சிவப்புத் துண்டில் பரவிய ரத்தக் கறை, பிறந்த நாள் விழா சர்ச்சைகள், ஜெயலலிதா வீடு தேடி வந்து வாழ்த்தியது, கருணாநிதி வாழ்த்த 'மறந்தது’... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் முன் எப்போதையும்விட அதிக சர்ச்சைகளுக்கு ஆளாகி இருக்கிறார். ''பேட்டி எல்லாம் வேண் டாமே!'' என்று தவிர்த்தவர் முன், அடம்பிடித்து அமர்ந்து எடுத்த பேட்டியில் இருந்து...

''அரசியலில் யாருக்கும் பணியாத முதல்வர் ஜெயலலிதா உங்கள் வீட்டுக்கே வந்து பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரே... அதன் பின்னணி என்ன? அப்போது என்ன பேசினார்?''

''அவர் பணிந்தார், குனிந்தார் போன்ற சொற்கள் வேண்டாம். அவர் எந்தக் காலத்திலும் யாரிடமும் பணிந்தோ, குனிந்தோ போனது இல்லை. வந்தார், வாழ்த்து சொன்னார், எழுந்து சென்றுவிட்டார். 'ஏன் என் வீட்டுக்கு வந்தார்’ என்று அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.''

''ஆனால், அரசியலைத் தாண்டி உங்களுடன் நட்பு பாராட்டும் கருணாநிதியை, நீங்கள் ஏன் உங்கள் பிறந்த நாள் விழாவுக்கு அழைக்கவில்லை?''

(சட்டெனக் குரலை உயர்த்துகிறார்) ''அழைத் தோம். 'அழைக்கவில்லை’ எனச் செய்தி பரப்பப்பட்டால், அது அப்பட்டமான பொய். கட்சியின் சார்பில் ஒருவராவது வாருங்கள் என அழைப்புதான் விடுக்க முடியும். கட்டாயம் வர வேண்டும் என்று யாருக்கும் உத்தரவிட முடியாது. அவர் விரும்பி இருந்தால் வாழ்த்துச் செய்தியாவது அனுப்பியிருக்கலாம். வயது காரணமாகவோ, வேலைகள் காரணமாகவோ தவிர்த்து இருக்கலாம். டெல்லியில் வேறு ஏதோ ஒரு லாபி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால், கலைஞர் என் பிள்ளைகள் மூவரின் திருமணங்களுக்கும் நேரில் வந்து வாழ்த்தியிருக்கிறார். அதையும் இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன். எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாததற்காக அவர் மீது எனக்குத் துளியும் கோபம் இல்லை.''

''பொதுவாக கம்யூனிஸ்ட்டுகள் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடுவது இல்லையே? ஏன், திடீரென்று திரா விடக் கலாசாரம் உங்களைத் தொற்றிக்கொண்டதா?''

''எங்கள் இயக்கத்தைப் பொறுத்தவரை தமிழ் நாட்டில் திடீரென தோழர் நல்லகண்ணுவுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடினார்கள். அந்த முடிவு எடுத்த குழுவில் நான் இல்லை. ஆனால், அதனை நிறைவேற்றும் குழுவில் நான் இருந்தேன். சிறப் பாகச் செய்து முடித்தேன். பின்னர் உடல்நலம் குறைவாக இருந்த தோழர் கோபுவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த வரிசையில் தான் என்னிடமும் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். ஆனால், தோழர்கள் பிடிவாதமாக நடத்திவிட்டார்கள். ஆனால், இப் போது கொள்கைரீதியாகவே முடிவு எடுத்துவிட்டோம். இனி, பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடப் போவது இல்லை!''

''எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பீர்களா?''

''கூட்டணி என்ற அர்த்தத்தில் யாருடனும் இதுவரை பேச்சு வார்த்தை நடத்தவில்லை!''

''தமிழ்நாட்டில் நீங்கள் ஏன் மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது?''

(சிரிக்கிறார்) ''தலைமை என்பது நாமாக சொல்லிக்கொள்வது அல்ல; பிறர் ஒப்புக்கொண்டு தருவது. நான் அதைக் கோரவும் இல்லை. அதற் கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை. மூன்றாவது அணியோ, ஏழாவது அணியோ... ஒரு மாற்று அரசியல் அணி நாட்டுக்கு அவசியம் வேண்டும். தமிழகத்தில் மூன்றாவது அணிகுறித்து சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை நடக்கும் போது பார்க்கலாம்!''

''கூடங்குளம் அணு மின் நிலைய விஷயத்தில் உறுதியான ஒரு நிலைப்பாடு எடுப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்?''

''அணு சக்தியை ஆக்க வேலைக்குப் பயன் படுத்தலாமா... வேண்டாமா என்பதுதான் இங்கு நம் விவாதமாக இருக்க வேண்டும்! அணு என்பது என்பது ஒரு சக்தி. அதை மின்சாரம் தயாரிக்கும் ஆக்க சக்தியாகப் பயன்படுத்துவதில் என்ன தவறு? கூடங்குளம் ஒரு பிரச்னையே அல்ல. அங்கு உள்ள மக்கள்தான் அதைப் பெரிதாக்குகிறார்கள். அணு சக்தியில் நல்லது, கெட்டது இரண்டுமே உண்டு. இது அதிநுட்ப விஞ்ஞானம் என்பதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். விபத்து என்பது எல்லா இடங்களிலுமே நிகழ வாய்ப்பு உண்டு. மிகப் பெரியதோ, சிறியதோ விபத்துகளை நம்மால் தவிர்க்க முடியாது. அணு உலையின் உள்ளே இருக்கும் தொழில்நுட்பங் களைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல் வெளியில் நின்று கொண்டு போராடுகிறேன் என்ற பெயரில் விஞ்ஞானிகளையும், வல்லுநர்களையும் பார்த்து, 'டேய் முட்டாளே... மூடு!’ என்று கூச்சலிடுவது முறையா? அணு சக்தியைப் பயன்படுத்தலாமா... வேண்டாமா என்பதுதான் நமக்கு விடுக்கப்பட்ட சவால். அப்படிப் பார்த்தால், நம் அனைவரின் முதல் எதிரியும் நேரு தான். அவர்தான் அமெரிக்காவில் இருந்து பாபாவை அழைத்து வந்து அணு ஆராய்ச்சிக்கு வித்திட்டார். அன்று யாராவது எதிர்த்தார்களா? அழிவுக்காக குண்டு வெடிப்புச் சோதனைகள் நிகழ்த்தப்படுவதை ஆதரிக்கலாம். 'இந்தியா வல்லரசாகிவிட்டது!’ எனக் கொக்கரிக்கலாம். ஆனால், அணுவில் இருந்து மின்சாரம் எடுத்தால் தவறா? நான் விஞ்ஞானிகளை நம்புகிறேன். கோடங்கிகளை நம்பவில்லை!''

''பூசி மெழுகாமல் சொல்லுங்கள்... கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டுமா... வேண்டாமா?''

(சத்தமாக...) ''கூடங்குளமோ... குருவிக் குளமோ... அணு மின் நிலையங்கள் வேண்டும். இப்போது போராடும் பாதிரியார்கள் ஜப்பானில் குண்டு போடும்போது என்ன செய்தார்கள்?''

''இந்த விஷயத்தில் உங்களுக்கும் தோழர் நல்லகண்ணு, அச்சுதானந்தன் போன்றோருக்கும் நிலைப்பாடு மாறு கிறதே!?''

''ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். நாம் ஒன்றும் சொல்ல முடியாது!''

''கூடங்குளம், முல்லைப் பெரியாறு போன்ற வெகுஜனப் போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகள் குரல் கொடுக்கவே பயப்படுகிறீர்களே! வெகுஜனப் போராட்டங்களில் முதல் குரலாக ஒலிப்பவை கம்யூனிஸ்ட்டுகளின் குரலாக இருந்தது எல்லாம் அந்தக் காலமா?''

''முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக முதல் ஆளாகப் போராட்டம் நடத்தியது நாங்கள்தான். நானே தலைமை தாங்கி நடத்தினேன். கூடங்குளம் விஷயம் வேறு. கும்ப மேளாவில்கூடத்தான் வெகுஜனம் கூடுகிறது? அந்த மாதிரி வெகுஜனக் கும்பலுக்குள் நான் போக மாட்டேன். பாதிரியார்களுக்கு மின்சாரத்தைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு மின்சாரம்தான் முக்கியம்!''

''சரி... கூடங்குளத்தை விடுங்கள்... மத்திய அரசை எதிர்த்துக்கூட ஊழல், விலைவாசி உயர்வு, அந்நிய முதலீடு போன்றவற்றை எதிர்த்துப் போராடவில்லையே நீங்கள்... ஏன்?''

''போராடினால் எல்லாம் கிடைத்துவிடுமா? போராடி மின்சாரத்தைக் கொண்டுவர முடியும் என்றால் சொல்லுங்கள். முதல் ஆளாக நிற்கிறேன். சிவகாசி பட்டாசு விபத்தின்போது போராடி ஆய்வுக் குழு கொண்டுவந்தது நாங்கள்தான். கிரானைட் குவாரி விஷயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததும் நாங்கள்தான்! எங்களுக்குப் போராடக் காரணம் வேண்டும். காரணங்கள் எதுவும் இல்லை. போராட அவசியம் இல்லை!''

''உங்கள் கட்சியைச் சேர்ந்த தளி ராமச்சந்திரன் மீது போலீஸ் விசாரணை நடக்கிறது. ஆனால், கட்சி சார்பில் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லையே... ஏன்?''

''எங்களுக்கு அகம்புறம் அனைத்தும் தெரியும். அது ஒன்றும் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு அல்ல. திணிக்கப்பட்ட ஒன்று. சந்திப்போம்... வெற்றி பெறுவோம்!''

''ஒரு கொலைக் குற்றவாளியை காப்பாற்ற ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள்?''

''ஒரு நபர் மீது அரசு கொலை வழக்கு சுமத்தி இருக்கிறது. புகார் உண்மையா இல்லையா என்பது நீதிமன்றத்தில்தான் உறுதியாகும். அதற் காகத்தான் காத்திருக்கிறோம். எங்களுக்கு கொலை வழக்குகள் ஒன்றும் புதிது இல்லை. நிறைய சந்தித்திருக்கிறோம்!''

''ஒன்றரை வருட ஜெயலலிதா ஆட்சியில் சுட்டிக்காட்டும் அளவுக்கு குறைகளே இல்லை என்கிறீர்களா?''

''எனக்கு ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!''

''ஒரு மாநிலங்கள் அவை சீட்டுக்காக ஜெயலலிதாவுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்க வேண்டுமா?''

(கடும் கோபத்துடன் குரல் உயர்த்துகிறார்...) ''யார் சீட்டு தருவதாகச் சொன்னார்கள்? யார் கேட்டுப் போனார்கள்? நான் கேட்கவும் இல்லை. அவர்கள் தருவதாகச் சொல்லவும் இல்லை. இந்தக் கேள்விக்கு நான் ஏதாவது பதில் கூறி முதல்வரின் கோபத்துக்கு ஆளாக வேண்டும்... அதுதானே உங்கள் விருப்பம்?''