கழுகார் உள்ளே நுழைந்ததும், வைகோ - நாஞ்சில் சம்பத் இருக்கும் புகைப்படத்தை எடுத்து வைக்கச் சொன்னார்.

தலையாட்டியதும் அவர் செய்தி மூட்டையை அவிழ்த்தார்.

''மறுமலர்ச்சி கட்சிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது. எந்த நேரமும் நாஞ்சில் சம்பத் நகரலாம் என்பதே அந்தக் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ள பலத்த சந்தேகம்!'' என்று சூடாக ஆரம்பித்தார் கழுகார்.

''கரூரில் மாநாடு முடித்து விட்டு அடுத்து சாஞ்சிக்கு ராஜபக்ஷேவுக்கு கறுப்புக்கொடி காட்ட வைகோ தனது கட்சியினருடன் 21 பேருந்துகளில் கிளம் பினார். கட்சியின் முக்கியஸ்தர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் நாஞ்சில் சம்பத் பங்கேற்கவில்லை. அந்த நேரத்தில் துபாய்க்குப் போய்விட்டார் சம்பத். 'ஒரு மாதத்துக்கு முன்னால் தேதி கொடுத்துவிட்ட நிகழ்ச்சி’ என்று சம்பத் சொல்லி விட்டாராம். ஆனால், இந்தத் தகவலை வைகோவிடம் நேரில் சொல் லவில்லை என்று கூறப்படுகிறது. இதில், வைகோவுக்கு வருத்தமாம். சாஞ்சி போராட்டத்தின்போது, கட்சிப் பேச்சாளர் அழகுசுந்தரம், 'சம்பத் இருந்தால் இந்த இடத்தில் நன்றாக வர்ணனை செய்வார்’ என்று சொன்னதாகவும், 'சம்பத் மட்டும்தான் அதைச்செய்ய வேண்டுமா? யார் வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று, வைகோ சொன்னதாகவும் தகவல் பரவியது. இருவருக்கும் மனவருத்தம் இருப்பதை இந்த சம்பவம்தான் வெளிப் படுத்தியது.''

''ம்!''

''மறுமலர்ச்சிக் கட்சியினரிடம் இதுபற்றி விசாரித்தபோது, 'நாஞ்சில் சம்பத் தேவைஇல்லாமல் சில விஷயங் களை மேடையில் பேசிவிடுகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட் சிக்கும் ஆதரவு இல்லை என்று கட்சி முடிவெடுத்தது. ஆனால் அவர், 'இலை கருகட்டும்... சூரியன் உதிக்கட்டும்’ என்று

தென்காசியில் பேசினார். இதனால் தலைமைக்குத்தான் தர்மசங்கடம் ஏற்பட்டது. மேலும், சீமான் பற்றி அவர்தான் தேவைஇல்லாமல் பேசினார். அதனால், இரண்டு கட்சியினரும் எதிரும் புதிருமாக மாறினர். அவரின் பேச்சு கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது’ என்று, சம்பத் மீது வருத்தப்பத்திரம் வாசிக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த ஒரு கட்சி நிர்வாகி கள் கூட்டத்தில் பேசிய வைகோ, 'யாரையும் நான் பிடித்துக்கொண்டு இல்லை. கட்சியை விட்டுப் போக நினைப்பவர்கள் போகலாம்’ என்று வைகோ சொன்னது சம்பத்தை மனதில் வைத்துத்தான் என்று ஒரு குரூப் அவரிடம் போட்டுக் கொடுத்துள்ளது.

'வைகோவிடம் தொடர்ந்து பேசிக் கொண்டு செயல்படுபவர்தான் சம்பத். ம.தி.மு.க. கூட்டம் தவிர மற்ற அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது வைகோவிடம் கேட்டுத்தான் செல்வார். வெளிநாட்டுப் பயணங்களையும் அனுமதி வாங்கித்தான் செல் வார். இப்போது, சாஞ்சிக்கு வர முடியாததற்குக் காரணம் ஒரு மாதத்துக்கு முன்பே துபாய் பயணம் திட்டமிடப்பட்டது என்பதால்தான். ஆனால், சம்பத்தை பிடிக்காத ஒரு குரூப் கட்சிக்குள் உருவாகி விட்டது. அவர்கள் வதந்திகளை அதிகமாக உருவாக்குகிறார்கள்’ என்று அந்தத் தரப்பு சொல்கிறது.''

''வருத்தம் பிரிவாக மாறுமோ?''

''அதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. சில நாட்களுக்கு முன், வைகோவை அவரது இல்லத்தில் நாஞ்சில் சம்பத் சந்தித் ததாகவும் இருவரும் மனம்விட்டுப் பேசியதாகவும் தனது மகள் மதிவதனியின் திருமணத்தை நடத்தி வைக்க வைகோவிடம் தேதி கேட்டதாகவும் அடுத்த ஆண்டு மே மாதம் திருமணத்தை நடத்தி வைக்க வைகோ ஒப்புக்கொண்டதாகவும் ஒரு தகவல் பரவி உள்ளது. விஷயம் விவகாரம் ஆகும்போது இதுபற்றி மீண்டும் பேசுவோம்'' என்று சப்ஜெக்ட் மாறினார் கழுகார்.

''12-வது முறையாக அமைச்சர்கள் குரூப் போட்டோ எடுத்திருக்கிறார்கள். ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் இத்தனை தடவை குரூப் போட்டோ எந்த ஆட்சியிலும் எடுக்கப்பட்டு இருக்காது.

சி.வி.சண்முகம் கல்தாவுக்குப் பிறகு மோகன் புதிய அமைச்சராகப் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த வைபவத்தில், சி.வி.சண்முகம் கலந்து கொள்ளவில்லை. அதே போல், முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரும் மிஸ்ஸிங். தன் பதவி பறிக்கப்பட்ட நேரத்தில்கூட, தோப்பு வெங்கடாசலம் பதவியேற்பில் கலந்து கொண்டார் செங்கோட்டையன். இப்படி பதவியேற்பு விழா நடக்கும் போதெல்லாம் அமைச் சர்கள் பகுதியில் முதல் ஸீட்டில் சபாநாயகர் ஜெயக்குமார் அமர்ந்திருப்பார். அவருக்கு அடுத்த இருக்கையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருப்பார். இந்தமுறை, அமைச்சர்கள் அமரும் பகுதியில் முன்கூட்டியே வந்து முதல் இருக்கையில் அமர்ந்திருந்தார் தனபால். இன்னும் சபாநாயகர் ஆகாத நிலையில் வெறும் வேட்பாளராக இருக்கும் அவர் அங்கே அமர்ந்தது ஆச்சர்யம். பிறகு, அமைச்சர்கள் எல்லோரும் வந்தபோது தனபால் இருக்கைக்குப் பக்கத்தில் வந்து வணக்கம் வைத் தபடியே அமர்ந்தார் பன்னீர்செல்வம்.''

''அவரது பணிவு அனைவரும் அறிந்தது தானே?''

''மோகன் பதவியேற்பு உறுதிமொழி வாசித்தபோது 'கடவுள் அறிய’ என்ற வார்த்தை வந்தபோது ஜெயலலிதாவை சிம்பாலிக்காகப் பார்த்து ஒரு வணக்கம் வைத்து உறுதி மொழியைத் தொடர்ந்தார். பிறகு, அமைச்சர்கள் எல் லோரும் குரூப் போட்டோ எடுக்க அடுத்த அறைக்குப் போனபோது முன்னாள் அமைச்சர் பொன்னையனும் அவர்களோடு உள்ளே நுழைய முயன்றார். 'அமைச் சர்கள் மட்டும்தான்’ என்று அதிகாரிகள் சொல்ல... திரும்பிப் போனார்.''

''மோகனுக்குப் பதிலாக புதிய கொறடா நியமிக்கப் பட்டு விட்டாரே?''

''ம்! மோகன் வகித்த கொறடா பதவி வைகைச் செல்வன் வசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இலக்கிய அணிச் செயலாளர், இளைஞர் பாசறைச் செயலாளர் என அடுத்தடுத்து பதவிகள் தந்த ஜெயலலிதா இப்போது கொறடா பதவியையும் தந்திருக்கிறார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தை ஸ்டாலின் மகன் உதயநிதி எடுத்தபோது அதைச் சட்டசபையில் குறிப்பிட்டுக் கிண்டல் அடித்தவர் வைகைச்செல்வன். 'மதுரையில் ஒரு கல். அது அழகிரி. சென்னையில் ஒரு கண்ணாடி. அது ஸ்டாலின். கல் வந்து கண்ணாடியை உடைக்குமா? என்று ஓகே ஓகே சொல்ல மக்கள் காத்துக்கிடக்கிறார்கள்’ என்று சட்டசபையில் வைகைச் செல்வன் பேசிய பேச்சையும் விஜயகாந்த்தை அவர் விளாசியதையும் அப்போது ஜெயலலிதா ரொம்பவே ரசித்தார். 'இணையதளத்தில் தமிழ்’ என்ற தலைப்பில் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கும் அவருடைய செல்போனில் உள்ள காலர் டியூன் என்ன தெரியுமா? 'நானாக நான் இல்லை தாயே.... நல்வாழ்வு தந்தாயே நீயே’!''

''அவருக்குப் பதவி கிடைத்ததற்கு உண்மையான காரணம் என்ன?''

''இளைஞர் பாசறைச் செயலாளர் பதவி கிடைத்ததில் இருந்து சர்ச்சையில் எதுவும் சிக்கவில்லை என்பதுதான் உண்மையான காரணம். துணை சபாநாயகராக யாரை நியமிக்கலாம் என்று ஜெயலலிதா முன்னிலையில் ஆலோசனை நடந்தது. அப்போதுதான் இவரது பெயர் பரிசீலனை செய்யப்பட்டதாம். 'நாடாளுமன்றத் தேர்தல் வருது. அவர் எல்லா ஊர்களிலும் போய் பேசணும். அதனால், துணை சபாநாயகராகப் போட்டு அவரை முடக்கக் கூடாது’ என்றாராம் முதல்வர். கொறடா பதவி காலியாக இருப்பதைச் சொல்லி 'நம்ம வைகைச்செல்வனை நியமிக்கலாம்’ என்றாராம் முதல்வர். இது, பலரையும் புருவம் உயர்த்திக் கவனிக்க வைத்துள்ளது.''

''ஓஹோ!''

''இளைஞர் காங்கிரஸ் விவகாரம் சிக்கலாகிக் கொண்டே வருகிறது. சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸில் இருந்து மாநிலத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கு வாக்கு அளிக்கத் தேர்வானவர்கள் மொத்தம் 836 பேர். இவர்களில் வாக்கு அளிக்க வந்தவர்கள் 766 பேர். இவர்களில் 355 பேர் யுவராஜாவுக்கு வாக்கு அளித்திருக்கிறார்கள். எஞ்சியதில் 166 பேர் ஆதி திராவிடர் மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு வாக்கு அளித்திருக்கிறார்களாம். கார்த்தி சிதம்பரத்தால் நிறுத்தப்பட்ட விஜய் இளஞ்செழியனுக்கு சிவகங்கையில் இருந்து விழுந்த ஓட்டுக்கள் 275 தானாம். இதனால், ஏகத்துக்கு கடுப்பாகிக் கிடக்கிறாராம் கார்த்தி. 'சிதம்பரத்தின் சொந்த மாவட்டத்திலேயே கார்த்தியை மிஞ்சிட்டோம்ல’ என்று மார் தட்டுகிறது வாசன் கோஷ்டி. கடந்த 6-ம் தேதி, சிவகங்கையில் இளை ஞர் காங்கிரஸின் புதிய நிர்வாகிகளை அழைத்து மீட்டிங் போட்ட கார்த்தி, 'நான் எங்க அப்பா மாதிரி இருக்க மாட்டேன். இங்கே இருந்துக்கிட்டே எங்களுக்கு எதிரா ஓட்டுப்போட்ட கறுப்பு ஆடுகளை எல்லாம் களை எடுக்காமல் விட மாட்டேன்’ என்று பகிரங்கமாகவே எச்சரித் தாராம்.''

''சரிதான்.''

''ரொம்ப நாளாக செய்தியில் அடிபடாமல் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், கடந்த 8-ம் தேதி ரிஷிவந்தியம் வந்தார். பகண்டை கூட் ரோட்டில் இலவச கம்ப்யூட்டர் சென்டர்களைத் திறந்து வைப்பதற்காக வந்தவர் அதிரடி அறிவிப்பு ஒன்றை சர்வசாதாரணமாகச் சொல்லிச் சென்றார். 'மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. பற்றிச் சொல்லவே வேண்டியது இல்லை. அதேபோல் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் பல்வேறு ஊழல்களில் சிக்கித் தவிக்கிறது. நாங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி வைப்பேன். ஏற்கெனவே ஒரு கட்சியில் கூட்டணி வைத்துப் பட்டபாடு போதும். அதற்கான பாடத்தை நான் கற்றுக்கொண்டேன்’ என உணர்ச்சி பொங்கப் பேசினார்.''

''அப்புறம்?''

''கேப்டன் என்ன சொல்கிறார் என்று மக்கள் புரிந்து கொள்வதற்கு முன், வேறு சப்ஜெக்ட்டைப் பேச ஆரம்பித்து விட்டார் விஜயகாந்த். 'தனித்துப் போட்டியிட்டு அ.தி.மு.க. வாக்குகளைப் பிரிக்க வேண்டும்’ என்பது விஜயகாந்த்தின் திட்டமாம்.''

''தி.மு.க-வும் காங்கிரஸும் அவருக்கு வலை வீசுவதாகச் சொன்னார்களே?''

''உண்மைதான். காங்கிரஸைவிட தி.மு.க-வில் ஸ்டாலின் தரப்பு இதில் தீவிரமாக இருக்கிறது'' என்று சொல்லி விட்டுப் பறந்தார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன்

''என்ன சொல்லப்போகிறார் சசிகலா?'

'ஆவணங்களைப் பார்க்க வேண்டும்' என்று, சசிகலா போட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, பெங்களூரு கோர்ட்டும் ஏற்றுக் கொண்டது. கடந்த 8-ம் தேதி, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்த 21 நாட்களில் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொள் ளாமல், வேலை நாட்களை மட்டும் கணக்கில் கொண்டு எங்களுக்கு ஐந்து ஐந்து நாட்களாக நவம்பர் 9-ம் தேதி வரை ஆவணங்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டும்’ என்றார் சசிகலாவின் வழக்கறிஞர்.

அதைக் கடுமையாக ஆட்சேபித்த அரசுத் தரப்பு ஜூனியர் வக்கீல் சந்தேஷ் சவுட்டா, 'இதெல்லாமே இழுத்தடிப்புதான். சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்ட 21 நாட்கள் என்பது, தொடர்ச்சியாகப் பார்க்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான்’ என்று கடுமையாக ஆட்சேபித்தார். அதன்பிறகு, ஒரு மணி நேர இடைவேளைக்குப் பிறகு தீர்ப்பு வழங்கினார் இடைக்கால சிறப்பு நீதிபதி சோமராஜூ. 'வரும் 8-ம் தேதியில் இருந்து அக்டோபர் 29-ம் தேதி வரை தொடர்ச்சியாக 21 நாட்கள் ஸ்பெஷல் கோர்ட்டில் உள்ள ஆவணங்களைப் பார்வையிடலாம். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் தரப்பில் இருந்து தலா மூன்று வக்கீல்களும், ஆடிட்டர் ஒருவரும், ஸ்பெஷல் கோர்ட் துணைப் பதிவாளர் முன்னிலையில் பார்வையிடலாம். ஆவணங்களை சரிபார்த்த அடுத்தநாளே சசிகலாவிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313-ன் படி விளக்கங்கள் பெறப்படும்’ என்று கூறி வழக்கை அக்டோபர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

'அடுத்து என்ன காரணத்தைச் சொல்லி சசிகலா வழக்கை இழுத்தடிக்கப் போகிறாரோ?’ என்று, தனது ஜூனியர்களிடம் சொல்லிக்கொண்டே சந்தேஷ் சவுட்டா, கோர்ட்டை விட்டு வெளியேறினார்.

மறக்கப்பட்ட வெங்கடாசலம்!

முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர், எம்.ஜி.ஆர். மன்றத்தில் மாநில அளவில் பொறுப்பு என்றெல்லாம் 40 வருடங்களாக கட்சியில் இருந்த ஆலங்குடி வெங்கடாசலம் படுகொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. அக்டோபர் 7-ம் தேதி நடந்த இரண்டாவது நினைவு நாள் நிகழ்ச்சியில், அவரது விசுவாசிகள் ஊர்வலமாகச் சென்று, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கட்சியின் உள்ளூர்ப் பிரமுகர்கள் மட்டுமே ஆஜர். மாவட்டச் செயலாளரோ, அமைச்சர்களோ வரவில்லை. இவர்களுக்கு முட்டுக்கட்டை போட்டது இப்போதைய ஆலங்குடி தொகுதியின் எம்.எல்.ஏ-வான கு.ப.கிருஷ்ணன்தான் என்று வெங்கடாசலத்தின் குடும்பத்தினர் ஆவேசப்படுகிறார்கள்.