கழுகார் உள்ளே நுழைந்ததும் கடந்த ஜூ.வி. இதழைக் கேட்டு வாங்கினார். அட்டைப் படத்தைப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தார்!

''கே.என்.நேருவும் பொன்முடியும் விழிபிதுங்கி நிற்கும் புகைப்படத்தைப் போட்டு 'தலைமறைவு மாஜிக்கள்’ என்று நீர் செய்தி போட்டுவிட்டீர். அதைக் காலையிலேயே பார்த்துவிட்ட கருணாநிதி, கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டார். கைது செய்ய போலீஸ் தேடும் பட்டியலில் தனது பேரன் துரை தயாநிதியின் பெயர் இருப்பது அவரது வருத்தத்தை அதிகப்படுத்தியது. மறுநாள், தன்னைச் சந்திக்க வந்த துரைமுருகன், கனிமொழி ஆகிய இருவரிடமும் இது பற்றியே பேசினாராம் கருணாநிதி!'' என்று தொடங்கினார் கழுகார்!

''அட்டைப் படத்தை வைத்துக் கொண்டே பேசிய கருணாநிதி, 'மந்திரியா இருந்தவங்க... மாவட்டச் செயலாளரா இருக்கிறவங்க இந்த மாதிரி எதுக்கு தலைமறைவு ஆகணும்? இதை வெச்சே நாம ஏதோ தப்பு பண்ணியிருக்கோம்னு சொல்ல மாட்டாங்களா?’ என்று கேட்டாராம். 'இவங்க எங்கே இருக்காங்கனு பார்த்து, ரெண்டு பேரையும் உடனடியா சரணடையச் சொல்லுங்க’ என்று கட்டளையும் போட்டாராம். கருணாநிதிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இவர்கள் விழித்துள்ளனர். 'அந்த மாதிரி எல்லாம் தலைமை அறிவிக்கக் கூடாது. ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு மாதிரி நடக்குது. நேருவும் பொன் முடியும் முன்ஜாமீன் கேட்டு மனு போட்டுள்ளனர். அதற்குள் போய் ஆஜராக முடியாது’ என்று சொன்னார்களாம். 'என்னமோய்யா எனக்கு வருத்தமா இருக்கு’ என்றாராம் கருணாநிதி!''

''துரை தயாநிதியைப் பற்றி ஏன் சொல் லவில்லை?''

''சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் அழகிரி, கருணாநிதியைச் சென்று பார்த்துள்ளார். அப்போது இதுபற்றித்தான் இருவரும் பேசி உள்ளனர். 'துரையைத் தேடுறோம்கிற பேர்ல சம்பந்திகள் வீட்டுக்கு போலீஸ் போவதுதான் வருத்தமாக இருக்கிறது’ என்றாராம் அழகிரி. 'உங்க வக்கீலைக் கேட்டு முடிவு பண்ணுய்யா’ என்றாராம் கருணாநிதி!''

''ஒரு வழியாக தி.மு.க. செயற்குழுவுக்கு அழகிரி வந்து விட்டாரே?''

''தி.மு.க-வினரைக் கைது செய்யும் நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டம் அறிவிக்கும்போது அதில் அழகிரி பங்கேற்காமல் எப்படி இருக்க முடியும்? அதனால் வந்திருப்பார்!''

''என்ன நடந்ததாம் செயற்குழுவில்?''

''வழக்கம்போல, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் பேச்சுத்தான் சூட்டைக் கிளப்பி இருக்கிறது. 'மந்திரியாக இருந்தவர்கள், மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் மீது வழக்குப் பதிவாகிறது என்றால், அதை அவர்கள் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, தலைமறைவாகக் கூடாது. பொதுவாழ்வில் இருக்கும் நாம் அதை எதிர்கொள்ளவேண்டும். துரை தயாநிதி தலைமறைவாக இருக்கிறார் என்றால், அவர் அரசியலுக்கு சம்பந்தம் இல்லாதவர். அவர் தலை மறைவாகலாம். என்னுடைய மகனை போலீஸ் தேடுகிறது என்றால், அவர் தலைமறைவாகலாம். ஆனால், என்னை போலீஸ் தேடினால், நான் தலைமறைவாகக் கூடாது’ என்று சொன்னாராம் ஜெ.அன்பழகன். அதற்கு கருணாநிதி தனது பேச்சில் எந்த விளக்கமும் சொல்லவில்லை!''

''ம்!''

''திருச்சி சிவாவின் பேச்சு காங்கிரஸுக்கு எதிரான உஷ்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. 'மலையில் கஷ்டப்பட்டு ஏறுகிறோம். தூக்க முடியாத காங்கிரஸ் மூட்டை வேறு நம்முடைய தோளில் இருக்கிறது. அதை இறக்கி வைப்பதுதான் நல்லது’ என்றாராம் சிவா. இவரது கருத்தை கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜனும் வழிமொழிந்திருக்கிறார். 'காங்கிரஸ் கூட்டணி வேண்டாம்’ என்பது இவரது கருத்து. இதுபற்றியும் கருணாநிதி அந்தக் கூட்டத்தில் கருத்துச் சொல்லவில்லை. ஆனால், மீடியாக்களை சந்தித்தவர், காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டார்!''

''முதல் தடவையாக கிரானைட் பற்றி கருத்துச் சொல்லி விட்டாரே கருணாநிதி?''

''ம்! அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த விஷயங்களையும் சேர்த்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கருணாநிதி சொல்லி இருக்கிறார். இது சம்பந்தமான வழக்குதான் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணையில் இருக்கிறதே. அதன் தீர்ப்பு வந்த பிறகு அது பற்றிப் பேசலாம்!'' என்ற கழுகார்... அடுத்துச் சொன்னதும் கிரானைட் மேட்டர்தான். ''கிரானைட் கில்லாடிகளுக்கு சாமரம் வீசியதாக மதுரையின் முன்னாள் கலெக்டர் மதிவாணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது விஜிலென்ஸ். இந்தநிலையில், அவரைத் தொழில் துறை இணைச் செயலாளராக நியமித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருப்பதை கடந்த முறையே சொன்னேன். தொழில்துறை இணைச் செயலாளரின் கட்டுப்பாட்டில்தான் கிரானைட் குவாரி விவகாரங்கள் வருகின்றன. அந்தப் பொறுப்பில் மதிவாணன் உட்கார்ந்தது, யாருக்கு வருத்தம் கொடுத்துள்ளதோ இல்லையோ, இந்த விவகாரத்தை டீல் செய்து வரும் இப்போதைய மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவை வருத்தப்பட வைத்துள்ளதாம். கிரானைட் விசாரணைகள் தொடங்கியதில் இருந்து மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும் எஸ்.பி. பாலகிருஷ்ணனும் தினமும் நான்கு மணி நேரத்துக்கும் குறைவாகத்தான் தூங்குகிறார்கள். இந்தநிலையில், மதிவாணன் நியமனத்தில் இவர்கள் இருவருமே டோட்டல் அப்செட். 'மதிவாணன் இந்தப் பொறுப்பில் நீடிப்பதாக இருந்தால், என்னை இங்கிருந்து மாற்றி விடுங்கள்’ என்று மேலிடத்தில் தனது வருத்தத்தைக் கொட்டினாராம் அன்சுல். இவருக்காகப் பரிந்து பேசிய இன்னும் சில ஐ.ஏ.எஸ்-களும், 'இப்படி எல்லாம் நடந்தால், நாங்கள் எப்படி நேர் மையின் பக்கம் நிற்பது?’ என்று ஆதங்கத்தைப் பதிவு செய்தார்களாம். 'எங்கோ தவறு நடந்திருக்கு. நீங்கள் வருத்தப்பட வேண்டாம். கூடிய விரைவில் மதிவாணன் மாற்றப்படுவார்’ என்று ஐ.ஏ.எஸ்-களுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்களாம் சிலர். மதிவாணன் விவகாரத்தை வேறுவிதமாகக் கொண்டாடும் கிரானைட் புள்ளிகள், 'எல்லாம் சரியாகிருச்சு. இனிமேல் நமக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் ஆஃப் ஆகிடும். அக்டோபர் 10 முதல் கிரானைட் குவாரிகள் வழக்கம்போல ரன் ஆகப்போகுது’ என்று டீக்கடை பிரசாரம் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்!''

''எப்படி வந்தது அவர்களுக்குத் தைரியம்?''

''முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவரின் பெயரைச் சொல்கிறார்கள் கிரானைட் பிசினஸில் இருப்பவர்கள். 'கிரானைட் மேட் டரில் சி.எம்-க்கு அவ்வளவாக இன்ட்ரஸ்ட் இல்லை’ என்று இந்த அதிகாரி சொல்கிறாராம். அதனால்தான் மதுரையில் நடவடிக்கையில் இருக்கும் அதிகாரிகளுக்கும் தயக்கமாம். 'இப்போது மதிவாணனை இந்த இடத்துக்குக் கொண்டுவந்ததும் அந்த அதிகாரிதான்’ என்றும் சொல்கிறார்கள். குழி பறிப்ப வர்களைக் கூடவே வைத் துக்கொண்டால் யாரைக் குறை சொல்வது?'' என்ற கேள்வியுடன் பறந்தார் கழுகார்!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி கே.குணசீலன்,

சொ.பாலசுப்பிரமணியன், வீ.ஆனந்தஜோதி

புதுக் காரணம் ஒன்று!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 29-ம் தேதி சசிகலா ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. வழக்கில் ஆதாரமாக உள்ள ஆவணங்களை 21 நாட்கள் சசிகலாவும் அவரது வக்கீல்களும் பார்வையிட சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. அதனால் இந்த முறை, 'சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நகல் கிடைக்கவில்லை. அதனால் சசிகலா ஆஜராகவில்லை’ என்று அவரது வக்கீல் சசிகலா ஆஜராகாததற்குப் புதிய காரணம் சொன்னார். 'இதோ அந்த நகல்’ என்று எடுத்துக் கொடுத்தார் அரசு வக்கீல். 'இது இணையத்தில் டவுன்லோடு செய்யப்பட்டது’ என்று சொல்லி, அதை ஏற்க சசிகலா வக்கீல் மறுத்துவிட்டார். இதைக் கவனித்த நீதிபதி சிரித்தபடியே வழக்கை அக்டோபர் 8-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். 'பெங்களூருவில் காவிரிப் பிரச்னை காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவை சார்ந்து இருக்கும் நான் கோர்ட்டுக்கு வருவது, என் உயிருக்கே ஆபத்து’ என்று அடுத்து சொல்லப்போகிறார்களாம்.

தேர்தல் கூட்டம்!

நாடார் பாதுகாப்புப் பேரவை நிறுவனர் வெங்கடேசப் பண்ணையார் என்கவுன்ட்டருக்குப் பிறகு, அவரது நினைவு நாளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் அணிவகுத்து வந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெங்கடேசப் பண்ணையாருக்கு பிறகு, அவரது சகோதரர் சுபாஷ் பண்ணையார் அந்தப் பொறுப்புக்கு வந்தார். ஒவ்வொரு ஆண்டும் குறைய ஆரம்பித்த கூட்டம், இந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது.

கடந்த 26-ம் தேதி, வெங்கடேசப் பண்ணையாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியை சேர்ந்த என்.ஆர்.தனபாலன், நாடார் மஹாஜன சங்கப் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி உள்ளிட்ட ஏராளமான வி.ஐ.பி-க்கள் கலந்து கொண்டனர். 'தேர்தல் வருதுல்ல... அதான் கூட்டம் கூடுது’ என்ற கமென்ட் கேட்டது.

''தமிழ்நாட்டுக்கும் செல்வேன்'

மத்திய அரசுக்குத் தந்த ஆதரவை வாபஸ் வாங்கிய பிறகு, அகில இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மம்தா. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து முதலில் கொல்கத்தாவில் ஊர்வலம் விட்டவர் அடுத்து, டெல்லிக்கு வந்தார். நாடாளுமன்றக் கட்டடம் அருகே ஜந்தர் மந்திரில் திரண்ட பிரமாண்ட கூட்டம் மம்தாவின் செல்வாக்கை டெல்லிக்கு உணர்த்தியது.

''இது ஏதோ ஒப்புக்கு நடக்கும் போராட்டம் அல்ல. இந்தப் போராட்டம் தொடரும். குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதும் மன்மோகன் சிங் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்.

அடுத்து 48 மணிநேரப் போராட்டத்தை டெல்லியில் நடத்துவேன். உ.பி. மாநிலம் சென்று லக்னோவில் போராட்டம் நடத்துவேன். வட இந்தியாவோடு நிற்க மாட்டேன்... தென்இந்தியாவுக்கும் செல்வேன். தமிழகம் சென்றும் போராடுவேன்'' என்று, அகில இந்தியா முழுக்க தான் செல்லப்போவதை அறிவித்தார் மம்தா. ''நான் டெல்லிக்கு வருவதே சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே, இனிமேல் 15 நாளைக்கு ஒரு முறை டெல்லிக்கு வருவேன்'' என்றும் அறிவித்தார் மம்தா.

அவரது பகிரங்க அறிவிப்பைப் பார்க்கும் போது, தமிழகத்துக்கும் விரைவில் அவர் வருவார் என்றே தெரிகிறது. அப்போது, ஜெயலலிதா அவருடன் கைகோப்பாரா என்பதே டெல்லி காங்கிரஸ் மேலிடத்தின் கவலையாக மாறி உள்ளது!

மணியனை நிறுத்தச் சொன்ன ஓ.பி.எஸ்.!

டெல்டா மாவட்டத்தில் செல்வாக்கான மனிதராக இருந்தவர் ஓ.எஸ்.மணியன். எம்.பி-யாக இருந்தாலும் அவரது செல்வாக்கு பணால் ஆகி விட்டது. சமீபத்தில், நாடாளுமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டத்துக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் டீம் மயிலாடுதுறை வந்தது. அந்தக் கூட்டத்தில் ஓ.எஸ்.மணியன் பேசிக்கொண்டு இருந்தார். 'தேவை இல்லாததை எல்லாம் எதுக்குப் பேசுறார்?’ என்று, வைத்தியலிங்கத்திடம் சொல்லி அவரது பேச்சை நிறுத்தச் சொன்னாராம் ஓ.பி.எஸ். தனக்கு இப்படி ஒரு ஷாக் வைக்கப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லையாம் அவரால். 'கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து எத்தனை மாவட்டக் கழகக் கூட்டங்களை கம்பீரமாக நடத்திய நம்ம எம்.பி-க்கா இந்த நிலை?’ என்று அதிர்ந்து போனார்களாம், அந்தப் பகுதி நிர்வாகிகள்.

எத்தனை பூஜ்யம் அபராதம்?

கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கையில் இறங்கி இருக்கும் கனிமவளத் துறை, அடுத்த கட்டமாக அபராதம் விதிக்கும் வேலைகளை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறதாம். பி.ஆர்.பி-யின் குவாரிகள் மூன்று உட்பட மொத்தம் 11 குவாரிகளுக்கு முதலில் நோட்டீஸ் போகப்போகிறது. இரண்டு எழுத்து பிரபல கம்பெனியின் தம்பிக்குச் சொந்தமான கிரானைட்டுக்கு மட்டும் அபராதத் தொகை 629 கோடியாம்!

''இதே ரீதியில் அபராதம் விதித்தால், பி.ஆர்.பி. கம்பெனிகள் மட்டுமே மூன்று லட்சம் கோடிக்கு மேல் அபராதம் செலுத்தணும்'' என்று கிறுகிறுக்க வைக்கிறார்கள் கனிமவளத் துறை அதிகாரிகள்!

அழகிப் போட்டியில் கூட்டுறவு!

சென்னையில் ஆண்டுதோறும் நடந்து வரும் 'மிஸ் அண்ட் மிசஸ் சென்னை’ அழகிப் போட்டியைப் போல, இந்த ஆண்டு முதல் 'மிஸ் அண்ட் மிசஸ் தமிழ்நாடு’ என்ற பெயரில் போட்டியை நடத்துகிறது ஒரு தனியார் நிறுவனம். இதற்காக, முதல் கட்டத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் நடந்து வருகின்றன. மதுரை ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. விவரம் புரியாமல் கலந்து கொண்டது போல் விழித்த அமைச்சரை, திடீரென மேடைக்கு அழைத்து அழகிகளுடன் கைகுலுக்கச் சொன் னார்களாம். கூச்சத்தில் நெளிந்தே விட்டாராம்.

ஒரு ஏடி.எஸ்.பி. - ஒரு டிரைவர்!

தன்னிடம் பணியாற்றிய டிரைவர் கோபண்ணாவை காதல் திருமணம் செய்துகொண்டார், காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி-யான உமையாள். 15 நாட்களுக்கு முன், ஒரு சேர மருத்துவ விடுப்பில் சென்ற இருவரும், வடபழனி முருகன் கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். தனது பணியை ராஜினாமா செய்து கோபண்ணா அனுப்பிய கடிதத்தை உயர் அதிகாரிகள் இன்னும் ஏற்கவில்லையாம்.

'திருமணம் என்பது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட விவகாரம். யாரைத் தேர்ந்து எடுப்பது என்பது எனக்கான உரிமை. அதில் யார் குறுக்கிடவும், கருத்துச் சொல்லவும் நான் விரும்பவில்லை’ என்கிறார் உமையாள் காட்டமாக!