வி.பரமசிவம், சென்னை-25.

விஜயகாந்த்தை இழுக்கும் முயற்சியில் ஜெயிக்கப்போவது காங்கிரஸா? தி.மு.க-வா?

காங்கிரஸா, தி.மு.க-வா என்று நீங்கள் பிரித்துக் கேட்பதைப் பார்த்தால், இருவரும் பிரிந்துவிடுவார்கள் என்று நினைக்கிறீர்கள். அத்தகைய சூழ்நிலை இது வரை இல்லை. இன்னும் சில மாதங்கள் ஆக வேண்டும்!

நெல்லை உல.காவலன், தளவாய்புரம்.

சமூக ஆர்வலர் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்?

சமூகத்தின் மீது ஆர்வமும் அக்கறையும் உள்ளவன் என்ற தகுதி மட்டுமே போதும். பொருள் ஆசை, பதவி மோகம், புகழ் மயக்கம் மூன்றும் இல்லாத மனம் வேண்டும். மற்றபடி வேறு எந்தத் தகுதியும் தேவை இல்லை!

கே.ஏ.நமசிவாயம், பெங்களூரூ.

கோயில்களில் அன்னதானம் அவசியமா?

தேவையின் பொருட்டு யாசிக்கும் மனிதனின் மனோபாவத்தில் இருந்து யோசியுங்கள்; அதன் அவசியம் புரியும்!

அ.கார்த்திகேயன், சேலம்.

கட்சியில் இருக்கும் சீனியர் தலைவர்கள் தங்களுக்கென்று ஆதரவாளர்கள் கூட்டம் வைத்துக்கொள்வது தவறா?

சபாநாயகராக இருந்த ஜெயக் குமாரை மனதில் வைத்துக்கொண்டு இப்படிக் கேள்வி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். கட்சியில் இருக்கும் சீனியர்கள், மந்திரிகள், மாவட்டச் செயலாளர்கள் மட்டும் அல்ல... வட்டம், கிளைக் கழகச் செயலாளர்கூட தனக்கென ஆதரவாளர் கூட்டம் வைத்துக்கொள்வது தவறல்ல. தலைவர்கள், தலைநகரத்தில் இருந்தாலும் இந்த இடைநிலை மனிதர்கள்தான் உள்ளூர்த் தலைவர்கள். ஆனால், இவர்கள் சாதாரண ஆசைகளில் இருக்கும்போது, தலைமை அதனைக் கண்டு கொள்வதில்லை. தன்னுடைய பதவியையே குறி வைக்கப்படும்போதுதான் சில சீனியர்களின் தலை சீவப்படுகிறது!

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

நாடாளுமன்ற இரு அவைகளைச் சேர்ந்த 375 எம்.பி-களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் 28 லட்ச ரூபாய் செலவில் அரசு செலவில் விருந்து பரிமாறியது பற்றி?

'ஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே’ - என்பது கிராமத்துப் பழமொழி. அரசாங்கக் காசை எடுத்து ஏப்பம் விட்டுள்ளார்கள். ஒரு எம்.பி-க்கான சாப்பாட்டு செலவு மட்டும் 7,721 ரூபாய். மக்களுக்குச் சிக்கனத்தையும் நிதி மேம்பாட்டையும் போதிக்கும் மாட்சிமை தங்கிய மனிதர்களின் செயல் இது!

எல்.உக்கிரபாண்டியன், நரிமேடு.

உடன்பிறப்புகளுக்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கும் என்ன வித்தியாசம்?

இருவருமே மயங்கியவர்கள். முன்னவர்கள் பேச்சாலும் பின்னவர்கள் நடிப்பாலும்!

எம்.சம்பத், வேலாயுதம்தம்பாளையம்.

நான்காவது முறையாக மின் வாரியத் தலைவரை மாற்றியும், மின் வெட்டுப் பிரச்னை தீர்ந்தபாடில்லையே?

மின்வாரியத் தலைவரை மாற்றிப் பயன் இல்லை. மின் பகிர்மான, மின் உற்பத்திக் கொள்கையை மாற்றியாக வேண்டும். 2016-ன் தேவையை, 2020-ம் ஆண்டின் தேவையை மனதில் வைத்து கொள்கை வகுக்கப்பட்டால் மட்டுமே வெற்றி சாத்தியம். இந்தப் போக்கில் இப்போது வந்துள்ள ஞானதேசிகனாவது யோசிக்க வேண்டும்!

அ.குலசேகரன், மதுரை.

'என் காலத்தில் இருந்த தமிழ்ப் பேராசிரியர்கள் போல் இப்போது இல்லை’ என்கிறார் என் ஆசிரியர். உண்மையா?

பேராசிரியர் சி.இலக்குவனார் இருந்தார். பேராசிரியர்களுக்கெல்லாம் பெரும் பேராசிரியர். அண்ணா அமெரிக்கா சென்றபோது யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கும் போப்பாண்ட வருக்கும் கொடுப்பதற்காக இலக்குவனாரின் தொல்காப்பிய மொழிபெயர்ப்பைத்தான் கொண்டு சென்றார். தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இலக்குவனார், மதுரை தியாகராயர் கல்லூரிப் பேராசிரியர். போராட்டத்தை இவர்தான் தூண்டிவிட்டார் என்று கைது செய்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது அரசு. 'இந்தி எதிர்ப்புப் போரை நிறுத்தும் விசை, மதுரைப் பேராசிரியரிடம் உள்ளது’ என்று அப்போது அண்ணாவே பகிரங்கமாக அறிவித்தார். தி.மு.க. ஆட்சி வந்ததும் மாநிலக் கல்லூரியில் இலக்குவனாரை அமர்த்தினார் அண்ணா.

அதன் பிறகும் அமைதியாகிவிடவில்லை இலக்குவனார். அன்றைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் ஆங்கிலத்துக்கு ஆதரவாக கோவை கருத்தரங்கில் பேச 'தமிழின் நாவலரா? ஆங்கிலத்தின் காவலரா?’ என்று பகிரங்கமாக எழுந்து கேட்டவர் அவர். 1960-களின் இறுதியிலும் 70-களின் தொடக்கத்திலும் 'பேராசிரியரின் மாணவர்’ என்று பலரும் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ளும் தகுதி படைத்தவராக இலக்குவனார் இருந்தார். தமிழ்ப் புலமையும், துணிச்சலும் ஒருங்கே பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் குறைந்து வருவதைச் சொல்லி இருப்பார் உங்கள் ஆசிரியர்!

குத்தாலம் ஜெ.நடராஜன், குத்தாலம்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை மறந்தும் எதிலும் பாராட்டிவிடக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டீர்களா? கருணாநிதியின் அரசியல் அனுபவம்தான் ஜெயலலிதாவின் வயது..!

கருணாநிதி பலமுறை பாராட்டப் பட்டுள்ளார். ஆனால் உங்களது கேள்வி, கருணாநிதியையே விமர்சிக்கக் கூடாது என்ற அர்த்தத்தில் உள்ளது!

கருணாநிதியின் அரசியல் அனுபவம்தான் ஜெயலலிதாவின் வயது என்பது உண்மை. அதற்காக 89 வயது கருணாநிதியை 89 வயதுக்காரர்தான் விமர்சிக்க வேண்டும் என்று நினைப்பது சரியா? இந்த விமர்சன அளவுகோலை, ராஜாஜியும் காமராஜரும் நினைத்திருந்தால்... 'மாணவ நேசன்’, 'முரசொலி’யில் 30 வயது கருணாநிதி, அவர்களை விமர்சனம் செய்திருக்க முடியுமா?

கண்ணீர்த் துளிகளில் பெரியார் மூழ்கி, அவரது கைத்தடி மட்டும் மிதக்கும் கார்ட்டூனை கருணாநிதி வரையும்போது பெரியாரின் வயதில் பாதிகூட இல்லை கருணாநிதி!

எஸ்.பி.விவேக், சேலம்.

இனியும் தப்ப முடியுமா... துரை தயாநிதியால்?

மனைவி, மச்சான்... விசாரணைக்கு அழைக்கப் பட்ட பிறகும் துரை தலைமறைவாய் இருப்பது அபத்தம்.

ஆளும் கட்சியாக இருக்கும்போது 'தில்லு துரை’யாக வலம் வருவதும், போலீஸ் தேடும்போது 'தள்ளு துரையாக’ பதுங்குவதும்... ம், அஞ்சா நெஞ்சனுக்கு இப்படி ஒரு பையனா?

சொல்வேந்தன், நெல்லை.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் நட்பின் இலக்கணத்துக்குப் பொருத்தமானவர்கள் யார்?

ஒவ்வொரு கட்சியும் வைத்திருக்கும் செய்தித் தொடர்பாளர்கள்தான்! கொள்கையில் சறுக்கினா லும் கொள்ளை அடித்தாலும் யாரையும் காட்டிக்கொடுக்காமல் மீடியாக்களின் முன்னால் சமாளிக்கும் அவர்கள்தானே நட்புத் திலகங்கள்!

தமிழினியன், விழுப்புரம்.

'ஓடி ஒளியும் முன்னாள் அமைச்சர்கள் உடனடியாக சரணடைய வேண்டும்’ என்று தி.மு.க. செயற்குழுவில் ஜெ.அன்பழகன் பேசியுள்ளாரே?

'அவருக்கென்ன சொல்லிவிட்டார்... அகப்பட்ட வன் நானல்லவோ’ என்று கடலூர் சிறைக்குள் இருந்து பொன்முடி பாடும் பாட்டு விழுப்புரத்தில் இருக்கும் உமக்குக் கேட்கவில்லையா?