Published:Updated:

சமூக நீதிக்காக தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி

சமூக நீதிக்காக தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி
சமூக நீதிக்காக தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி

சமூக நீதிக்காக தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி

திருச்சி: ஒடுக்கப்பட்ட மக்களின்  இட ஒதுக்கீட்டை  மறுக்கிறது அ.தி.மு.க  அரசு என்று கூறிய கனிமொழி,  சமூக நீதிக்காக எழுந்த போராட்டம் போல் மீண்டும் தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும் என்றார்.
 

சமூக நீதிக்காக தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி

திருச்சியில் கடந்த தி.மு.க. 10வது மாநில மாநாட்டில் "சமூக நீதி போரில் தி.மு.க" என்னும் தலைப்பில் பேசிய கனிமொழி, "தி.மு.க.வின், திருச்சி மாநாட்டின் தூணாக இருக்க விரும்புகிறேன் என பேச்சை துவங்கியவர், நமது ஐம்பெரும் கொள்கைகளில் ஆதிக்கமற்ற சமுதாயம் என்பது முக்கியமானது. நமக்கு கல்வி உட்பட பல உரிமைகள் கிடைத்து விடக்கூடாது என கண்காணிப்புடன் ஆதிக்க சக்திகள் செயல்பட்டன. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்தன.

தமிழகத்தில் நீதிக்கட்சி போராட்டத்தை தொடங்கியது. 1921ல் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட வகுப்புரிமை ஆணையம் 1928 வரை நடைமுறை படுத்தப்படவில்லை. 1928ல் தான் முத்தையா முதலியாரால் அந்த ஆணையம் நிறைவேறியது.

1947ல் அனைத்து சமூகத்தினரும் ஆலயங்களுக்கு செல்லலாம் என சட்டம் கொண்டு வந்தார். 1951ல் தான் நேரு பிரதமராகவும், அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இருந்த போது தான் வகுப்புரிமை ஆணையம் உருவானது.

1959ல் சட்டநாதன் கமிஷனை சமூக நீதி காக்க கலைஞர் உருவாக்கினார். 41 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 49 சதவீதமாக அவர் உயர்த்தினார். தனது வாழ்நாள் எல்லாம் சமூக நீதிக்காகவும், ஆதிக்கமற்ற சமூகத்தை உருவாக்கவும் போராடி வருபவர் கலைஞர். ஆனால் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இட ஒதுக்கீட்டிற்கும், சமூக நீதிக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார்.
 

சமூக நீதிக்காக தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி

தி.மு.க. ஆட்சியில் எம்.பி.சி., சிறுபான்மையினருக்கு எந்த போராட்டமும் இல்லாமலேயே இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் 1947ல் அனைத்து சமூகத்தினரும் ஆலையத்திற்குள் செல்லலாம் என சட்டம் கொண்டுவந்த ஓமந்தூர் ராமசாமி செட்டியார் பெயரில், அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் கொண்டு வந்த கலைஞர் அமைத்த சட்டமன்ற வளாகத்தை ஜெயலலிதா பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி உள்ளார் .

அந்த மருத்துவமனையில்  இட ஒதுக்கீட்டை மறுத்துள்ளார் அவர். இதற்கு தரமான மருத்துவம் கிடைக்கவே இட ஒதுக்கீட்டை மறுப்பதாக ஜெயலலிதா கூறுகிறார். அப்படியானால் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் திறமையற்றவர்கள் என்கிறாரா ஜெயலலிதா.

தி.மு.க.விற்கும், அ.தி. மு.க.விற்கும் தேர்தல் பகை இல்லை, பரம்பரை பகை தான் உள்ளது என்கிறார் ஜெயலலிதா. இது எதை குறிக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

முன்பு சமூக நீதிக்காக எழுந்த போராட்டம் போல் மீண்டும் தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால் நம் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிகள் இருக்காது. உரிமையோடு வாழ இயலாது. எனவே சமூக நீதி காக்க, ஆதிக்கமற்ற சமுதாயம் உருவாக வரும் தேர்தலில் நாற்பதற்கு நாற்பதையும் நாம் வெல்ல வேண்டும் என்று முடித்தார்.

சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.கந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு