Published:Updated:

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சலுகை வெறும் கண்துடைப்பு: கருணாநிதி

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் வழங்கிய மதிப்பெண் சலுகை வெறும் கண்துடைப்பு என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினரையும் ஒன்றாகப் பாவித்து 5 மதிப்பெண் சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மதிப்பெண் சலுகையை இடஒதுக்கீட்டுப் பிரிவினர் எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள்? எனத் தெரியவில்லை. இது வெறும் கண் துடைப்பு நாடகம்.

##~~##
மீனவர் பிரச்னை பற்றி பேச ஜெயலலிதாவுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. நடப்பு ஆட்சியில் அறிவித்த மின்திட்டங்கள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. எனவே, விரைவில் மின்வெட்டே இருக்காது என முதல்வர் கூறுவது மக்களை திசை திருப்புவதாக உள்ளது'' எனக் கூறியுள்ளார்.