பிரீமியம் ஸ்டோரி

சங்கமித்ரா நாகராஜன், கோவை-6.

கழுகார் பதில்கள்!

சசிகலா, கனிமொழி, குஷ்பு, பிரேமலதா விஜயகாந்த் ஆகிய நால்வரில் முதல்வர் வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது?

கழுகார் பதில்கள்!

இவர்களுக்கு முதல்வர் ஆசை இருக்கலாம். ஆனால் இவர்களுக்கு மேலே இருப்பவர்கள் யாரும், விட்டுக்கொடுப்பவர்களாக இல்லையே?

 குமார.சுந்தரம், காரைக்குடி.

கழுகார் பதில்கள்!

பந்த்...?

##~##

பெட்ரோல், டீசல் விலையை, நினைத்த​போதெல்லாம் உயர்த்திக்கொண்டே போவதும், காஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு ரேஷன் வைப்பதும், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதிப்பதும் கண்டிக்க வேண்டிய விஷயங்கள். மத்திய தர வர்க்கத்தையும் அடித்தட்டு மக்களையும் மனதில்கொண்டு யோசிப்பவர்களுக்கு, இந்த மூன் றுமே மிக மோசமான விளைவைத் தருபவை. எனவே, பந்த் நடத்தியவர்களின் நோக்கம் வரவேற்புக்​குரியது!

 அ.கணேசமூர்த்தி, கழுகுமலை.

கழுகார் பதில்கள்!

அண்ணா ஹஜாரேவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரிந்து விட்டார்களே?

கழுகார் பதில்கள்!

இருவரது எண்ணங்களும் மாறும்போது, பிரிவு தவிர்க்க முடியாதது. அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆசை. ஆனால், கட்சி தொடங்குவதை அண்ணா விரும் பவில்லை. இருவருமே ஊழலுக்கு எதிரானவர்கள். ஆனால், அதை எதிர்க்கும் வழியில்​தான் வித்தியாசம்!

 எஸ்.கிருஷ்ணன், சேலம்.

கழுகார் பதில்கள்!

மத்திய அரசு நிலைக்குமா?

'நித்ய கண்டம்; பூரண ஆயுசு’ என்பது மாதிரி தொடரவே செய்யும் என்று நினைக்கிறேன். மம்தா ஆதரவை வாபஸ் வாங்கினால், முலாயம் வந்து விடுகிறார். எனவே, இப்போதைக்கு மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை. அதற்காக இது ஸ்திரமான அரசு என்று முடிவுக்கு வந்துவிடாதீர்கள். 'இந்த அரசைக் கவிழ வைக்க வேண்டிய வேலை எங்களுக்கு இல்லை. அது தானாகவே கவிழும்’ என்று நிதின் கட்காரி சொல்வதே நிஜம்!

 ரேவதிப்ரியன், ஈரோடு-1

கழுகார் பதில்கள்!

வெளிநாட்டுப் பத்திரிகைகள் நம் பிரதமரை மட்டமாக எழுதுகின்றனவே?

மன்மோகன் சிங் மீது அந்தப் பத்திரிகைகள் வைக்கும் விமர்சனங்கள் சரியானவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் அந்த நோக்கத்​துக்காக மட்டுமே இத்தகைய விமர்சனங்களைச் செய்யவில்லை. இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்கான உள்நோக்கம் அவர்களில் சிலருக்கு இருக்கலாம்!

சொல்வேந்தன், நெல்லை.

கழுகார் பதில்கள்!

இந்தியாவில் வெள்ளையர்கள் கால் பதித்தபோது, அவர்கள் அதிக அளவு ஆதிக்கம் செலுத்திய மாநிலம் எது?

இப்போதைய மாநிலங்கள் போன்ற எல்லை வரையறைகள் இல்லை. கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில்தான் அவர்களது ஆதிக்கம் ஆரம்பத்தில் அதிகம் இருந்தது!

 பாளை. டி.கே.மோகன், விருகம்பாக்கம்.

கழுகார் பதில்கள்!

2ஜி ஸ்பெக்ட்ரம், இஸ்ரோ, நிலக்கரிச் சுரங்கம் என பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்த பிறகும் மன்மோகன் சிங், பிரதமர் பதவியைத் தக்க வைத்துள்ளதைப் பற்றி?

மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் தன்னுடைய 'பிராண்ட்’ ஆக நினைத்தது. இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்த வந்த ஆபத்பாந்தவராக அவர் 1990-களின் ஆரம்ப காலத்தில் கருதப்பட்டார். மத்தியில், காங்கிரஸ் ஆண்ட நேரத்திலும், பாரதிய ஜனதா ஆட்சி செய்த நேரத்திலும் அவர் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கையை மாறுதல் செய்ய யாராலும் முடியவில்லை. அப்படிப்​பட்ட அழுத்தமான தடயத்தை இந்தியப் பொருளா​தாரத்தில் பதியச்செய்தவர் மன்மோகன் சிங். அது, இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய சாதக பாதகங்களை இங்கு நாம் விமர்சிக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்டவர் மீது, அமைச்சராக இருக்கும்வரை எந்த விமர்சனமும் வரவில்லை. கொள்கை ரீதியாக மட்டுமே விமர்சிக்கப்பட்டார். ஆனால், 2004-க்குப் பிறகு அவர் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. 'பிரதமர் நாற்காலியில் உட் கார்ந்தால் போதும். யார் செய்யும் தவறையும் கண்டுகொள்ள மாட்​டேன்’ என்ற  நினைப்பு, அவரது இமேஜை அதலபாதாளத்தில் தள்ளி​விட்டது.

'மன்மோகன் சிங் பிராண்ட்’ என்பது ஒரு காலத்தில் பொருளாதார சீர்திருத்தமாக இருந்தது. இப்போது சுயநலத்தின் அடையாளம்!

 அ.கார்த்திகேயன், சேலம்.

கழுகார் பதில்கள்!

அரசவைக் கவிஞர் எனும் பதவியை தமிழக அரசு நியமனம் செய்வதில் எவ்வித ஆர்வமும் காட்டுவது இல்லையே ஏன்?

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த​போது, கண்ண​தாசனை அரசவைக் கவிஞர் ஆக்கினார். இந்தத் தகவல்

கழுகார் பதில்கள்!

கவிஞருக்குச் சொல்லப்பட்டது. 'அப்படியா... எனக்கு என்ன வேலைன்னே தெரி யலையே?’ என்று கண்ணதாசன் கேட் டார். அப்படிப்பட்ட கௌரவப் பதவிதான் அது. காங்கிரஸ் காலத்தில் கவிஞர் நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளைக்கு அந்தப் பதவி தரப்​பட்டது. ஒரு கவிஞனுக்கு அரசாங்​கம் தருகிற உயரிய மரியாதை என்பது மட்டும்தான் அதனால் உள்ள ஒரே பயன். அது நிரப்பப்படாமல் இருப்பதே கவிதைக்குச் செய்யும் நன்மை என்று நினைத்துக் கொள்ளுங்கள்!

 வீரமுரசு, கள்ளக்குறிச்சி.

கழுகார் பதில்கள்!

'காவிரிப் பிரச்னையில் பிரதமர் அளிக்கும் தீர்ப்பை ஏற்க மறுக்கும் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும்’ என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறுகிறாரே?

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கத்தை எந்த நோக்கத்துக்காகவும் கலைக்கக் கூடாது. அரசியல் அமைப்புச் சட்டம் 356-வது பிரிவைப் பயன்படுத்தாமல் இருப்பதே மக் களாட்சியின் மாண்புக்கு நல்லது!

 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்​பாளர்களில் 30 சதவிகிதம் பேர் இளைஞர்களாக இருப்பார்கள் என்கிறாரே கருணாநிதி?

இளைஞர்கள் என்றால் எத்தனை வயது என்பதை கருணாநிதி தெளிவு படுத்த வேண்டும். ஏனென்றால், தி.மு.க-வில் இளைஞர் அணிச் செய லாளருக்கு வயது 60. அதனால் 50, 60 வயதுக்காரர்களை நிறுத்தி, அவர்களும் இளைஞர்கள்தான் என்று கணக்குக் காட்டக் கூடாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு