எஸ்.குமார், ராஜபாளையம்.

பிரதமருக்கு வயது 80?

80 வயதுக்காரர் என்று கணிக்க முடியாதவராகவே, மன்மோகன் தெரிகிறார். அரசியல் நெருக்கடிகள் இல்லாமல் இருக்குமானால் அவர் இன்னும் வயது குறைந்தவராகவே தெரிவார். தன் பிறந்த நாளான செப்டம்பர் 26-ம் தேதி பெரிய கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகத்தின் விழாவில் அவர் பங்கேற்றது வரவேற்கத்தக்கது!

மு.இரா.வசந்தகுமார், நெல்லை.

மத்திய அமைச்சரவையில் கூடுதல் இடங்களை கருணாநிதி வாங்குவாரா?

'வாங்க மாட்டேன்’ என்று கருணாநிதி பகிரங்கமாக அறிவித்து விட்டார். இதற்கு இரண்டு காரணங்கள். யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பதில் குடும்பத்துக்குள் குழப்பம் வந்தது முதல் காரணம்.

அப்படியே வாங்கினாலும் முக்கியமான துறைகளைத் தர டெல்லி தயாராக இல்லை என்பது இரண்டாவது காரணம்!

எஸ்.கிருஷ்ணன், சேலம்.

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு கைவிடப்படும்’ என்று பி.ஜே.பி சொல்வதை நம்பலாமா?

நம்ப முடியாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொருளாதார சீர்த்திருத்தங்கள் என்ற பெயரால் செய்யப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அடுத்து வந்த பி.ஜே.பி. ஆட்சியும் பின்பற்றவே செய்தது.

2004-ம் ஆண்டு பி.ஜே.பி. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'அன்னிய முதலீட்டில் 26 சதவிகிதம் கொண்டு வருவோம்’ என்று கூறப்பட்டு இருந்தது. அதைத்தான் இன்று, மன்மோகன் 51 சதவிகிதமாக உயர்த்தி விட்டார். எனவே, அமெரிக்காவுக்கு லாலி பாடுவதில் இரண்டு பேருமே சளைத்தவர்கள் அல்ல. 2004-ல் இருந்த சிந்தனையில் பி.ஜே.பி-க்கு உண்மையிலேயே இப்போது மாறுதல் ஏற்பட்டு இருக்குமானால், வரவேற்கலாம்!

முத்துஅரசன், சிவகங்கை.

இந்தியாவைப் பொறுத்தவரை சோசலிஸத் தலைவர்கள் யார்?

சமுதாய வளர்ச்சியின் அடுத்த கட்டம் சோசலிஸம்தான் என்பதையும், அதை ஜனநாயக வழிமுறையில் அடையப் பாடுபடும் தலைவர்களை சோசலிஸத் தலைவர்கள் என்று அழைத்தனர்.

'அவர் ஓர் அசாதாரணமான ஊழியர். சோசலிஸத் தத்துவத்துக்கே ஓர் ஆதர்ஷ புருஷர்’ என்று காந்தியால் புகழப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன்; 'இவர் தனது ஆட்சியைப் பற்றி என்ன சொல்லி விடுவாரோ?’ என்று பிரதமர் நேருவே பயந்த ராம்மனோகர் லோகியா; பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மும்பையில் மட்டும் 20 ஆயிரம் பேரைக்கொண்ட மக்கள் படையைத் திரட்டிய அசோக் மேத்தா - என்று சோசலிஸத் தலைவர்களை உதாரணங்களாகக் காட்டலாம். இந்தப் பாதை ஏனோ இந்தியாவில் அதிகமாகத் தொடரவில்லை.

இங்கே இப்போது இஸங்களைச் சுற்றி அரசியல் இல்லை. எலெக்ஷனைச் சுற்றித்தான் எல்லாம்!

சகாயராஜ், ஸ்ரீவைகுண்டம்.

அண்ணா வளைவு?

எவ்வளவுதான் சரியாக ஒட்டவைக்க முயன்றாலும் அந்த வளைவை அப்படியே விட்டுவைத்திருப்பது எப்போதும் ஆபத்தானதுதான். நெல்சன் மாணிக்கம் சாலையையும் அண்ணா நகரையும் இணைக்கும் பாலத்துக்கு அண்ணா பெயரை வைத்துவிட்டு வளைவை அகற்றுவதே சரியானது!

கே.ஏ.என்.சிவம், பெங்களூரு-43.

இருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டால், இப்போது நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க எந்தக் கட்சிக்கும் தைரியம் இல்லை போலத்தெரிகிறதே?

உண்மைதான்! இந்தப் பிரதமர் முகத்தை இப் போதைக்கு விட்டுவிடக் கூடாது என்று காங்கிரஸ் நினைக்கிறது. பிரதமராக எவர் முகத்தைக் காட்டுவது என்று பி.ஜே.பி. முழிக்கிறது. மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கும் பிரபலத்தை கம்யூனிஸ்ட் கட்சி தேடுகிறது. தேர்தலைச் சந்திக்க எப்படி தைரியம் வரும்?

புவனேஸ்வரன், சென்னை.

ஒருவரை ஒருவர் வீழ்த்துவதுதான் அரசியலா?... ஒரே கட்சியில் இருந்தாலும்?

முன்பு அப்படி இல்லை. ஓர் உதாரணம்....

முதல் பொதுத்தேர்தல் 1952-ல் நடந்தது. அப்போது விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக அந்தப் பகுதியில் பெரும் செல்வாக்குப் பெற்ற மனிதர் தென்னவராயன்பட்டு வேணுகோபாலசாமி அறி விக்கப்பட்டார். கடைசி நேரத்தில், அவரை வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டு ஆ.கோவிந்தசாமியை வேட் பாளராக நிறுத்தினார் உழைப்பாளர் பொதுநலக் கட்சித் தலைவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி.

வேணுகோபாலசாமி மறுபேச்சு பேசாமல் வாபஸ் பெற்றது மட்டும் அல்ல, ஆ.கோவிந்தசாமிக்காக வீதிவீதியாகச் சென்று வாக்கு கேட்டார். மீறி வேணுகோபாலசாமி நின்றிருந்தால், அவரே வெல்வார் என்பதே நிலைமை. அதைப்பற்றி வேணுகோபாலசாமி கவலைப்படவில்லை. வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனபிறகும் பெரியவர் வேணுகோபாலசாமி முன்னால் நின்றே பேசுவாராம் ஆ.கோவிந்தசாமி. அப்படிப்பட்ட மனிதர்கள் அரசியலிலும் இருந்தனர். தலைவர் சொன்னால் தட்டாமல் கேட்க வேண்டும் என்ற தகுதி உள்ள தலைவர்களும் இருந்துள்ளனர். ஆனால், இன்று எல்லாம் தலைகீழ்!

சங்கீதா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

அரசியலுக்கு வந்து இவ்வளவு காலமாகியும் முதல்வர் எழுதி வைத்தே படிக்கிறாரே?

அதிகப்படியான கவனத்தின் வெளிப் பாடு இது. தவறுதலாகவோ, கூடுதலாகவோ எதையும் சொல்லிவிடக் கூடாது என்று நினைப் பவர்கள் அப்படித்தான் செய்வார்கள்!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

கைதுக்கு 'முன் ஜாமீன்’... கைதுக்குப் பின், ஜாமீன்... என்ன வேறுபாடு?

கைதுக்குப் பின் ஜாமீன், சிறைக்குள் நிம்மதியாக உட்கார்ந்து வாங்கலாம். கைதுக்கு முன் ஜாமீன், எங் கெங்கோ ஓடிக்கொண்டேதான் வாங்க முடியும்!

பா.கிருஷ்ணகுமார், சென்னை.

'நிலக்கரி விவகாரத்தில் ஊழல் எதுவுமே நடக்கவில்லை’ என்று அனைத்து மத்திய அமைச்சர்களும் திரும்பத் திரும்பச் சொல்கிறார்களே?

இது உண்மையானால், நிலக்கரி சுரங்கங்களுக்குத் தரப்பட்டுள்ள அனுமதியை ஏன் ரத்து செய்தது மத்திய அரசு? நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த சர்ச்சை எழுந்ததும், அதை ஆய்வு செய்வதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டது. 31 தனியார் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து அந்தக் குழு ஆய்வு செய்தது. 13 சுரங்க ஒதுக்கீடுகளையும், 14 சுரங்கங்களுக்கான வங்கி உத்தரவாதத் தொகையையும் ரத்து செய்யப் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஊழலே நடக்கவில்லை என்றால், கொடுத்த அனுமதியை எதற்காக ரத்து செய்ய வேண்டும்? இவை எல்லாம் சாமான்ய மக்களுக்குத் தெரியாது என்பதால், மத்திய அமைச்சர்கள் எதையாவது சொல்லி மழுப்புவார்கள்!

கே.சந்திரசேகர், பெங்களூரு.

இந்த நாட்டில் நல்லது ஏதாவது நடக்கும் என்று நினைக்கிறீர்களா?

'வலை பின்ன ஆரம்பித்தால், கடவுள் இழை அனுப்புவார்’ என்பது ஸ்பெயின் பழமொழி!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

எத்தகைய விளையாட்டு மிகவும் திறமையானது?

ஆதரவு தருவதும் வாபஸ் பெறுவதுமான விளையாட்டுத்தான்!