பானர்ஜிக்கு ஓட்டளிப்பது பயனில்லாதது: மோடி
மம்தா பானர்ஜிக்கு ஓட்டளிப்பது பயனில்லாதது: மோடி
மம்தா பானர்ஜிக்கு ஓட்டளிப்பது பயனில்லாதது: மோடி

கொல்கத்தா: மம்தா பானர்ஜிக்கு ஓட்டளிப்பது பயனில்லாதது; அனைத்து தொகுதிகளையும் எங்களுக்கு கொடுங்கள் என பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில், பா.ஜ.க. சார்பில் பிரசார பொதுக்கூட்டம் பிரிகேட் பரேடு மைதானத்தில் இன்று நடந்தது. இதில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, ''நாட்டிற்கு வளர்ச்சி தேவை. மருந்துகள் தேவையில்லை. ஏழைகளுக்கு உணவு தேவை. இளைஞர்களுக்கு வேலை தேவை. கிராமங்களுக்கு மின்சாரம் தேவை. சிறுவர்கள் கல்வியை பெறவேண்டும். ஆனால் இங்கு அரசியல் கட்சிகள் மனிதனின் அடிப்படை தேவை குறித்து கவலைப்படவில்லை.

##~~##
நீங்கள் பெங்காலின மக்கள், இங்கு மாற்றம் வேண்டும் என்று 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை விரட்டி விட்டு புதிய கட்சியை கொண்டு வந்தீர்கள். ஆனால் உங்களால் மாற்றத்தை உணர முடிந்ததா? மேற்கு வங்க மக்கள் புரட்சிகரமானவர்கள். நீங்கள் சட்டசபைத் தேர்தலில் மிகவும் பெரிய முடிவை எடுத்தீர்கள். இப்போது நீங்கள் மிகவும் தைரியமான முடிவை எடுக்க வேண்டும்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும், அரசியல் மேதைகளால் கணிப்பட்டவை அனைத்தும் பொய்யாக போகிறது. இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் எங்களுக்கு கொடுங்கள். மம்தா பானர்ஜிக்கு ஓட்டளிப்பது பயனில்லாதது'' என்றார்.