Published:Updated:

ஆம் ஆத்மிக்கு எதிராக மதுரையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்!

ஆம் ஆத்மிக்கு எதிராக மதுரையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்!
ஆம் ஆத்மிக்கு எதிராக மதுரையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்!

மதுரை: காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் செய்துள்ளதாக பட்டியல் வெளியிட்ட ஆம் ஆத்மியை கண்டித்து மதுரை காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆம் ஆத்மிக்கு எதிராக மதுரையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்!

சமீபத்தில் ஆம் ஆத்மி வெளியிட்ட ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இது நாட்டில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது பொய் குற்றச்சாட்டு என்று காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆம் ஆத்மிக்கு எதிராக மதுரையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்!

இந்நிலையில், இன்று மதுரையில் ஒத்தக்கடையிலும், கலெக்டர் அலுவலகம், ஆம் ஆத்மிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.பி. ராம்பாபு தலைமையில் நடந்த இந்த ஆர்பட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியையும், கெஜ்ரிவாலையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்கள். மேலும், காங்கிரஸ்காரரின் சால்வைக்குள் காகித குப்பைகளை அடைத்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் கொடும்பாவி எனக்கூறி தீ வைத்தார்கள்.

##~~##
தீ எரிந்து கொண்டிருந்த கொடும்பாவியை மிதிக்க சிலபேர் முயற்சித்தனர். அப்போது செருப்பு, வேட்டியில் தீ படர்ந்து எரிய ஆரம்பித்தது. பின்னர் படாதபாடுபட்டு தீயை அணைத்தனர். இதனால் அந்த இடமே பரபரப்பானது. ஆர்பாட்டம் என்று சொல்லிவிட்டு எந்த முன்னேற்பாடுமில்லாமல் கொடும்பாவி கொளுத்தியதை காவல்துரையினர் கண்டித்தனர். இதானால் உற்சாகமாக தொடங்கப்பட்ட ஆர்பாட்டம், கலகலத்து போனது.
செ.சல்மான்
படங்கள்:
பா.காளிமுத்து