Published:Updated:

பாசனத்திற்காக கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் விட ஜெ. உத்தரவு!

விகடன் விமர்சனக்குழு

தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதானக் கால்வாய் வாயிலாக இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

##~~##
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று நாளை (6ஆம் தேதி) முதல் கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதானக் கால்வாய் வாயிலாக இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.