Published:Updated:

கூட்டணி: விஜயகாந்த்துக்கு காங்கிரஸ் பகிரங்க அழைப்பு!

விகடன் விமர்சனக்குழு
கூட்டணி: விஜயகாந்த்துக்கு காங்கிரஸ் பகிரங்க  அழைப்பு!
கூட்டணி: விஜயகாந்த்துக்கு காங்கிரஸ் பகிரங்க அழைப்பு!
கூட்டணி: விஜயகாந்த்துக்கு காங்கிரஸ் பகிரங்க  அழைப்பு!

சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க. இணைய வேண்டும் என விஜயகாந்த்துக்கு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றிய, நிறைவேற்ற உள்ள மசோதாக்கள் குறித்த விழிப்புணர் ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசும்போது, ''பா.ஜ.க.வில் ஊழல் புரிந்தவர் பங்காரு லட்சுமணன். அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத அந்தக் கட்சி, ஊழலை ஒழிக்கப் போவதாக கூறுகிறது. காங்கிரசில் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டவுடன் சுரேஷ் கல்மாடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. காங்கிரஸ் ஒரு தூய்மையான ஜனநாயக கட்சி.

##~~##
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நடத்திய ஊழல் எதிர்ப்பு மாநாடு பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் இருந்தது. அவர் காங்கிரஸ் கூட்டணியில்தான் சேர வேண்டும். பவாவனி ஆறு, காவிரி ஆற்றில்தான் சேர வேண்டும். கூவத்தில் சேரக்கூடாது. ஆகவே, விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணியில் சேர வேண்டும் என அவருக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்'' என்றார்.